இலங்கைக்கு ஐ நா குழு மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய வந்ததையும் , அதை எதிர்த்து சிங்களவர்கள்  போராடியதும் பின்னர் ஐநா சபை தனது தூதரகத்தை, இலங்கையில்  மூ டியதையும் நாம் அறிவோம். இது பற்றி துக்ளக் ஆசிரியர் சோ,     தனது தலையங்கத்தில்   ஐநா சபை இது போன்ற  அத்துமீறல்களை பெரிய நாடான  அமெரிக்கா, சீனா  போன்ற நாடுகள்  செய்த போது வளாய் இருக்கும் ஐநா,  சின்ன நாடான இலங்கை மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றும்  மனிதர்களை கேடயமாக பயன்படுததி புலிகள் போராடிய போது இலங்கை ராணுவம் எடுத்த நடவடிக்கையில்  கேடயமாக பயன்படுத்தபட்ட மனிதர்கள் மாண்டு இருக்கலாம்  .இது தவிர்க்க முடியாத ஒன்று.  இவ்வாறு செய்ததது மனித மீறல் என்று கருதப்பட்டால்   இதை தவிர்கக அப்போது புலிகளை தாக்காமல் இலங்கை ராணுவம் வந்திருக்க வேண்டும். அதனால் புலிகள் வெற்றி பெற்றது போல் ஆகும் .                                                                                                                                                            காஷ்மீரிலும் சில மனித உரிமை மீறல்கள் என  மேற்கத்திய நாடுகள் கத்து கின்றன.  இலங்கைக்கு எதிராக இந்தியா ஐநா குழுவிற்கு ஆதரவு  தெரிவிக்க கூடாது. அது  இந்தியா  காஷ்மீரில் எடுக்கும் நடவடிக்கை தவறானது எனும் ஒரு தோற்றத்தை   ஏற்படுத்தும் என்று தெரிவித்து,    இந்தியா இலங்கைக்கு  ஆதரவாக இருக்க வேண்டுமெனும் தொனியில் எழுதியுள்ளார். சிங்களவர்கள் கூட இப்படி சிந்தித்து இருப்பார்களா என  தெரியவில்லை.                                                                                                           அப்பாவி மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கையில் இறந்தால்  துன்புறத்தபட்டால்  அரசுக்கு ஆதரவாக  கண்டு கொள்ள படக்கூடாது  என்றால்  மாவோயிஸ்’ட் போன்றவர்களின் நடவடிக்கையில் பொது மக்களின் உயிருக்கு ஊறு ஏற்பட்டால் அதை அவர்களின் கோழைத்தனம்  இரக்கமற்ற கொடுஞ்செயல் என வர்ணிப்பதும் தவறு போன்று ஆகிவிடக்ககூடும். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி எழுதி   மனித உரிமை மீறல்களை கண்டு கொள்ள கூடாது என கருதினால்,  அண்ணல் காந்தி ,.பகத்சிங் ,சுபாஷ சந்திர போஸ், திலகர் போன்றவர்கள் தீவிரவாதிகள் என பொருள்படக்கூடும் . அப்போது  பிரிட்டிஷ்  அரசு மேற்படி விடுதலை வீரர்களுக்கு  அந்தமான் சிறைச்சாலையில்  கொடும் தண்டனை   அளித்தது  மனித உரிமை மீறல் இல்லையா.  அப்பாவி மக்கள்  அன்றைய விடுதலை போராட்டத்தில் கலந்து கண்ட போது  ஆங்கில அரசால்  தாக்க பட்டது  மனித உரிமை மீறல் இல்லை என்று ஆகிவிடும் அல்லவா. ஆள்பவர்கள் தங்களது ராச்சியத்தை காக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை   போராட்ட வீரர்களை ஒழித்தால் போதும் என்று செயல்படுவது எல்லா காலத்துக்கும் பொருந்துமா.   ஒரு வாதத்துக்கு  இறுதி போரில் நடைபெற்றதை விசாரிக்காமல் சோ  வாதப்படி விட்டாலும்  ஒராண்டு காலமாய் வதை முகாமில் எம்மக்கள் மீது வன்முறை ஏவ பட்டு துன்புறுத்தபடுவது. தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சிங்களவர் குடிஅமர்த்தப்படுவது போன்றவை  அம்மக்களின் உரிமை மீறல் செயல் இல்லையா இதைக்கூட விசாரிக்க கூடாதா.  சோ  நியாயமாக எழுதுவது இல்லை. தனது கருத்துக்கு ஏற்ப  வாதங்களை வைப்பதில் வித்தகராக உள்ளார். அவர் எழுதுவதை படிக்கும் வாசகர்கள் வர வர குறைந்து விட்டார்கள் என்பதிலிருந்து அவர் சரியாக நியாயமாக   எழுதுவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

8 responses »

  1. சுல்தான் சொல்கிறார்:

    இந்த பாப்பான் நாய் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக பேசுவதைக் தன் நிலைப்பாடாக உள்ளவன்.

  2. மதுரைசரவணன் சொல்கிறார்:

    பகிர்வுக்கு நன்றி.

  3. s.kalaikumar சொல்கிறார்:

    இந்த பாப்பான் நாய் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக பேசுவதைக் தன் நிலைப்பாடாக உள்ளவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s