நான்கு மாதங்களுக்கு முன்பு  எனது திமுக நண்பர்களிடம் பேசும் பேர்து   திமுக அடுத்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்று விடும் எதிர்க்க யாரும்  இல்லை என மமதையுடன் பேசினார்கள் .எல்லாருக்கும் அதுபோல் எண்ணம் வரக்கூட செய்தது. அப்பொழுது நிறைய மாற்று கட்சிகாரர்கள் திமுக பக்கம் வந்த வண்ணம் இருந்தார்கள. ஆனால்  ஜெயின்  கோவை கூட்டத்திற்கு அப்புறம் அவர்கள் பேச்சில பழைய தெம்பு குறைந்து போனது போல் தெரிகிறது. திருச்சி கூட்டத்தை பற்றி பேசும் போது  காசுகொடுத்து கூட்டிய கூட்டம் என  பேசி கொண்டார்கள். எனக்கு என்னவோ அப்படி தெரியவில்லை. சரியான நெட்வோர்க்  வாயிலாக அவர்களது கட்சிகாரர்களை ஒருங்கினைத்து உள்ளதாக தெரிகிறது. மேலும் தேர்தல் வருவதால் தங்களது பலத்தை காண்பிக்க  கட்சி   நினைத்ததும்  மாவட்டங்கள் தங்களது பலத்தை கட்சி தலைமைக்கு தெரியபடுத்தும் விதமாகவும் இருக்கலாம். ஓட்டுக்கு பணம் அளிப்பதால்  அனைத்து ஓட்டுகளை கவர முடியாது என்பது சமீபத்திய   இடைத்தேர்தல்கள் நீருபிக்கின்றன.பொது தேர்தலில் காசு கொடுக்கும் நெட்வோர்க்  சரியாக செயல் பட வாய்ப்பு ச்ற்று குறைய கூடும்.  விஜயகாந்த்  அதிமுக பக்கம் போனால் என்ன விளைவு ஏற்படுமென்பது  திமுகவால் க ணிக்க முடியவில்லை என்று கருதலாம். காங்கிரஸ் இளங்கோவனை முடுக்கி விட்டு அதிக தொகுதிகளை பெற முயற்சித்தால்  மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி பிடிக்க  வாய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் ஊடகங்கள்  ச்ற்று அதிமுக பக்கம் சாய்வது போல் உள்ளது.  எல்லாம்   திமுக அனுதாபிகளை சற்று கலங்க வைத்து உள்ளது.  எனக்கு என்னவோ திமுக முன்பு அதீதமாக  தங்களது  பலத்தை கருதியதாகவும்  இப்போது  தேவையில்லாமல் கலங்குவது போ ல்  தான் உள்ளது.108 சேவை, காப்பீடு திட்டம், ஒருரூபாய் அரிசி, டிவி, அடுப்பு போன்ற இலவசங்கள் திமுகவை காப்பாற்றி விடும் என்று  தான் நினைக்க தோன்றுகிறது.   சரியாக கணிக்க முடியாத விஷயங்களில் தேர்தலும் ஒன்று.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. அபிஅப்பா சொல்கிறார்:

    \\சரியாக கணிக்க முடியாத விஷயங்களில் தேர்தலும் ஒன்று. \\

    நீங்கள் சொல்வது இப்போதைக்கு தான். தேர்தல் 2 நாட்கள் முன்னதாக கூட பல தேர்தல்கள் முடிவை மாற்றியிருக்கின்றன.

    எதுவும் எப்போதும் நடக்கும் !

    • manimalar சொல்கிறார்:

      ஆம் . சில சமயங்களில் பணமும் அதிகாரபலமு் எல்லாவற்றையம் பின்னுக்கு தள்ளி வெற்றி தோல்விகளை தீர்மானிக்கலாம். அவற்றை மீஞ்சி மக்கள் மனமாற்றம் இருந்தால் மாற்றம் வரலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s