திருநெல்வேலியில் பாளையங்கோட்டை சித்த மருத்துவ மனை சாலையிலிருந்து தெற்கு பஜார் பிரியும் இடத்தில்  லூர்து நாதன் என்ற மாணவர்க்கு சிலை உள்ளது. இந்த சிலை  பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் 26.2.1975 அன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் 21.11.1972  அன்று  அம்மாணவர் படித்த தூய சேவியர் கல்லூரி பேராசியர் தாக்க பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில்  மரணமடைந்த மாணவர் லூர்து நாதன் என கூறிபிட்டு உள்ளது.   மேற்படி நிகழ்வு நடந்த ஆண்டு நான் மதிதா இந்துஉயர்நிலைபள்ளியில்  படித்து கொண்டு இருந்ததேன்.  இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தான் நினைக்கிறேன்  பாளையில் ஆரம்பித்த மாணவர் போராட்டம்  கொக்கிரகுளம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து அருகே வந்து போராட்டம் வலுவான நிலையில்  காவல் துறை  தடியடி நடத்த அலை பாய்ந்த மாணவர்கள்  சந்திப்பு சுலோசன முதலியார் ஆற்று பாலத்தில் தப்பித்து ஓட ஆற்றின் அடுத்த முனையிலும் காவல் துறை வாகனத்தில் வந்து  தடியடி நடத்த தப்பிக்க வழிதெரியாத மாணவர்கள் ஆற்றில் குதித்தனர் . அதில் நீச்சல் தெரிந்தவர்கள் தப்பித்து விட நீச்சல் தெரியாத மாணவரான லூர்து நாதனின்  உடல்   பேராச்சிஅமமன் கோயில் அருகே கண்டு எடுக்கப்பட்டது.  மாணவர் போராட்டம்  இதனால் மேலும் வலுவடைந்து  மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.   ஒரு சாரார் காவல்துறை  லூர்து நாதனை அடித்து ஆற்றில் போட்டுவிட்டதாக  சொன்னார்கள்   . நடந்த உண்மை  யாருக்கும் தெரியவில்லை.

பின்பு பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் லூர்து நாதன் சிலையினை வைக்க அனுமதி கிடைத்து   தெற்கு பஜார் சாலையில் கவனிபாரற்று நடந்த நிகழ்வுக்கு சாட்சியாக  நின்று கொண்டிருக்கும் லூர்து நாதன் சிலை என் கதை உனக்கு ம் சரியாக தெரியவில்லையே  என்று  கேட்பது போல் தோன்றியது.

உங்களில் யாருக்காவது அப்போது நடந்தது என்ன என்று தெரிந்தால்  சொல்லுங்கள்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. vsb சொல்கிறார்:

    pl check google on STUDENT UDAYAKUMAR MURDER– I THINK HE GOT STATUE
    ————
    . He has to answer for Udayakumar’s (a student) death when students of Annamalai university protested against Karuna getting doctroate. That poor boy’s father had to make a statement that the student who died was not his son. This pathetic situation should not come to anybody. Afterthat incident in 1970s Karuna did not allow Annamalai University to grow .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s