சாகர்  வேறு யாரும் இல்லை. என் நண்பரின் நாயின் பெயர். அது பெமெரியன் வகையினை சார்ந்தது. அதனை  பெங்களூரிலிருந்து  வாங்கி வரும்போது  தொடர்வண்டியில்  மறைத்து கொண்டு வந்ததற்காக அபராதம் வேறு கட்டினான். அந்த சாகரின் மீது மிகுந்த பாசம் வைத்து வளர்த்து   அதனை நாய் என்று கூட சொல்லமாட்டான் அவன் இவன் என்று தான்  சொல்லுவான். நாங்கள் நமட்டு சிரிப்பு சிரித்து கொள்வது உண்டு. பாருடா  நேற்று அவன் செயினை அறுத்து கிட்டு  சாலைக்கு ஓடிவிட்டான்.  நான் வேறு  வேலைக்கு வந்து விட்டதால் வீட்டில் அதனை பிடிக்க ஆள் இல்லாமல் பக்கத்து கடைக்காரர் உதவியுடன் பிடித்து இருக்கிறார்கள் என்பான். அந்த சாகர்  நாம் உபயோகிக்கும்  கழிப்பறையில் கக்கா போகும் என்பான்.

அப்படிப்பட்ட சாகர்  நண்பன் குடும்பத்துடன் ஊருக்கு சென்று இருந்த போது  வயது முதிர்வால் மரணம் அடைந்துவிட்டது. செய்தி கேட்டு  நண்பன்  குடும்பமே விக்கித்து போய்விட்டது. தன் பையனிடம்  சாகர் இறந்ததை அண்ணன் இறந்து விட்டான் என்று  சொல்லும் அளவுக்கு அளப்பரிய பாசம் வைத்திருந்தான். சாகர் இறந்து விட்டதை அவனிடம் கேட்கவிட்டால் நல்ல இருக்காது என்று உங்கவீட்டு  நாய்    என  உதட்டில் வந்ததை  கடித்து உள் இறக்கி விட்டு  சாகர் இறந்து விட்டதாமே என்று  கேட்டான்.  உடன்  சாகர் இறந்ததையும் அதனை வீட்டின் தோட்டத்தில்  புதைத்து விட்டதாகவும்  தெரிவித்தான்.  பின்  ஏற்கெனவே சொன்ன சாகர் புராணத்தை மீண்டும் கூறினான் இடைமறித்தால் வருத்தப்படுவான் என்று கேட்டு கொண்டிருந்தேன். திடீரென சாகருக்கு என்ன வயசு இருக்கும் என்றான். எனக்கு சரியாக அதன்வயது தெரியாது இருந்தாலும் நண்பனின் ஆறுதலுக்காக   என்ன ஒரு ஏழரை வயது  இருக்குமா என்று பதிலை கேள்வியாக வைத்தேன்.  அவன் போடா கேணை அதற்கு வயது 14 ஆகியிட்டு தெரியுமா என்று கோபமாக சொன்னான்.  எனக்கு சிரிப்பதா அல்லது அவன் மீது கோபப்படுவதா எனத்தெரியாமல் பேந்த பேந்த முழிக்க வேண்டியதாயிட்டு. வயசானதால்தானாடா இறந்து போச்சு ஏன் வருத்துபடுகிறாய் என்று கேட்க நினைத்த நான்  வாயை மூடிக்கொண்டு  பேச்சை மாற்றினேன். ஆனாலும்  டேய் சாகருக்கு  விஷேசம் வைக்க வேண்டும்டா என்றான்.  என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் என்ன என்ன கெட்டவார்த்தைகளை உபயோகிப்பான் என் பயந்து   ஆமாடா என்று தலைகீழே பார்தத வாறு சொன்னேன்.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s