அமெரிக்காவின் விமானப்படையினரால் கன்வெர்முனையிலிருந்து கமுக்கமாக இந்த மாதம் அட்லஸ் 5 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்பயணத்தின் நோக்கம் இன்னது தான என்பதை ஊகிப்பது அங்கு விண்பயணஆர்வலர்களிடம் விளையாட்டாக மாறிவிட்டது.

இந்த வித்தியாசமான பறவை பறக்க ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டு உள்ளது .ஆனால் இந்த பயணத்தின் உண்மையான பயனாளி யார் என்பது தெரியவில்லை என அமெரிக்கவிமானப்படைவரலாற்று ஆசிரியர் திரு. ட்வென்டே (Dwayne day) தெரிவித்து உள்ளார்.

அட்லஸ் 5, விண்கலம் 6000 கிலோகிராம் எடையும்,8 மீட்டர் உயரம் உடையது. X37B OTV விண்கலம் தடித்த குட்டையான இறக்கைகள் உள்ளதால் இதனை பறக்கும் Twinkie என அடிக்கடி அழைக்கப்படுகிறது. இந்த விமானம் கலிபோர்னியாவில் உள்ள சீல் கடற்கரை அருகே அமைந்துள்ள Boeing Phantom Works high security facility எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது தனது வெள்ளோட்டத்தில் உலகை பல வாரங்கள் வலம் வந்து,சுற்று பாதையில் சுற்றி விட்டு கலிபோர்னியாவில் உள்ள வண்டன்பெர்க்கில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

தங்களது நாட்டு செயற்கைகோள்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் செயல்முறையினை பரிசோதித்து பார்க்கவே இந்த விண்கலம் ஏவப்பட்டது என அமெரிக்க பணக்காராகள் தங்களது பெரும் பணத்தை பந்தயம் கட்டி உள்ளார்கள்.தற்போது மற்ற நாடுகள் விண்வெளியில் உள்ள செயற்கை கோள்களை அழித்து விட்டு அது ஒரு விபத்து என புனைந்து கூற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த மாதிரி ஆபத்து உடனடியாக இல்லையென்றாலும் அதனை கருதி பார்த்து இந்த பாதுகாப்பு பரிசோதனை பயணம் மேற்கொள்ளப்பட்டது என கருதலாம்.

இந்த பயணதிட்டத்தின் அலுவலர்கள் இந்த பயணம் விண்வெளியில் அமைக்கப்பட்ட தளத்திலிருந்து விரைந்து சுழன்று தாக்கும் தங்கள் திறமையினை வெளிகாட்டுவதற்கான ஒரு செயல் என கூறி உள்ளார்கள்.அப்படி கூறப்பட்டாலும் இநத கலத்தை மீண்டும பறக்கவிடும் திட்டம் யாரிடமும் இல்லை என்றுதான் தெரிகிறது. அவர்கள், மேலும் வழிகாட்டுதல், குறிப்பிட்டதிசையில் செலுத்துதல், வெப்பக்கட்டுப்பாடு, மின்சார பகிர்வு, முறைப்படுத்தப்ட்ட கலம் போன்ற 30 விதமான சிறப்பான தொழில்நுட்பங்கள் செய்து காட்டப்பட்டு அல்லது பரிசோதிக்கப்பட்டு இந்த விண்கல பயணம் மூலமாக உலகசுற்றுபாதையில் விமானங்களை பறக்கவிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என தெரிவித்தனர்

வணிக நோக்கத்தில் தரையிலிருந்து உலக சுற்று பாதையிக்கு விண்பயணம் கொண்டு வரும் வெள்ளைமாளிகையின் கொள்கை அடிப்படையிலான நாசாவின் புதிய தொழில்நுட்பத்திற்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்

1960 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் போல் இது உள்ளது என்றாலும் இதன் தானியங்கி முறை புதிதாகும்.

ஊகங்களும் கணிப்புகளும் சரியாக இருக்குமானால் எதிரிகள் இந்த விண்கல சுற்றுபாதைக்கு சமமாக தங்களது கலத்தை உயர்த்தி வரும்பொழுது எதிரி கலங்களிலிருந்து வரும் வேதியல் வெளியேற்றங்களை மோப்பம் பிடித்தும் மின்காந்த புல கண்டுஉணர்வு கருவி ஆகியவற்றாலும் எதிரிகலங்களை கணடு பிடித்துவிடலாம்

இந்த திறமையினை பரிசோதிக்க எந்த நாட்டுகலம் என்பதை துல்லிமாக கண்டு அறிய இந்த திட்டத்தில் துணைசெயற்கைகோள்களை பயன்படுத்த வேண்டும். தற்போது தாய்கலமே தனது தானியங்கி அமைப்பு மூலம் எதிரிகலம் வருகிறது என்பதற்கான அறிகுறிகளை கொடுக்கும் திறன்படைத்து உள்ளது. X37B விண்கலத்தில் pick up bed size pay load bay உள்ளதால் இதற்கான கருவிகளையும் துணைசெயற்கைகோள்களையும் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்

சில கூர்பார்வையாளர்கள் இந்த வெள்ளோட்ட விண்கல பயணம் மற்ற நாடுகள் ஏவும் விண்கலங்களை கண்காணிக்க பயன்படுத்த படலாம் என கருதுகின்றனர். கடந்த பிப்ரவரியில், X37B தனது முதல் வார உலக சுற்று பாதையில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் மார்ச 5 வாக்கில் Hypersonic கிளைடா விமானம் ஒன்று கலிபோர்னியாவிலிருந்து பசிபிக் பயணப்பாதை கண்டறி அமைப்பு{pacific tracking site} வரை ஏவப்படும் என அறிவித்த அமெரிக்காவின் செயல் இதனை உறுதி படுத்தும் வகையில் இருந்தது.

விண் தொழில்நுட்பத்தை காண்காணிக்கும் அமைப்பான SUPERIOR COLO.,வில் உள்ள SECURE WORLD FOUNDATION எனும் தனியார்குழுவினருக்கு விண் மற்றும் ஏவுகனை தொடர்பான மான்ட்ரில் எனும் இடத்தை சார்ந்த ஆலோசகர் திரு.பிரைன் வீடன (Brain weeden) இந்த சம்பவம் எதிர்பாராமல் ஒருங்கு நடந்து நிகழ்வாகும் என தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டத்தின் உண்மையான நோக்கத்தை நாம் சரியாக இந்த திட்ட விண்கலம் ஏவப்படும் பொழுது தான் தெரியவரும்
உலகமெங்கும் உள்ள கற்றுகுட்டி amateur செயற்கைகோள் கண்காணிப்பாளர்கள் இந்த விண்கலத்தின் சுற்றபாதையையும் அது வழி மாறுவதையும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் இவர்கள் முயற்சியை https://satobs.org பார்க்கலாம்.

இந்த கற்றுகுட்டிகளின் காட்டும் ஆர்வம் மற்றும் கணிப்பாளர்களை தவிர்க்க X37B மேலாளர்கள் எடுத்து கொள்ளும் நடவடிக்கைகள் இந்த திட்டம் எந்த அளவு கமுக்கமானது என்பதனை சுட்டுகின்றன.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s