லா நினாவினால் பறவை காய்ச்சல் பரவுகின்றனவா ?

லா நினா என்பது மத்தய கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பகுதியில் ஏற்படும் குறைந்த வளிமண்டல அழுத்தத்தினால் கடல் குளிர்ந்து ( 3–5 °) ஐந்து மாதங்களாக இருக்கும் http://en.wikipedia.org/wiki/La_nina என்று கூறப்படுகிறது. லா நினா நிகழ்வுகள் பறவை காய்ச்சலை உருவாக்க காரணமாக இருக்குலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிகின்றன . கடந்த நான்கு பறவை காய்ச்சல் ( ஸ்பானிஷ் ப்ளு – 1918, the ஆசியான் ஃப்ளு – 1957, ஹாங் காங் ஃப்ளு -1958 மற்றும் ஸ்வைன் ஃப்ளு -2009 – தொற்று ) லா நினா நிகழ்வுக்கு பின்பு நடந்து உள்ளன. Satellite thermal image அமெரிக்காவை சேர்ந்த தேசிய அறிவியல் கல்வி நிறுவனத்தின்(Proceedings of the National Academy of Sciences (PNAS),) வெளியிடு ஓன்று லா நினா நிகழ்வு சமயங்களில் வலசை பறவைகள் தங்களது வலசை பாதையினை மாற்றி கொள்கின்றன என தெரிவிக்கிறது. ஆனால் மற்ற லா நினா நிகழ்வுகளில் இந்த மாதிரியான நோய் தொற்று ஏற்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

L

வஞ்சகத்தில் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கம்: வரலாற்று உண்மை

தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலபரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரிசா முதல் தமிழகம் வரை தென்பகுதியை 17ம் நூற்றாண்டின் போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முகமது அலிகான் வாலாஜா நவாப். இவர், பிரம்மாண்டமான அழகிய அரண்மனை ஒன்றை கட்ட விரும்பினார். அப்போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெரும்பகுதியை கட்டியவர் பால் பென்பீல்ட். அந்த காலத்தில் இவர் கட்டும் கட்டிடம், மிகவும் தரமானதாக கருதப்பட்டு வந்ததே இதற்கு காரணம். அரண்மனையை கட்ட செலவாகும் தொகையை, கட்டி முடித்த பிறகு வாலாஜா நவாப் கொடுத்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரண்மனை கட்டிடப் பணிகள் 1760ல் தொடங்கப்பட்டு 1768ல் முடிக்கப்பட்டது.

சுமார் 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், சென்னை பல்கலைக்கழகம், செனட் பில்டிங், சென்னை மாநிலக் கல்லூரி, எழிலகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் ஆகியவை அடங்கும். அரண்மனையின் அன்றைய சமையல் கூடமாக இருந்ததுதான், இன்றைய திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்.

அரண்மனையை கட்டி முடிக்க செலாவான தொகையைக் காட்டிலும், பல மடங்கு அதிக தொகையை வாலாஜா நவாப்பிடம் பால் பென்பீல்ட் தெரிவித்தார். அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன வாலாஜா நவாப், இவ்வளவு தொகையை தன்னால் கட்ட இயலாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தீட்டிய திட்டத்தின்படி, வாலாஜா நவாபிடம் இருந்த நிலப்பரப்பை அபகரிக்க, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரண்மனைக்கு செலவான தொகைக்கு ஈடாக, வாலாஜா நவாபின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், பால் பென்பீல்ட் ஊழல் செய்து விட்டதாக, அவர் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, 225 மில்லியன் டாலர் தொகைக்கு கட்டப்பட்ட அரண்மனை கட்டிடங்களை 400 மில்லியன் டாலர் என்று கூறியதாக, பால் பென்பீல்ட் மீது குற்றச்சாட்டை வைத்து, ஒரு நாடகத்தை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றினர். இதன் பிறகு வாலாஜா நவாப் உயிர் வாழும் வரை அந்த அரண்மனையை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர், அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டதுதான் அமீர் மஹால்.

அரண்மனை கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஊழலின் தொடக்கம் தான், இந்தியாவில் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியம் காலூன்ற காரணமாகி விட்டது. இதற்கு துணைபோன ஊழல் பேர்வழி பால் பென்பீல்ட், தனது இறுதிக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து வாழ்ந்து செத்துப் போனார் என்பது வரலாறு.
நன்றி ; தினகரன்

Antiperspirants and Deodorants மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா

வியர்வை அதிகம் சுரப்பதை தடுக்கும் antiperspirants s, மற்றும் வேர்வை நாற்றத்தை மறைக்கும் deodorants கள் புற்று நோயை உருவாக்கும் எனும் சந்தேகம் எழுந்து உள்ளது. நாம் கைக்கு அடியில் அக்குளில் அடிக்கும் அங்கு உள்ள lymph nodes களை பாதிக்கிறது. lymph nodes பெரும்பாலும் மார்பாக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது.antiperspirants மற்றும் deodorants களில் உள்ள பாரபின்கள் தான் ஆபத்துக்கு காரணம் என சந்தேகம் எழுந்து உள்ளது. தொன்னூறு விழுக்காடு மார்பகபுற்று நோய் பெண்களை ஆய்வு செய்ததில் அந்து புற்று செல்களில் பாரபின்கள் இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனாலும் deodorants கள் உபயோகிக்காத பெண்களிடமும் பராபின்கள் இருந்தன. பராபின் உணவை பாதுகாக்க பயன்படும் இராசயன பொருளாக இருப்பதால் அவ்வாறு ட்யொடரண்ட உபயோகிக்காத பெண்களின் புற்று செல்களிலும் பாரபின் இருக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் methylparaben, ethylparaben, propylparaben, or butylparaben. உள்ளன.வியர்வை அதிகம் சுரப்பதை தடுக்கும் antiperspirants s, மற்றும் வேர்வை நாற்றத்தை மறைக்கும் deodorants கள் புற்று நோயை உருவாக்கும் என்பது சரிவர மெய்ப்பிக்க படவில்லை என்றாலும் புற்றுசெல்களில் பராபின் இருக்கின்றது என்பது உண்மை என Journal of Applied Toxicology, தெரிவிக்கிறது

இந்தியாவின் மீது ரஷ்ய விண்கலம் விழும் அபாயம்

.
ரஷ்யாவால் அனுப்பட்டு தோல்வி அடைந்த ஒரு விண்கலம் ஓன்று வரும் சனிகிழமை முதல் திங்கள் கிழமைக்குள் இந்து மாகடலில் விழும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது மக்கள் அதிகம் உள்ள பகுதியில் விழாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வியலாது . இந்த கலம் 51 .4 வடக்கு 51 . 4 தெற்கு இடையில் உள்ள நில பகுதியில் விழும் என்றும் சொல்லுகிறார்கள் . அதன் எடை பதினான்கு டன்னுக்கு மேல் உள்ளது. அந்த எடையில் பெருபகுதி பன்னிரண்டு டன் விஷத்தன்மை உள்ள எரிபொருளாகும் .இந்த எரிபொருள் முழுவதும் பூமிக்கு நூறு கிலோமீட்டர் தூரத்தில் அந்த கலம் நெருங்கும் போது எரிந்து காலி ஆகிவிடும் என்றும் அதனால் ஆபத்து இல்லை என்று சொல்லுகிறார்கள் . மேலும் சிறிய அளவு உள்ள கோபால்ட் -57 ஆல் எந்த ஆபத்தும் இல்லை என்றும் சொல்லுகிறார்கள் .

உறவுகளின் மரணத்தால் ஏற்படும் ………..

உயிருக்கு உயிரான நமது உறவுகளின் மரணம் பெரிய சோகமான நிகழ்வு ஆகும். அவர்களின் மரணம் நம்மை குறிப்பாக நமது இதயத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை பற்றி தற்போது ஆய்வு மேற்கொள்ளபட்டது .
சர்குலஷன் என்ற பத்திரிக்கையில் இதைப்பற்றி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
உறவுகளின் மரணத்தை சந்திக்காதவர்களை விட உறவுகளின் மரணத்தை சந்தித்தவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு மரணம் நிகழ்ந்த நாளைக்கு அடுத்த நாள் மாரடைப்பு வர இருபத்தி ஒரு மடங்கு வாய்ப்பு உள்ளது .அடுத்த ஒரு வாரத்துக்குள் மாரடைப்பு வர ஆறு மடங்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மாதத்துக்கு பின் ஓரளவு அந்த துயரத்தில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.எனவே மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைய தொடங்குகிறது.

உயிருக்கு உயிரானவர்களை இழந்த சோகம் நமது மூளையையும் உடலையும் பெரிதும் பாதிக்கிறது . இரத்த நாளங்களில் உள்ள ரசயானத்தை மாற்றி இரத்தத்தை உறைய வைத்து இரத்த ஓட்டத்தின் அழுத்தத்தை மாற்றி விடுகிறது. இதனால் ஏற்படும் அழுத்த மாற்றத்தால் மாரடைப்பு வருகிறது . மேலும் சோகத்தால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுகிறது உ.ம்
சாப்பிட வேண்டிய மருந்துகளை எடுக்காமல் இருப்பது . சாப்பிடாமல் இருப்பது, போன்றவை .Mostofsky என்ற ஆராய்ச்சியாளர் சமூகமும் மருத்துவர்களும் எப்படி உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களின் இதயத்தை பாதிக்கும் சோகத்தில் இருந்து மீட்பது என்பதை பற்றி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார் .
அந்த காலத்திலேயே இதை எல்லாம் தெரிந்த நமது முன்னோர்கள் இறந்த வீட்டில் பதினாறு நாட்கள் உறவுகள் இருந்து விசேஷம் வாய்த்த பின்பு தங்களது அன்றாட வேலைக்கு திரும்ப வைக்கும் நடைமுறையை வைத்து இருந்தார்கள் . தற்போது இந்த அவசர உலகத்தில் .. உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களின் இதயத்தை உடல்நலத்தை பற்றி கவலை இல்லாமல் ஐந்தாம் நாளே விஷேசம் வைத்து எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க திரும்பி விடுகிறோம். நமது முன்னோர்கள் அறிவாளிகள் என்பதை அமெரிகாரன் வந்து சொன்னாதான் நாம் நம்புவோம் . கூடுதல் விபரங்களுக்கு http://healthland.time.com/2012/01/10/how-grief-can-break-your-heart/?iid=hl-main-lede

குழந்தைகளை தாக்கும் ஈய நச்சு

குழந்தைகளின் ஒரு டெசி லிட்டர் இரத்தத்தில் பத்து மைக்ரோ கிராம் ஈயம் இருந்தால் அந்த குழந்தை, ஈய நச்சு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என கருத வேண்டும் என்றும் அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது. ஈய நச்சு எவ்வாறு இரத்தத்தில் கலக்கிறது என்றால் மாசு அடைந்த காற்று, தண்ணீர் , மண் , உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் , வீடுகளில் அடிக்கப்படும் ஈயம் கலந்த பெயிண்ட் -ஆல் ஏற்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பழைய வீடுகளில் அடிக்கப்பட்டு உள்ள உதிரும் பெயிண்ட் சிதறல்கள் ஈய ஜன்னல் சட்டங்கள் ஆபத்தானவை .இந்த ஈய நச்சு இதயம் , சிறுகுடல், கிட்னி , பால் உறுப்புகள் நரம்பு மண்டலம் ஆகியவற்றில் நுழைகின்றன . இதனால் படிப்பில் கவனம்இன்மை , நடவடிக்கை கோளாறு ஏற்படுகிறது,. நோய் அறிகுறிகள் வயறு வலி, குழப்பம், தலைவலி, எரிச்சல் , , போன்றவை. அதிகமாக பாதிக்கபட்டால் கோமா, மரணம் நிச்சயம்.

தற்போது ஒரு டெசி லிட்டர் இரத்தத்தில் ஐந்து மைக்ரோ கிராம் ஈயம் இருந்தால் அந்த குழந்தை ஈய நச்சு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என கருத வேண்டும் என்று தெரிவிக்க பட்டு உள்ளது . அமெரிக்காவில் மில்லியன் குழந்தைகள் இவ்வாறு பாதிப்புக்கு
உள்ளாகி உள்ளார்கள்.இந்த அளவுக்கு குறைவாக இருந்தால் பரவாஇல்லை என்று அர்த்தம் இல்லை. ஈய நச்சு குறைந்த அளவு இருந்தாலும் ஆபத்து தான்.

இதனை தவிர்க்க ஈயத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்களை தவிர்ப்பது மற்றும் காலை உணவை தினமும் தவறாது உண்பதினால் குறைக்க முடியும்.

ஈய நச்சு பதிக்கப்பட்ட குழந்தைகளை அமெரிக்க அரசு கண்டறிந்து ஈய நச்சிலிர்ந்து காப்பற்றுவதற்க்கான வழி முறைகளை கற்று தருகிறது. நமது அரசு இந்த மாதிரியான நடவடிக்கையை எப்போது எடுக்கும் என்று யாருக்கு தெரியும்.

நேர்மையான மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சகாயம் இ.ஆ.ப க்கு லஞ்சம் ?

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சகாயம் இ.ஆ.ப அவர்களிடம் தங்களிடம் யாரவது லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது உண்டா என வினவிய போது, தன்னை இதுவரை யாரும் அவ்வாறு அணுகியது இல்லை என்றும். தான் லஞ்சம் வாங்காதவர் என்று தெரிந்து விட்டதால் அப்படி பட்டவர்கள் நெருங்க மாட்டார்கள் என்றும் ஆனால் ஒரு தடவை ஒரு ஆய்வுக்காக செல்லும் பொழுது அவருடைய காருக்கு முன் ,இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழியும் விடாமல் வளைந்து வளைந்து வண்டி ஒட்டி சென்றார்கள், மாவட்ட ஆட்சியர்க்கு அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருக்காது என யூகித்து அவருக்கு சந்தேகம் வந்து அவரது மகிழ் உந்தை விரைவாக ஒட்டி அவர்களை பிடிக்க செய்தார்.
அவர் நினைத்த மாதரியே அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. மேலும் அவர்கள் குடித்து இருந்தார்கள் . அவர்களை பிடித்து செல்ல சொல்லியதும் , அவர்களில் ஒருவன் மாவட்ட ஆட்சி தலைவர் திரு சகாயம் அவர்களிடம் நூறு ரூபாயை கையில் திணித்து தங்களை விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளான், என்றும் தெரிவித்து சாதாரண மாணவர்கள் கூட லஞ்சம் கொடுத்தால் தப்பித்து விடலாம் என நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார் .

மார்கழி காதலி

மார்கழி பனி நீ வெளியே வரும்வரை
உன் வீட்டு வாசலில் காத்திருந்து
உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும்

வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு
மார்கழி பனி வெட்கி தலை கவிழும்

நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு
கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை
கலைத்து விடுவான்

நீ உன் வாசலில் இட்ட கோலம்
பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும்

நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக
சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில்
அழகாக அமர்ந்து அருள் வழங்கிறார்

நேற்று வைத்த சாணி பிள்ளையார்
தட்டப்பட்டு காய்கிறார் வெயிலில்
அவரை ஆற்றில் விடும் காணும் பொங்கலை
எதிர்நோக்கி பொருநை ஆறும்
உன் பாதம் தொட காத்திருக்கிறது

உங்க பிள்ளைகள் நன்றாக படிக்க புதிய வழிமுறை

விளையாட்டு பயற்சிகள் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக கல்வி கற்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

நெதர்லாந்து VU பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர்,அமிகா சிங், விளையாட்டுக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்பை அறிய 14 ஆய்வுகளை மேற்கொண்டார் . தினமும் உடற்பயிற்சி செய்யும் பிள்ளைகள் நன்றாக படிப்பதாகவும் , குறிப்பாக கணிதம், ஆங்கிலம் அடிப்படை பாடங்களை பள்ளியில் அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள் எனும் முடிவுக்கு வந்துள்ளார்

ஆய்வு தரவுகள் விளையாட்டு பயற்சி வகுப்புகளால் வாலிப மாணக்கர்கள் அதிக சக்தியுடனும் மற்றும் குறைவான நாட்களே உடல்நலகுறைவில் இருக்கிறார்கள் என்பதை மெய்பிக்கின்றன .

விளையாட்டு, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இதனால் முளையில் உள்ள கற்றல் மற்றும் கவனத்துக்காண செல்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது .மேலும் குழந்தைகளுக்கு நல்ல மனநிலை மற்றும் கல்வி சூழலை வழங்குகிறது . விளையாட்டு பயற்சி சில ஹார்மோன்களின் சுரப்பின் அளவை அதிகரிக்க ஊக்கியாக இருக்கிறது இது மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்த்து போராட சக்தியை கொடுக்கிறது..

குழந்தைகள், விளையாட்டில் பங்கு பெறுவதின் வாயிலாக, விளையாட்டு விதிகளை கற்றல், விதிகளுக்கு உட்பட்டு செயல் படுதல் போன்றவற்றால் சமூக சூழலில் சரியான முறையில் நடக்க கற்று கொள்ளுகிறார்கள் என ,” அமிகா சிங் சொல்கிறார் .மேலும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் வகுப்பறையில் விதிகளை நன்றாக கடைபிடிக்கின்றன. மேலும் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உடன் நன்றாக பழகுகிறார்கள் விளையாட்டு பயற்சி கல்வி செயல்திறனை அதிகரிப்பது குறுகிய கால நன்மையாக இருக்கிறது ; படிப்பில் பெறும் மதிப்பெண்களை விட அந்த மாணவன் நீண்ட கால நனமையாக நல்ல சமூக மற்றும் நடத்தையை முழு அளவில் பெறுகின்றான்

மேலும் படிக்கவும்: http://healthland.time.com/2012/01/03/let-the-kids-play-theyll-do-better-in-school/ #

பூமிக்கு இரண்டு நிலா ?

அமெரிக்கவின் (NASA) நிலவின் நீள் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஒரே மாதிரியான இரட்டையான கிரெயில் (Gravity Recovery and Internal Laboratory.) எனும் இரண்டு புதிய செயற்கைகோள்ககளை நிலவுக்கு அனுப்பி வைத்து வெற்றி கொண்டுள்ளது.. இந்த இரண்டு செயற்கை கோள்களும் நிலவின் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களை வரைபடமாக வரையும். இந்த தகவல்கள் நிலவு எப்படி உருவாகியது என்பது பற்றிய கோட்பாடுகளை நேர்த்தியாக்க உதவும் என சொல்லபடுகிறது .

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக மேலே வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்தன என்னும் கூற்று உண்மையா என்பதையும் கண்டுஅறிய இந்த ஈர்ப்பு விசை வரைபடம் உதவும்.கிரெயில் விண்கலம் 300kg எடை உள்ளது .இது கடந்த செப்டம்பர் மாதம் கேப் கார்னிவல், புளோரிடாவில் இருந்து செலுத்தப்பட்டது . இவைகள் சுழன்று சுழன்று சென்று நிலவின் நீள் வட்டசுற்று பாதையை அடைந்தன .

இந்த செயற்கை கோள்கள் நிலவை நீள்சுற்றுப்பாதையில் 11.5 மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வருகிறது . இந்த கோள்கள் படிபடியாக உயரம் குறைக்கப்பட்டு 55km உயரத்தில் சுற்றி வரும். நிலவின் மேற்பரப்பு முழுவதும் ஆய்வு செய்து ஈர்ப்பு விசையில் உள்ள சிறிய வேறுபாட்டை வரைபடமாக்கும் .

நிலவின் மேற்பரப்பு பெரிய மலைத்தொடர்கள் அல்லது ஆழமான பெரிய வட்ட பள்ளங்களை கொண்டு உள்ளது ., நிலவின் உட்பகுதியில் சில இடங்களில் அடர்த்தியான பாறைகளும் சில பகுதிகளில் அடர்த்தி குறைந்த பாறைகளும் கொண்டு ஒரு ஒழுங்கற்ற முறையில் உள்ளது.

இரண்டு செயற்கை கோள்களும் 100-200km இடைவெளியில் சுற்றி வருகின்றன . முதல் செயற்கைகோளில் நிலவின் முடுக்கத்தால் முடுக்கமின்மையால் ஏற்படும் மிக லேசான மாற்றங்கள் இந்த தொந்தரவுகள் இரண்டாவது செயற்கைக்கோள் கண்டறியும்.
சிலர் பூமியை ஒரு செவ்வாய்-அளவிலான பொருள் மோதியதால் ஏற்பட்ட பாதிப்பில் நிலா உருவாகியது என சொல்லுகிறார்கள் , இதற்கான பதில் மேற்பரப்பில் இல்லை என்று தெரிகிறது. பதில் உட்பகுதியில் பூட்டப்பட்டுள்ளது, மேலும் மிகவும் சிறிய நிலவு ஒரு குறைந்த வேகத்தில் நமது நிலவை தாக்கியதன் விளைவாக நிலவில் மேட்டுபகுதி உருவாகியது என்று கருத்து உள்ளது. இதனை கிரெயில் அனுப்பும் தகவல்களை கொண்டு ஆய்வு செய்கையில் மிக தெளிவாக கணிப்பு செய்யமுடியும் .

ஜூன் வரை 82 நாட்களுக்கு கிரெயில் செயற்கை கோள்கள் இந்த வேலையை செய்யும் .நிலவின் இருண்ட பகுதியில் கிரெயில் செயற்கை கோள்களால் சிறப்பாக செயல்பட முடிந்தால் 2012 இரண்டாவது அரை இரண்டாவது வரைபட வேலைக்கு இவைகள் உட்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.