விஜய் தொலை காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேர்வு சீசன் 2 ன் ரசிகனாக பார்தது வந்தேன். இவ்வளவு சின்ன வயதில இந்த பிள்ளைகளுக்குள் என்ன திறமை என வியந்து வாய்பிளந்து பார்ததேன. அதும் அந்த சிறிகாந்தின் திறமை கண்டு வியந்தேன். நாள் ஆக ஆக என்னமோ நெருடியது. போட்டியில் முதலில் குழந்தைகள் விலக்கப்படும் போது இருந்த வருத்தம் இப்போது இந்த குழந்தைகள் ஏன் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதற்கும் வருத்தம் ஏற்படுகிறது. முதலில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் சாதராணமான வீட்டில் அணிவித்து விடப்படும் ஆடைகளை அணிந்து வந்தனர். இப்போது ஸ்பான்சர் செய்யும் ஆடைகள் என்றுதான் நினைக்கிறேன் நடிகர்களுக்கு இனையான ஒப்பனையுடன வலம் வருகிறார்கள. நல்ல இருக்கு . ஆனால் இந்த தேர்வு முடியாத தொடர்கதை போல் நீண்டு கொண்டு போக காரணமென்ன. விழாக்காலங்களில் சிறப்புபர்டலகள் தெரிவு செய்து பாட வைப்பது. பின்பு நடிகர்களின் பிறந்த நாட்களில் அவர்கள் நடித்த படங்களின் பாடல்களை பாட செய்வது பின்பு ,வெளியாகும் திரைபடங்களை பிரமோட் செய்யும் விதமாக அந்த திரைப்பட பாடல்களை பாட வைப்பது என தங்களது தொ.கா வின் விளம்பரவருமானத்தை பெருக்க விஜய் டிவி நினணத்து விட்டதோ என தோன்றுகிறது. சின்ன குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் பாட ஒரு பாடலை ஒருநாள் முழுவதும் பாடி பாடி பார்ப்பது. புதிய ஆடை தைக்க அலைச்சல், ஸ்டுடியோவிற்கு செல்வது வருவது என அலைந்தால் அவர்கள் படிப்பு என்ன ஆவது. இப்போதைக்கு பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கும் விஜய் தொகாவிற்கும் பெருமையாக இருக்கலாம். இந்த மயக்கத்தில் படிக்காமல் போனால் அவர்களின் வருங்காலம் என்ன ஆகும் . ஒன்றிரண்டு பேர் பாடகர் ஆனாலும் மற்றவர்கள் என்ன ஆவார்கள. சிறு குழந்தைகளை வைத்து தொடர்ந்து விளம்பர நோக்கில் செயல்பட்டால் குழந்தை தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பானது ஆகாதா? சீனியர் பாடகர்களை வைத்து ஊர் ஊராய் சென்று நிகழ்ச்சி நடத்துவது பரவாயில்லை அவர்களை விஜய் தொகா நிகழ்ச்சியான காப்பி வித அனுவில் பாட சொலவது சரியான தாக இருக்கலாம் தமிழக செல்லக்குரல்களின் குரல்வலையினை படிக்கவிடாமல் நெறிக்கும் நிகழ்ச்சி தொடர வேண்டுமா என்பது தங்களது முடிவுக்கு

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

10 responses »

 1. ராமலக்ஷ்மி சொல்கிறார்:

  நல்ல பதிவு. ஒரு அளவோடு நிறுத்துதல் நலம். சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள்!

  இது குறித்த ஆதங்கமாய் 2008-ல் நான் பதிந்த “வேண்டுவது தளமா இல்லை சோர்வைத் தரும் களமா?” http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post_20.html

  • manimalar சொல்கிறார்:

   நன்றி ராமலட்சுமி .
   எனக்கு ரொம்ப நாளாக இதை எழுத வேண்டும் என்று தோணும் . பின் எதற்கு வீணாக அவரவர் பெற்றோர் விருப்பப்ட்டு செய்யும் போது நாம் என்ன வெளியாள் தானே என்று ஆம் உங்கள பதிவின் சுட்டியை தெரிவித்தால் தங்களது கருத்தை அறிவேன்

 2. அசோகன் சொல்கிறார்:

  உண்மையை உரைத்ததற்கு நன்றி…..அதை விட கொடுமை சென்ற வாரம் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று கூறி மாதிரி ரூபாய் நோட்டுக்கள் மழையாய் குழந்தைகளின் மேல் பொழிய செய்ததது கொடுமையின் உட்சகட்டம்…..

 3. maduraikaaran சொல்கிறார்:

  Nice…and True information.

 4. raj சொல்கிறார்:

  True. Not only the participants.But also the innocent viewers

  • manimalar சொல்கிறார்:

   ஆமாம் பைத்தியக்காரர்கள் மாதிரி அதை பார்த்து பரவசமாகி நம்ம பிள்ளைக்கு இந்த திறமைஇல்லையே என புழுங்கி நல்லவேளை இலலை என உணரவைத்துவிடும்

 5. reader சொல்கிறார்:

  well said.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s