அங்காடித்தெரு படத்தை பற்றி நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்த போது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சி தஙகள் மனதை பாதித்தது என்று சொன்னார்கள். முதலாளிகள் சிலர் , ஒரு கடையின் முதலாளி படத்தில் காட்டியவாறு எல்லாவற்றையும் பார்த்து கொள்ள முடியாது  என்று வாதிட்டதாக கூறினார்கள். முதலாளிகள் இடையே பெரும் கோபத்தைஇப்படம்  ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்கள் இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று  மற்ற நண்பர்கள்  சொன்னார்கள்.  விருது கிடைப்பது பெரிது இல்லை . இந்த படத்தை பார்த்து ஒரு சில தொழிலாளர் ஆய்வாளர்கள் உண்மையாக மனசாட்சியோடு  உழைத்து நம்மூர் பிள்ளைகளுக்கு கொஞ்சம் வசதி செய்ய செய்தாலே அது பெரிய வெற்றி . வீட்டு வேலைக்கு பெண்பிள்ளைகளை வைத்து  இருப்பவர்கள் கொஞ்சம் இரக்கபபட்டு நடந்தாலும் வெற்றிதான். அதைவிட இப்படி  வயல்களில் பட்டி போட வாத்துகளை  பட்டியில் அடைப்பது   போல்  வேலை செய்பவர்களை  ஒரே அறையில் அடைக்கும் கடைக்காரர்களை தண்டித்து, போதுமான தங்கு இடவசதி செய்ய் கடைமுதலாளிகளை அரசு நிர்பந்தித்தாலே பெரும் வெற்றிதான் .

எங்கள் வீட்டு அருகே ஏழ்மையான குடும்பம் ஒன்றுவாடகை வீட்டில் குடியிருந்து  வருகிறது. அந்த அம்மா ரொம்ப அப்பாவி . அவரது கணவரோ எப்போதாவது வேலைக்கு  போவார். ஆனால் பெரிய முனிவ்ர் போல் அன்று சம்பாதித்த பணத்தை அன்றே செலவு செய்து விடுவார். நியாவிலைக்கடை ஒரு ரூபாய் அரிசிதான்  குழம்பு கூட வைக்க மாட்டார்கள். கஞ்சி வடித்து  மிளகாய் தூள் உப்பு போட்டு பிசைந்து  சாப்பிடுவார்கள். அவர்கள் வீட்டில்   போன புதன் கிழமை அவாகளது மகள் பெரிய மனுசியாகி விட  செலவுக்கு என்ன செய்வது என மத்தியானம் வரை அவர்கள் சும்மா இருந்துவிட்டார்கள்.விவரம் அறிந்த வீடடு உரிமையாளர் மனைவி மற்றும் அந்த வீட்டு வளவில் இருந்த மற்ற வாடகைக்கு குடியிருப்பவர்களும்  ஆளுக்கு 100 ரூபாய் போட்டு அந்த பெண்ணுக்கு தலைக்கு மஞ்ச தண்ணி ஊற்றி  செய்ய வேண்டி மற்ற சடங்குகளையும் செய்தார்கள்.

இந்த நிகழ்வுக்கு காரணம் வசந்த பாலன் தான் ஏனெனில் போனவாரம் தான் அந்த வீட்டுக்கார அம்மா மற்றும் சம்பந்த பட்ட பெண்கள் அங்காடித்தெரு பார்த்துவிட்டு வந்தார்கள். இவர்களின் மனதை மாற்றிய  அங்காடித்தெரு சாதித்து வி ட்டது எனத்தான் சொலல வேண்டும்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

  1. dharma சொல்கிறார்:

    /இந்த நிகழ்வுக்கு காரணம் வசந்த பாலன் தான் ஏனெனில் போனவாரம் தான் அந்த வீட்டுக்கார அம்மா மற்றும் சம்பந்த பட்ட பெண்கள் அங்காடித்தெரு பார்த்துவிட்டு வந்தார்கள்./

    அவர்கள் வேலையை விட்டு விட்டார்களா ? அல்லது வேலை இல் இருந்து விர ட்ட பட்டார்களா ?

  2. தொகுப்புகள் ... சொல்கிறார்:

    இந்த பதிவு என்ன சொல்கிறது (அல்லது)என்ன சாதித்து விட்டது…

    • manimalar சொல்கிறார்:

      ஐயா சின்ன மற்றத்தை சாதாரண மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது அல்லவா. எனக்கென்ன என்று இல்லாமல் இல்லாதவர்களுக்கு கூட்டு முயற்சியில் உதவி செய்ய வைத்து இருக்கிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s