பெயிண்டா ஒருவருக்கு  தனது சக கூட்டாளிகள் போல் டிவிஎஸ் சூப்பா வண்டி வாங்கி வேலைக்கு வரவேண்டும் என்று ஆசை . ஆனால் வாங்கும் கூலியில் பாதியை குடித்து விட்டு மீதி தொகையினை மட்டும் வீட்டுக்கு கொடுப்பதால் அவனுக்கு வீட்டில மரியாதை சுத்தமாக கிடையாது. இருந்தாலும் வண்டி வாங்கும் ஆசை விட மனசு இல்லை.   கூட்டாளிகளிடம் பழைய வண்டி எவ்வளவு இருக்கும் என்று வினவி 7000 ரூபாய்க்கு பார்க்கலாம் என அவர்கள் சொல்ல மனைவியிடம் கெஞ்சி கூத்தாடி கேட்க அவர் வண்டி வாங்க  நகையினை அடகு வைத்து தருகிறேன் . ஆனால் சில நிபந்தனைகள் படி நடக்க வேண்டும் என சொல்ல  காலையில்  அவளது அம்மாவை  வேலைக்கு கொண்டு விட வேண்டும்.  அவளை அழைத்து செல்லும் போது கூட பெட்ரோல் அவன் தான் போட வேண்டும்  அவளிடம் காசு கேட்க கூடாது. குடிக்க கூடாது என நிபந்தனைகளை சொல்ல  அவன் ஏற்று கொண்டான். கடைசியில் மெக்கானிக்கிடம் வண்டி கேட்க அவன் 10000 ஆகும் என கூற என்ன செய்வது என்று மீண்டும் விழிக்க  அவனது மனைவி அவனது  கூட்டாளிக்கு  போன் பண்ணி அண்ணே  அது ரொம்ப  அழுகிறது.  எதாவது வண்டி வாங்கி கொடுத்துருங்க என சொல்ல . கடைசியில்  வண்டி வர அது கருப்பு வண்ணத்தில் இருக்க  அது குடும்பத்திற்கு ஆகர்து என ஒட்டு மொத்த  குடும்பமும் மறுக்க . கடைசியில் புது வண்டி வாங்குவது என முடிவாக  27000 ரூபாய் புரட்டி கொடுக்க   அவளது கணவனுக்கு   திடீரென  யோசனை ஓன்று வர  10000 ஆயிரத்தை கொடுத்து விடடு மீதி தொகை செலவு பண்ணலாம் எனும் எண்ணத்துடன்  மனைவியிடம் முழு தொகை கொடுத்தால் வரி போட்டு விடுவான்  என  புழுக  அவன்  நான் கடைக்கு வருகிறேன்  எவன் வரி போடுதான் என குரல் எழுப்ப.   கடையில் போய் புது வாங்கி வண்டி கொடுக்க. நிபந்தனைகளை நிறைவேற்றி வருகிறர் பெயிண்டா. எங்காவது திருமண வீட்டிற்கு சென்றால்  அவனுக்கு  மோதிரம் செயின் போட்டு அழைத்து சென்று இடையில் பயணத்தில் எங்கும் சென்றுவிடாமல் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து  நகைகளை கழட்டி வைத்து  விட்டு தான் அனுப்புவார் அந்த மனைவி . அப்படியும் வேலைக்கு  வரும் வழியில்  யாரவது  குடிக்க  வாங்கி கொடுத்தால்  ஏற்கென வெ   பதிவா போக வேண்டி வேலையை கட் பண்ணி   குடி  வாங்கி கொடுத்தவருடன் சென்று விடுவார். மனைவியோ கூட்டாளியிடம்  போன் செய்து  அது  அங்கதான வரச்சொன்னேன் . எங்க போச்சி . வீட்டுக்கு வரட்டும் .  பார்த்து கொள்கிறேன். எனறார்  இப்படி பட்ட ஆளுக்கு மனைவி இப்படி இல்லாட்டாலும் முடியாது

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s