பெங்களுரில் உள்ள பாஸ்ட்லி பள்ளி தங்களது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உங்களது குழந்தைகள் அரசின கல்வி உரிமைசட்டப்படி 25 விழுக்காடு ஏழை பிள்ளைகளை பள்ளி சேர்த்து அவர்களுடன் உங்கள் பி்ளளையும் படிக்க நேர்ந்தால் உங்கள் பிள்ளைகள் கெட்டு போய்விடுமென கூறி உள்ளது. இதை பற்றி ஊடகங்கள் சில மட்டும் கண்டு கொண்ட போதிலும் பெரும்பாலான ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன.பொது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் இதைபற்றி எந்த ஆட்சேபமும் பெரிதாக தெரிவிக்க வில்லை.ஏன் ? அந்த பள்ளியின் சுற்றறிக்கையில் கூறப்பட்ட மனநிலையில் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஏழை குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் போல் ஒரு சித்திரம் இங்கு உருவாக்க பள்ளிகளே முயல்வது அசிங்கமானது. அதை பற்றி அந்த பள்ளி தாளாளர் அந்த சுற்றறிக்கை எங்க பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள கருத்து பரிமாற்றம் இதில் வெளியார் தலையீடு அவசியமில்லாது என்ற கோணத்தில் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். படித்த வீட்டு பிள்ளைகள் பணக்கார பிள்ளைகளும் ஒழுக்க கெடு உள்ளவர்கள் நடைமுறையில் காண்கிறோம். ஏழை பிள்ளைகளை மட்டும் ஒழுக்ககேடானவர்கள் என கூறும் இந்த அவலத்தை போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக கல்வி உரிமை சட்டம் என்ன சொல்கிறது . கீழே படிக்கவும். அதன்படி உடன் அந்தப்பள்ளியி்ன மீது நடவடிக்கை எடுக்க வழி உள்ளதாக தெரியவில்லை. என்ன செய்ய ஏழைகள் என்றால் இந்த நாட்டில் இளப்பம்தான்All private schools shall be required to enroll children from weaker sections and disadvantaged communities in their incoming class to the extent of 25% of their enrolment, by simple random selection. No seats in this quota can be left vacant. These children will be treated on par with all the other children in the school and subsidized by the State at the rate of average per learner costs in the government schools (unless the per learner costs in the private school are lower).
ll schools will have to prescribe to norms and standards laid out in the Act and no school that does not fulfill these standards within 3 years will be allowed to function. All private schools will have to apply for recognition, failing which they will be penalized to the tune of Rs 1 lakh and if they still continue to function will be liable to pay Rs 10,000 per day as fine. Norms and standards of teacher qualification and training are also being laid down by an Academic Authority. Teachers in all schools will have to subscribe to these norms within 5 years.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

  1. knvijayn சொல்கிறார்:

    கர்நாடக அரசு தனியார் பள்ளிகள் தங்கள் இருப்பிடத்தில் அருகில் உள்ள குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்தது,அதற்க்கு பள்ளி நிர்வாகங்கள் பெற்றவர்களிடம் அப்படி செய்தால் உங்கள் குழந்தைகள் சமுதாயத்தில் அடிநிலையில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து pollute ஆகி விடுவார்கள் என்று எச்சரித்தன,ஆனால் பல பெற்றவர்கள் எங்கள் குழந்தைகள் ஏழை குழந்தைகளுடன் படிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொன்னார்கள்.டெக்கான் ஹெரால்ட் கிட்ட தட்ட ஒரு வாரம் இதைப்பற்றி வாசகர்களிடம் விவாதித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s