அந்த செய்தியை
நம்ப மறுக்கிறது.
அது உண்மை
இல்லை எனபதற்கான
சான்றுகளை உறுதிபடுத்துகிறது
என் உள்ளம்
உன் வெற்றியை
உவந்த உள்ளம்
நீ தாக்காது
பின் வாங்கியபோது
பாயவென எண்ணியது
என் உள்ளம்
இறந்த தாயின் மார்பில்
பால் குடிக்கும் குழந்தையையும்
கொத்து குண்டுவீச்சில்
கருவில்கூட துகள் பாய்ந்ததும்
பதபதைத்தது
அண்டைநாட்டு கூட்டு
சக்கர வியூகத்தில்
மாட்டி கொண்டபோது
இக்கரையில்
கண் கலங்கி
கை பிசைந்தது
என் உள்ளம்
அனைத்து கட்சிகளின்
கூத்துகளை வெறுத்து
அன்றாட வாழ்க்கையில்
தொலைந்து போனாலும்
உயிர்பலிகளையும் கற்பழிப்புளையும்
செய்திகளில் கேட்டு
தொண்டை அடைக்கும்
என் உள்ளம்
மழை விட்டாலும்
வெள்ளம் வடியாதது போல்
முகாம்களில் கடுந்தண்டனை
கைதியாய் எம்சொந்தங்கள்
சோற்றுக்கும் மருந்துக்கும்
அலைவதும் திரிவதும்
பெண் பிள்ளைகள் காடையர்
காமபசிக்கு இரையாவதும்
காளைகள் காட்டிகொடுக்கபட்டு
வன்கொலை செய்யப்படுவதும்
கண்டும் கேட்டும்
இரத்தகண்ணீர் வடிக்கும்
என் உள்ளம்