திருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை

டியுஷனுக்கு போற பிள்ளைகள்
ஜோடிஜோடியா நின்னு அரட்டையடிப்பது 
சகிக்கலை

அனிச்ச்யாக
பின்விளைவு அறியாமல்
வயசு பசங்க அப்படித்தான்
 
கேள்விகுறியினை தலைகீழாக
பூழு சொருகி மனம்
பிடிக்கும் கேள்வியாய்
நிங்கள் என்ன இப்படியா

 
புழுவை கடிக்காமல்
தப்பிக்க என்ன
குளத்திலா வாசம்
மீன் தொட்டியில்  
தேச்சு போடாத சட்டையும்
லுங்கியும் அணிந்த
நாங்கள்
காதலை கண்டு
ஓட்டுக்குள்
தலை இழுத்து கொள்ளும்
ஆமைகள்

கஷ்டபடுறவங்க பிள்ளையும்
விதிவிலக்கு இல்லை இதில்
தப்பிக்க வழியில்லாமல்
மாட்டி கொண்ட
பூனையாய் பாய்வதா
வாலை சுருட்டி பதுங்குவதா

நண்பன் காதல் செய்ய
அவன் பின்
நாங்கள்
சென்றதுண்டு என
சுழ்ன்று வந்த பந்தை
தடுத்து  ஆடினேன்
ஓட்டம் எடுக்காத
மட்டையாளனை
கேவலமாக
பார்ப்பது போல்
என்ன அடியாள் மாதரிய

என்னை பிடிச்சிருக்கா
என முதல் இரவில் கேட்ட
அப்பத்தமான
கேள்விஉடன்
ஆண் நிறுத்திவிடுகிறான்
பெண்ணோ
விடை தெரிந்த
கேள்விகளை   கேட்டு
விளக்கம் பெறுகிறாள்

இருபதாம் நூற்றாமாண்டு
பெண்ணுக்கு
திருமணம்
வெறும் ஒப்பந்தமில்லை
வாழ்க்கை

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: