manimalar எழுதியவை | மே 31, 2009

இந்த கேவலமும் அவனுக்கே

இந்த கேவலமும் அவனுக்கே

ஐவருக்கும்
பொதுவானவளுக்கு
ஆடை தந்தாயே
அனைவருக்கும்
பொதுவானவளுக்கு
ஆடைதர ஏன் மறுந்தாய்

என்னை தெருவில்
துகில் உரித்ததும்
நீ தானோ
துணி கொடுக்காமல்
மறந்ததும்
நீ தானோ

அவையில் நடந்தாலும்
தெருவில் நடந்தாலும்
ஒன்றுதானே

யதோதாவுக்கு மட்டும்
கிருஷ்ணன்
எனக்கு மட்டும்
கண்ணன்
என்ன நியாயம்

எல்லா புகழும் இறைவக்கேனில்
இந்த கேவலமும் உனக்கே

(நேபாளத்தில் தெருவில் விலைமாது ஒருவர் ஆடைகலையப்பட்டு ஊர்வலமாக நடத்தி செனற சம்பவம் தொடர்பாக)


மறுவினைகள்

  1. வணக்கம் மணிமலர்

    ஆண்டவனை நம்பாமல்

    ஆவணனப்படுத்த வேண்டுமையா.

    மனதில் நிருத்தப்பட வேண்டிய ஆவணம்

    இராஜராஜன்


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்