நெல்லையில் நெல்லை சந்திப்பில் முதலில் பேரூந்து நிலையம் இருந்தது. அந்த நிலையத்துக்கு எல்லா பேரூந்துகளும் வந்து சென்றன. பின்பு பைபாஸ் சாலை நகருக்கு குறுக்கே வண்ணார்பேட்டையில் போடப்பட்ட உடன் வேய்ந்தான் குளத்தை ஆக்கிரமித்து தற்போதைய புது பேரூந்து நிலையம் கட்டபட்டு கடந்த சில ஆண்டுகளாக நெல்லை சந்திப்பு நெல்லை நகர மக்கள் பாளை பெருமாள்புரத்தில் உள்ள அந்த புது பேரூந்து நிலையம் சென்று வெளிஊருக்கு செல்ல பேரூந்து பிடிக்க செல்ல வேண்டியதாயிற்று. பிரச்சனை என்ன வென்றால் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து புது பேரூந்து நிலையத்துக்கு செல்ல தாழ்தள பேரூந்துகளை விட்டால் வேறு பேரூந்துகள் கிடையாது. அதில் 7 ரூபாய் கட்டணம் கொடுத்து தான் செல்ல வேண்டும். மற்ற குறைந்த கட்டண பேரூந்துகள் புது பேரூந்து நிலையம் வழியாக செல்வது இல்லை. இதனால் மக்கள் அதிக கட்டணம் கொடுத்த பயணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். வண்ணார்பேட்டை பைபாஸ் சந்திப்பிலிருந்து மானூர் செல்ல ரூ5 தான். அதுவும் சுமார் 15 -20 நீமிடங்களில் சென்று விடுகிறது. ஆனால் பக்கத்தில் உள்ள புது பேரூந்து நிலையம் செல்ல எல்லா தரப்பு மக்களும் ரூ 7 கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மககள் தள்ளபட்டு உள்ளார்கள். எனவே போக்குவரத்து கழகம் கைக்கிரவுண்டு செல்லும் சில வண்டிகளை பைபாஸ் வழியாக புது பேரூந்து நிலையம் சென்று அங்கிருந்து கைக்கிரவுண்டு சென்றால் சாதாரண கட்டணத்தில் எழை மக்கள் புது பேரூந்து நிலையம் செல்ல ஏதுவர்கும். இதை போல் மதுரையிலு்ம் மாட்டு தாவணி பேரூந்து நிலையம் செல்ல சாதாரண கட்டண பேரூந்து வசதி செய்து கொடுத்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் சில நகர மக்கள் புது பேரூந்து நிலையம் கட்ட அரசு விரும்பினாலும் வேண்டாம் நாங்கள் பழைய பேரூந்து நிலையத்தையே பயன் படுத்தி கொள்கிறோம் என்று சொல்லி விடுவார்கள்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. துபாய்ராஜா சொல்கிறார்:

    புதிய பேருந்து நிலையம் செல்லும் தென்காசி பேருந்துகளில் கூட குறைந்த கட்டணம் 4 ரூபாய் தான். நகராப் பேருந்துகளில் முன்னாடி 3 ரூபாய் இருந்தது.இந்த தடவை பார்த்தா 7 ரூபாய். ரொம்ப அநியாயம் தான். :((

    • manimalar சொல்கிறார்:

      நம்ம வாய் பொத்திகிட்டு அதிக காசு கொடுத்து போய்கிட்ட இருக்க வேண்டியாது தான். எதிர்கட்சிகள் தங்கள் பணியை ஒழுங்கா செய்த இந்த அநியாயம் நடக்காது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s