manimalar எழுதியவை | ஜனவரி 7, 2009

வல்லான் வகுத்தது வாய்க்கால்

தேசத்துக்கு தனி மனிதன்
துரோகம் செய்தால் தேச துரோகம்
தேசம் ஒரு இனத்துக்கு
துரோகம் செய்தால் என்ன சொல்வது

தனிநபர் மேல் வன்முறை செலுத்தினால்
விதி என போய்விடும் மனிதன்
இனமிது வன்முறை செலுத்தினால்
வீதியில் வந்து போராடுவான்

சீமை முள் மரமாய்
தீவிரவாதம்
எரித்தாலும்
வெட்டினாலும்
மீண்டும் மீண்டும்
தளிர்க்கும்

அடிப்படை காரணத்தை
பூண்டோட வேரறுப்பது போல்
களையாவிடின்
களையாது
தீவிரவாதம்

பிடித்திருந்தால்
போராளி
வெறுத்துவிட்டால்
தீவிரவாதி
என்ன நியாமோ

தீவிரவாதிகள்
பைத்தியகாரனின்
கையில் உள்ள துப்பாக்கி
என்னசெய்யும்
ஏது செய்யும்
பைத்தியத்துக்கும் தெரியாது
துப்பாக்கிக்கும் தெரியாது

தீவிரவாத பிரிவினைகளில்
உள் பிரிவினையை எதிர்ப்பதும்
அரசு வன்முறை போன்றதுதானே
வல்லான் வகுத்தது வாய்க்கால்
காலத்திற்கும்


மறுவினைகள்

  1. இன்று நேற்றல்ல ..செவிந்தியர்காலம் முதல் தொட்டே..(அதற்க்கு முந்தய வரலாறு பற்றி எந்த அறிவும்,அறிதலும் எனக்கு இல்லை)…வல்லான் வகுத்ததே வாய்க்கால்….ஆனாலும் கரை புரண்டு ஓடும் வாய்க்காலை தடுப்பது சிறிய அணை தான்.

    • நன்றி ஆண்ட்ரு சிறிய ஆணைகள் தடுத்தாலும் பெரும் வெள்ளத்தில் மடைதிறக்க வேண்டிஉள்ளது
      பிச்சுமணி


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்