சுப்ரமணியபுரம் இயக்குனர் தயாரிப்பு மற்றும் கமலஹாசன் பாராட்டு ஆகியவை நெல்லையில் சும்மா நேரம் கிடைத்தபோது பசங்க படம் பார்க்க நுழைய வைத்தது. பசங்களுக்கான படமாக முழுவதும இருக்கும் என்ற என் நினைப்பை படம் கொஞ்ச நேரத்தில் மாற்றி இழுத்து உள்ளே கவர்ந்து சென்றது. நடுத்தர வீட்டு பசங்க இருவரில் யார் பெரியவன் என வகுப்பு அறையில் தொடங்கும் சண்டை அவர்களின் வீடு வரை தொடர் கிறது. அந்த சண்டை இரு வீடு களுக்கு கிடையில் சண்டையாக பரிணாமிக்கிறது. இதனால் இரண்டு வீட்டு வாலிபங்களுக்கு இடையில் உள்ள காதல் பாதிப்புக்கு உள்ளாகிறது. கடைசியில் பசங்களுடைய சண்டை எப்படி முடிவுக்கு வருகிறது…… இது முடியுமா,,,,,,,,, அல்லது தொடருமா ……………. என்பது அழகாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. தொலை பேசி காதல் லந்து நன்றாக உள்ளது . மழை இயற்கையாக படபிடிப்பு செய்யப்பட்டு உள்ளது அருமை. போட்டோ கிராபி அருமை. இயக்குனர்க்கு இது முதல் படமா சுப்பர் . பாண்டியராஜன் பிரமாதம். குடும்ப தகராறை தீர்க்க இயக்குனர் சொல்லும் வழி கவிதை.
பாடல் சிறப்பாக இல்லை. பசங்கள் நன்றாக நடித்து உள்ளார்கள். ஸுப்ரமநியபுர இயக்குனர் தயாரிப்பு என்பதால் காத நாயகன் தலையை ஒரு மாத்ரி ஆட்டி கொண்டு தான் காதல் செய்ய வேண்டுமா என்ன. மொத்தத்தில் படம் நல்ல பாடம்.
பசங்களுடன் சென்று பார்க்கவும்.
sssuuuuuuuuppppppppppppppppppeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrr
எழுதியவர் பார்சா குமாரன் நாள் மே 11, 2009
நேரம் 9:23 பிற்பகல்