அப்பாவை தினமும் எழுப்பும்
என் செல்போன் அழைப்புகள்
மறுமுனையில் அப்பாவின்
“என்ன குழந்தை “ பதில்
இரத்தணுக்களில் இன்னும்
அத்தனை பிள்ளைகளிலும்
என்மீது கொள்ளைபிரியம்
கொண்ட அப்பாவின்
இரவு வணக்கமாக
என் விசாரிப்புகள்
உன்னோடிட்ட சண்டையில்
என் குரலுக்கெங்கிய
அப்பாவின் கடைசிஇரவில்
நான் பேசாத சொற்கள்
என் தொண்டையில்
நஞசாக கரைந்து
உடலெல்லாம் பரவி
உன் உயிரணுக்களை
அனுமதிக்க மறுத்துவிட்டன
குற்ற உணர்வுகள்
உன்னை குதறி தின்றும்
உன் உதடுகளை கிழித்தும்
நடைதளர்ந்த உன் ஆண்மை
என்னிடம் வருந்தவில்லை
என்றாவதொரு நாள்
நீ மன்னிப்பு கேட்டாலும்
உன்னை மன்னிக்க வியலாதற்கு
என்னை மன்னித்துவிடு