கடநதகாலத்தில் உழல்வதை பிடிக்கவில்லைதான்
கடந்தகாலம் குப்பை என்பதை ஏற்பதற்கில்லை
ஒவ்வொரு கணம் புதிய நதியில் என்றாலும்
கால்பாவும நதியின் அடிபாகம் பழையதுதான்
கடநத காலம் ஒரு படிப்பினை
கடநத காலம் ஒரு அடிப்படை
கடநத காலம் ஒரு பயன்பாட்டு மென்பொருள்
கடநத காலம் ஒரு பாடம்
நேற்றைய தொடர்ச்சிதான் இன்று
இன்றைய தொடர்ச்சிதான் நாளை
கடநத கால பாடமில்லாமல்
நிகழ கால வாழ்க்கை இல்லை
நேற்றைய படிப்பினை கொண்டு
புதியதை ஆராய்ந்தால் பாரபட்சமானதாக இருக்கும்
ஆனாலும் ஒவ்வொரு தடவையும் தொட்டா
நெருப்பு சுடும் என்று சொல்ல வேண்டுமா
ஒளி வேகத்தில் சென்றால்
ப்ளுட்டோவில் இருந்து
நேற்றைய நிகழ்வை
நாளை காணலாம்
நேற்று இன்று நாளை
என்பதுஎல்லாம் கற்பிதமே
எல்லா கணமும் வாழ்வின் தொடர்ச்சி
வாழ்வோம் வாழவிடுவோம்