bl-834365825கழுவேற்றம்
நான் சென்ற வாரம் திருச்செந்தூர் சென்றிருந்தேன். அப்பொழுது எனது உறவினர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட சென்று விட்டார்கள். நான் அவர்களின் செருப்புகளுக்கு காவல் காத்து வெளியே கடற்கரை ஓரம் உள்ள பழைய தேவர் மண்டபம் (தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது) அருகில் அமர்ந்து இருந்தேன்.
அப்போது அதன் அருகே இருக்கும் மண்டபத்து சிற்பங்களை பார்தது கொண்டே வரும் பொழுது, ஒரு அரிய சிற்பம் ஒன்று கண்ணில் பட்டது. அந்த காலத்தில் அடுத்த மதத்தவர்களை கழுவேற்றம் செய்த காட்சி உணர்ச்சி பூர்வமாக சிற்பி செதுக்கி உள்ளார் . அதனை நிழற்படம் எடுத்து உள்ளேன். தங்களது பார்வைக்காக அனுப்பி உள்ளேன்.
Nice shot.. from these we can know abt the past diversifications
எழுதியவர் Kavithaik Kaathalan நாள் டிசம்பர் 10, 2008
நேரம் 8:33 மு.பகல்
கழுவேற்றம் – ம்ம்ம்ம் – அக்காலத்தில் இயல்பான தண்டனையாக இருந்தது – ஆனால் இத்தண்டனை அடுத்த மதத்தவர்களுக்கு மத வெறியின் காரணமாக விதிக்கப்பட்டதா = தெரியவில்லை
எனினும் சிற்பம் அருமை
எழுதியவர் Cheena (சீனா ) நாள் அக்டோபர் 11, 2009
நேரம் 8:19 மு.பகல்