manimalar எழுதியவை | அக்டோபர் 31, 2009

இன்னுமா நம்புவிங்க இப்படி

எங்க அலுவலகத்தில் வேலை செய்யும் கீழ்நிலை ஊழியர் ஒருவர். மீசை மழித்து அலுவலகம் வந்திருந்தார்.

என்னப்பா என்ன விஷயம்

. ஒன்னும் இல்லை சார். எங்க பெரியப்பா ஒருவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள ஊரில் இறந்து விட்டார் அதான் இப்படி என்றார்.

எத்தனை வயது இருக்கும் என்றதற்கு

93 வயசு சார் என்றார்.

அவ்வளவு வயசு வரை இருந்திருக்கிறரே என வியந்து இருவரும் பேசி விட்டு
என்ன செய்தது இறநது விட்டார்.

சார் “லக்கான்” நிழல் பட்டு ஒரு கைகால் விளங்காம போய் படுக்கையில் கிடந்து இறந்து விட்டார்.

என்னது லக்கான் அப்படி ஒரு பறவையா?.

பறவை இல்லை சார். அது பாம்பு சார்.

பாம்பு எங்கய்யா பறககும் என்று கேட்டதறகு

சார். நூறு, இருநூறு வயசான பாம்புக்கு இறக்கை முளைத்து பறக்கும். அதன் நிழல் யார் மேல் விழுந்தாலும் அவங்களுக்கு கை கால் விளங்காமல் போயிடும் என்றார்.

என்னய்யா இது புது கதையா இருக்கு எங்க ஊரில் வேற கதை சொல்லுவங்க வயசான பாம்பு நாகரத்தினத்தை கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும் அந்த நேரத்தில் சாணியை நாகரத்தினத்தின் மீது போட்டு பாம்பு போனவுடன் நாகரத்தினத்தை எடுப்பார்கள் என்று கதை விடு வானுக இங்க இப்படி ஒரு கதையா. உனக்கு யார் சொன்னா நீ பார்த்தயா என்று கேட்க

இல்லை சார் ஆனா உண்மை ஊரில எல்லாரும் சொல்லுவங்க இப்பவும் சொன்னங்க . அது மட்டும் இல்ல சார் இப்ப பர்வதமலையில் கோயிலில் இடி விழுந்ததே சார் அப்ப கூட நாலுபேர் இறந்து போனங்கள்ல அப்ப அந்த கோயில் கொடிமரத்தில் இடி விழுந்ததால் கொடி மர இரண்டாயிட்டாம்மே. அப்ப கொடி மரத்தல்ல இரண்டு மூனு கிலோ கணக்க தங்கமாயிட்டுனு தெரிஞ்சு நிறைய அரசியல்வாதிகள் பத்து இருவது கார்களில் வந்து தங்கத்தை அள்ளி சென்றார்களாம் சார். என்றார்.
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

யோவ் அப்படின்னா பேப்பர்ல்ல வந்து இருக்கனுமில்ல. வரவில்லையே.

இல்லை யார்க்கும் தெரியம கட்சிகாரங்க அமுக்கிடாங்களாம். என்று முழு நம்பிக்கையுடன் சொன்னார் .

அடப்பாவிகளா இன்னுமா நம்புவிங்க இப்படி. நம்மை மீட்க இனனொரு பெரியார் வந்தால் தான் முடியும் என்று நினைத்து கொண்டு வந்து சிரிப்பை அடக்கி கொண்டேன்


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்