manimalar எழுதியவை | நவம்பர் 6, 2009

காணும் கடவுள்கள்

தொட்டில் சேலையை விலக்கி
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்
மகளை பார்த்து கொண்டிருந்தேன்
தூங்கிற பிள்ளையை பார்க்காதே
என்றாள் அம்மா

திடீரென தூக்கத்தில் சிரித்தாள்
கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார்
என்றாள் அம்மா

திடுக்கென்று அழுது தூங்கினாள்
காத்து கருப்பு பயம் காட்டுகிதென
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை
வைத்தாள் அம்மா

மீண்டும் என் மகள் அழ
அடுக்களையிலிருந்து ஓடிவந்து
கச்சை பால் கொடுத்தாள்
என் மகளின் அம்மா


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்