இன்னொரு இன்னொரு

உன் வருகை
தொடர் மழை நாட்களுக்குப்பின்
எழும் ஞாயூறு

உன் பார்வை
என் மனஅழுக்கை
துவைத்து காயவைக்கும்
ஒளிக்கதிர் விச்சு

உன் அருகாமை
துன்ப பாம்புகளை
மீண்டும் புத்துக்குள்
விரட்டும்

நீ வாராததால்
சத்தமிட்ட தவளை
நண்பர்கள் கொட்டம்
அடங்கினர்

இன்னொரு
மழை நாளில்
இடை இடையே
குடை பிடித்தாவது
வந்து ஒளிமுகம் காட்டு

மறுவினைகள்

  1. ஆகா ஆகா – காதலியின் முக தரிசனத்திற்குத் தவிக்கும் காதலன் – கவிதை நன்று

  2. /இன்னொரு
    மழை நாளில்
    இடை இடையே
    குடை பிடித்தாவது
    வந்து ஒளிமுகம் காட்டு/
    அட…இது நல்லாருக்கே

    • நன்றி அருணா . தங்கள் வருகை மற்றும் பின்னூட்டங்களுக்கு எனது நன்றி


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: