நேற்றுவிஜய் தொலைகாடசியின்  நீயா நானா நிகழ்ச்சியில்  சாரு  சிறப்பு விருநதினராக கலந்து கொண்டார். அதில் கோபி,  சாருவுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது எனறும்,  அவர்கள் சாரு  சொன்னதை அப்படியே கேட்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளரான சாரு  நித்தியானந்தாயவை  நல்லவர் என தனது தளங்களில் எழுதி சாருவின்  வாசகர்களை நித்தியானநதாவிடம்  தள்ளிவிட்டு விட்ட பெரும் தப்பை செய்து விட்டார் என்றும், அ தற்கு சாரு தற்போது மன்னிப்பு  கேட்க தயாரா என்று கேட்க.  சாரு தனது மனைவிக்கு உடல் நலமில்லாதபோது  அதனை சரிபடுததியதால் தான் அவரை சிலேகித்து எழுதியதாகவும்  திரைக்கு பின் இருந்த அவரது உண்மையான முகம் தெரிய வந்த போது அதனை எல்லாருக்கு தெரியபடுத்தி எழுதி வருவதாக தெரிவித்தார். அப்படி  சாரு சொன்ன பிறகும்  நீங்கள் நித்தியானந்தா பற்றி  எழுதி உங்களது வாசகர்களை அவர் பக்கம்  திருப்பிய எல்லாரும்  இப்ப  மாற்றி எழுதியவுடன்  திரும்ப வந்து விடுவார்களா என்ன்.  உங்கள் செயலுக்கு  மன்னிப்பு  கேட்கிறீர்களா  என  பல தடவை கேட்டு  சாருவும்  சாரி என்றால் ஒரு வார்த்தையில் முடிந்து விடும் ஆனால் நித்தியானந்தாவை பற்றி  விளக்கமாக எழுதி ஏற்கெனவே அவரை பற்றி சிலேகித்து எழுதியதை சரிசெய்வதாக மீண்டும் மீண்டும் சாரு தெரிவித்த பின்பும் கோபி சாருவை  வற்புறத்த ஒரு கட்டத்தில் சாரு மன்னிப்பு கேட்டார்.  ஒருவரை நல்லவர் என்று நினைக்கிறோம்  அவர்  அதற்கு மாறானவர் என்று தெரிந்தால் அதையும் தெரியப்படுத்துவது சரியான செயல். முதலில் ஒருவர்  சொன்னது தவறு என்பதற்காக அவரை பொது அரங்கில் மன்னிக்க கேட்க வைப்பதால்  கோபிக்கு என்ன கிடைத்து விட்டது. தனது மேலாண்மையை காட்ட நினைக்கிறார் அல்லது நிகழ்ச்சி தயாரிப்பாளர் சொன்னபடி நடந்து கொண்டாரா தெரியவில்லை.

ஆனால் சாரு ஏன் மன்னிப்பு  கேட்டார்  என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ  உலக மகா தவறு செய்த  மாதிரி மன்னிப்பை  வாயிலிருந்து புடுங்கிய செயல் சரியில்லை என  எனக்கு தோன்றுகிறது. சாரு வாசகர்கள் என்ன சாரு சொன்னபடி எல்லா தலையாட்டும் பொம்மைகளா என்ன . சாரு சொன்னால் நித்தியனந்தாவை  கடைபிடிப்பதற்கு பின் அவர் வேண்டாம் என்று சொன்னால்  விட்டு விடுவதற்கு  அந்தளவுக்கு சாருவின் வாசகர்கள்  பகுத்தறிவு யில்லாதவர்கள் இல்லை. சாரு சொன்னாலும் அதனை சீர் தூக்கி பார்த்த பின்தான நம்புவார்கள். அப்படி சாரு சொன்னா சரியா இருக்கும் என ஒரு கூட்டம் இருந்தால் அது சாருவுக்கு பெருமை சேர்ப்பதாய் இருக்காது.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

3 responses »

 1. balu சொல்கிறார்:

  I think that’s useless discussion. All saints faced this kinds of issues when they live. Everyone had allegation against them. When saints leave their body we
  trust them.
  I feel some other influence driving this kind of discussion.

  • manimalar சொல்கிறார்:

   அப்படிப்பட்ட சாமியார்கள் தேவையில்லாமல் சமுக வாழ்வில் நுழைந்து பொது மக்க்ள் பணத்தையும் நேரத்தையும் வீணணாக்கிறார்களே

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  பாவம் சாரு !!!

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s