சானியா பாக் வீரர் மாலிக்கை திருமணம் செய்தால் அவர் பாக்கிஸ்தான் நாட்டு மருமகள் ஆகிவிடுவார். மேலும் அந்த நாட்டு குடிமகள் ஆகிவிடுவார். எனவே ஒரு பாக்கிஸ்தானி எப்படி இந்தியாவிற்கு ஆட முடியும். மேலும் பாக் டென்னிஸ் மேலாளர் வேறு சானியா அந்நாட்டுக்காக டென்னிஸ் விளையாட வேண்டு மென்று சொல்லி இருக்கிறார். எனவே சானியாவிற்கு இந்தியாவின் உண்மையில் பற்று இருந்தால் இந்தியரை மணந்து கொள்ள வேண்டும் . பாக்கிஸ்தானியரை மணக்ககூடாது என சிவசேனாவின அதிகார பூர்வ செய்தி ஏடு சமன்னா தெரிவித்து உள்ளது. எரியிற தீயில் எண்ணை வார்ப்பது போல் பாக். டென்னிஸ் மேலாளர் மாலிக் திருமணத்திற்கு பிறகு சானியாவை பாக்கிஸ்தானுக்காக விளையாட கேட்பார் என சொல்லி யுள்ளார்.ஆயிஷா என்ற கைதராபாத் பெண் என்னை முதலில் விவாகரத்து பண்ணிய பிறகு தான் சானியாவை மணக்க வேண்டும் இல்லையென்றால் சானியாவின் திருமணம் செல்லாது. மாலிக்கோ வேறு ஒரு பெண்ணின் படத்தை காட்டி ஆயிஷா குடும்பத்தினர் தன்னை காதல் வலையில் விழ வைத்தார்கள். ஆயிஷா தற்போதைய நடவடிக்கை தொடர்பாக வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்து உள்ளார். இந்தியா மாலிக் குடும்பத்தாருக்கு விசா வழங்கி விட்டது. . ஒருத்தர் யாரை மணப்பது என்பது அவர் விருப்பமே ஒழிய கட்சிகள் ரசிகர்கள் தொலை காட்சிகள் எல்லாம் தங்கள் கருத்தை தெரிவிப்பது ரொம்ப கேவலமான போக்கை காட்டுகிறது. எது எப்படி இருந்தாலும்

திருமணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

9 responses »

  1. M.Mani சொல்கிறார்:

    யாரும் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். ஆனால் வேற்று நாட்டானை மணந்து கொண்டு எதற்காக இந்தியாவுக்கு நான் ணுஆடுவேன் என்று சொல்லவேண்டும்? இந்தியாவில் டென்னிஸ் ஆட வேறு யாரும் இல்லையா?
    ஏன் இந்துக்கள் என்றால் இப்படி படை திரட்டிக்கொண்டு வருகிறீர்கள்? அப்போதுதான் தங்களை முற்போக்கு வியாதி அல்லது பகுத்தறிவு வியாதி என்ற பெயர் கிடைக்கும் என்பதாலா?

  2. சீனு சொல்கிறார்:

    சிவ சேனை என்ன சொன்னால் உனக்கென? 😉

    • manimalar சொல்கிறார்:

      சிவசேனா தனிநபர் வாழ்க்கை நுழைய கூடாது . ஒரு கட்சியின் முடிவுகளை பொது மக்கள் விமர்சிக்க உரிமை உண்டு. தேசியம் பேசிகிட்டு பீகாரிகளையும் வடஇந்தியர்களையும் ஏன் தமிழர்களையம் விரட்டும் சிவசேனா சானியாவின் தேசிய உணாவை பற்றி பேச யோக்கிதை இல்லாதது உங்களுக்கு தெரியவிலலையா.

  3. மஞ்சூர் ராசா சொல்கிறார்:

    இந்திய கலாச்சாரத்தின் காவலர்கள் என சிவசேனா தனை நினைத்துக்கொண்டு அப்பப்ப இப்படி கூவிக்கொண்டிருக்கும்.

    யார் கேட்க போகிறார்கள்?

  4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    சானியா ஒரு பெண். அவர் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. எப்போதென்றால் அவர் சாதாரண குடிமகளாக இருக்கும் போது. ஆனால் இப்போது அவர் இந்திய வீராங்கனை. அயல் நாட்டினரை மணந்து கொண்டு, அந்த நாட்டிற்காக ஆடுவதே சிறந்தது.

    இல்லையென்றால் சோயிப் இந்தியராகட்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    • manimalar சொல்கிறார்:

      சோயிப் பாக்கிற்கு ஆடட்டும் சானியா இந்தியாவிற்கு ஆடட்டும். அதனால் ஏதாவது பிரச்சனை வந்தால் அப் பொழுது பார்தத கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s