பயிற்சி இடைவேளை அதிகமானதால் இருபதாண்டு ஆசை
உழைப்பாளர்சிலையிலிருந்து கலங்கரைவிளக்கம் வரை
வானம் மேகமுட்டமாய் வெயில் உறைக்கா  பகலன்று
அலைகளின் மொழியை மொழிபெயர்ககவியலாமல்
அலையோரம் நடக்கின்றேன்

குடும்பத்தோடு வந்த கூட்டங்கள் பாதுகாப்பாய் கரையோரம்
மாணவர் கூட்டம் தைரியமாய் குளித்து விளையாடுகிறது
மாணவியர்கள் அலைநீர் கால்கள் தொடா வண்ணம் ஓடுகிறது
படகு தரும் நிழல்களில் தாவணிவீடுகளில் காதல்லீலைகள்

திருஷ்டிதேங்காய் கரைக்கும் கடலுக்கும் பயணம்
இறந்தவர் வழிபாட்டு மாலைகள் கற்பூரங்கள் கரைகளில் தங்கல்
மீனவர்கள் வீசிய இறந்தமீன் கடல்புக முடியாமல் அலையில்

சோழி ஒன்று கண்டு வியந்து சேகரித்தேன்
சிப்பிகளில் ஒவியம் கவர சேகரித்தேன்
மீண்டும் உழைப்பாளர் சிலை வரை செல்கையில்
குதிரையின் நிழலில் குதிரைக்காரன் இளைப்பாறுகிறான்
காதலன்நிழலில் காதலிகள் சிலர் இளைப்பாறுகிறார்கள்

கடற்கரையில் சேகரித்த சோழி சிப்பிகளை செல்லமகளிடம் காண்பிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டதாக சண்டையிட்டாள்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

6 responses »

  1. madurai saravanan சொல்கிறார்:

    nalla pathivu. naanum unkal kavithai ulaippil ilaipaarivitu senren. vaalththukkal.

  2. Surendran சொல்கிறார்:

    நன்று. இன்னும் இரண்டு மூன்று சந்ததிகளை சேர்த்திருக்கலாம்.

  3. poongulali சொல்கிறார்:

    அருமையான கவிதை …கடற்கரையில் வெயில் உரைக்கா பகலன்று …அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s