போதுமான பாதுகாப்பான உணவுகிடங்கில்லாததால் மூன்றில ஒரு பங்கு  உணவுதானியங்கள்  கெட்டு போகின்றன என இந்திய உணவுகழகத்தின் உட்குறிப்பு தெரிவிக்கிறது என் சிஎன்என் ஐபிஎன் தெரிவிக்கிறது. அதாவது  168 லட்ச மெட்ரிக டன் உணவுதானியங்கள்   மத்திய மாநில உணவுகிடங்குகளில் போதுமான வசதியில்லாததால் கெட்டு போகின்றன. இவற்றின் மதிப்பு  ரூ28000 கோடி  ஆகும். இவ்வுணவை கொண்டு 2 கோடி மக்களுக்கு ஒராண்டுக்கு வயிற்று பசி ஆற்றலாம். ஒட்டுமொத்தமாக 25  மில்லியன் டன உணவுதானியங்களை தான்  இந்திய உணவுகிடங்கில்  பாதுகாப்பாக வைக்கவியலும். மத்திய வேளாண் அமைச்சர்  சிலசமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. போதிய வசதியிலலாததால் இப்படி ஆகிவிட்டது .அடுத்த ஆண்டு இவ்வாறு நிகழாது என  கவலையில்லாமல் தெரிவித்து உள்ளார். கடந்த பததாண்டுகளாக உணவுகிடங்களினை அதிக படுத்த அரசு எந்தவித திட்டங்களை வைத்திருக்கவில்லை.   இப்படி பட்ட   ஒரு சூழ்நிலையில்  அதாவது ஒரு பக்கம்  உணவு தானியம் கெட்டு  போக  ஒரு பக்கம் உணவு கிடைக்காமல் மக்கள் பூனை பிடித்து கறிவைத்து சாப்பிட்ட அவலத்தை பார்த்து தான் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம்  அதாவது 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம்  உச்ச நீதிமன்ற ஆணையினை ஒட்டி  கொண்டு வரப்பட்டது.  அதற்கு பின்பும் நாம் புதிதாக தானிய கிடங்குகளை அதிகரிக்காததற்கு காரணமென்ன. ஏழைகளை எலெக்சன் நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என்ற ……………………. தீனவெட்டு தான்  . இவர்களுக்கு நாம் ஓட்டு போடுவதா   வேட்டு போடுவதா . வெறுமன  இந்திய உணவுகழகத்தை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. மத்திய வேளான் அமைச்சர் மத்திய அரசும் உணவு கழகத்தின் மீது பழியையை போட்டு விட்டு தப்பிக்க முடியாது. இன்னும் பஞ்சாப்பிலும் உறரியானவிலும் உணவுதானியங்கள் வெட்ட வெளியில் வைத்து கெட்டு  போகின்றன. சமீபத்தில் பெய்த மழையில் உணவு கிடங்கில் வேறு மழைநீர் வெந்த புண்ணில வேல் பாய்த்து போல் , நுழைந்து   உணவுதானியங்கள் கெட்டு போக காரணமாய் ஆகிவிட்டன.

இதைப்பற்றி என்ன சொல்ல உண்ணாம தின்னாம  இப்படி நாசமாய் போகிறதே புலம்புவதை தவிர. கேட்க வேண்டிய  தீர்வு காண வேண்டிய அரசியல்வாதிகளுக்கு வேறு வேலை எத்தனையோ இருக்கிறது.

கூடுதல் தகவல்

http://ibnlive.in.com/news/onethird-of-indias-food-reserves-left-to-rot/127434-3.html?from=tn

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s