முந்த நாள் சிஎன்என் ஐ பிஎன் -ல்  டெல்லி  பமபாய் போன்ற மெடரோ நகரங்களில் முஸ்லிம் மக்களுக்கு இந்து  வீட்டு சொந்தக்காரர்கள் வாடகைக்கு விட மறுப்பதாகவும்  உண்மையா மெடரோ நகர்களால் இந்த நகரங்கள் மாறவில்லை இன்னம் மதவாரியாக பிரிந்துதான் கிடக்கின்றன. வீட்டு புரோக்கர் வாயிலாக  வீட்டு சொந்தக்காரர்களிடம்  முஸ்லிமுக்கு வீடு என  கேட்ட போது  அவர்கள் வீடு தர மறுத்தனர். ஏன் என கேட்டதற்கு   அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள  மாட்டார்கள். நாகரிமாக நடந்து கொள்ள மாட்டார்கள்   பக்கத்துவீடடு  ஜெயின்  வீட்டுகாரர்களுக்கு  பிடிக்காது. அவர்கள் மாட்டு கறி உண்பவர்கள்   என்றும்  தெரிவித்து அதனால் அவர்களுக்கு வீடு வழங்கவியலாது என்று மறுத்து விட்டார்கள்.  முஸலிம் வாடகை  கேட்பவர்   நல்ல பதவியில் இருந்தாலும்  நல்லவராக இருந்தாலும் வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள்.  ஆனால் தாங்கள் இவ்வாறு வீட்டை முஸ்லிமுக்கு வாடகைக்கு முஸ்லிம் என்தால் தர மறுப்பது தனது முஸ்லிம் நண்பர்களுக்கு தெரியக்கூடாது.  தெரிந்தால் தங்களது தோழமை கெட்டு போகும் என்கிறார்கள். மேலும்   பேட்டி அளித்தவர்  முஸ்லிம்க்கு மட்டுமல்ல பார்சி போன்றவர்களு்ககும்  வீடு வாடகைக்கு அளிக்க மறுக்கிறார்கள்  என்று தெரிவித்தார்கள. சிறுபான்மையினருக்கு மத்திய அமைச்சர் இது வருந்தக்கது இது மாறவேண்டும் என்றும்  பர்ஜக கட்சி பிரமுகர்    பிரிவினைக்கு பின்தான் இப்படி ஆகிவிட்டது என்றார்.   அரசு குடியிருப்பு ஒதுக்கீடுகள் சிறுபான்மையினர்க்கு 20 விழுக்காடு இருக்கவேண்டும்  முஸ்லிம் பேச்சாளர் தெரிவித்தார்.                                                                                                                                                   நண்பர்களிடம் இது பற்றி பேசும் போது இங்கேயும் அப்படித்தான்    அவர்கள் தரையில் மந்திர தகடு புதைத்து வைத்து  தொழுகை நடத்துவர்கள்  வீடு காலி செய்யும் போது அதை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்கள்  என்றார்  இது எந்தளவு உண்மை என தெரியவில்லை. என் வீ்ட்டை முஸ்லிமுக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளேன்.  சுத்தமாக வைத்து உள்ளார்கள்.   ஆனால்  சொந்தக்காரர்கள் 10 முதல் 15 பேர் வரை வந்து 20 , 30 நாட்கள் தண்ணிக்கு கஷ்டமான காலத்தில் வந்து விடுகிறார்கள். நமக்கு தண்ணீ கஷ்டமாக போய்விடுகிறது.  வீடு முஸ்லிமுக்கு வாடகை விட்ட போது அவர்களுக்கு ஏன் வீட்டீர்கள் என சிலர் கேட்டார்கள்.   தற்போது காலி  செய்ய சொல்லி உள்ளோம்                                 பொதுவாக  தமிழ்நாட்டில் வீடு வாடகைக்கு விடுபவர்கள்  பிராமினாக இருந்தால்  விஜிடேரியனுக்கு மட்டும்   பிராமினுக்கு மட்டும் என்பார்கள்   மற்றவர்கள்   வாடகைக்கு வருபவர்கள் என்ன சாதி என்பதை கட்டாயம் பல்வேறு முறையில் முயற்சி செய்து தெரிந்து கொள்வார்கள்.வாடகைக்க விட்டால் காலி பண்ண  சொல்லும் போது   பிரச்சினை பண்ணாத சாதியினராய் பார்த்து வாடகைக்கு விடுவார்கள்   பொதுவாக கிரிஸ்துவர்களுக்கு  முக்கியமா பெந்தேகொஸ்ட் கிரிஸ்துவர்களுக்கு  இந்துக்கள் வீடு வாடகைக்கு கொடுப்பது இல்லை. இவர்கள் பிரையர் என்ற பெயரில் கூச்சலிட்டு அழுவது தாங்க வியலாது.முஸ்லிமுக்கு  வாடகைக்கு வீடு வாடகை விடுவதில்லை . நாளைக்கு பிரச்சனை என்றால்  வீட்டு சொந்தக்காரர்களை கைது செய்யும் அவலத்தில் மாட்டிகொள்ள கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் வீடு வாடகைக்கு விடுவது இல்லை.                                                                                                                                                                                                                                  தமிழர் இந்தியர்கள் என்று என நாம் சொல்லி கொண்டாலும்  சாதிவாரியாக மதவாரியாக பிரிந்து தான் வாழ்கிறோம் இது தான் நிதர்சனமான உண்மை. சில சாதியினர் பற்றி நமது மதிப்பீடுகள் இன்னும் மாறாமல் இருக்கின்றன். அவர்கள் தாங்கள்தான் பெரிய வீரர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாரும் பயந்தாங்கொள்ளிகள் என்று நடப்பதும்   வாடகை இருக்கும் வீட்டில் மத சடங்களை செய்வதை தவிர்க்க சில சமயத்தினர்  .  பல மக்கள் குடியிருக்கும்   குடியிருப்பு பகுதியல் புதிதாக தங்களது வழிபாட்டு தளங்களை கட்டி  தினமும் தங்களது போதனைகளை  ஒலிபெருக்கி வாயிலாக அலற விடும் பழக்கத்தை  கைவிட எல்லா சமயத்தினரும் முன்வர வேண்டும். வீடு வீடாக மதமாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். வீண் வெறுப்பை  சம்பாதிக்கு ஏன் வேண்டும்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

9 responses »

 1. Mohamed சொல்கிறார்:

  In every community, there are good and bad. Similarly in Muslims also there, but I hope, because of Good Muslim, it is good for owner, neibourers and our own Country India.

  If you give house rent, to Good Muslims, what will happen to owner and neighbors, I think.

  1. They make Dhikr (Rememberence of God), so angels will come to your own house.
  2. They make Dua (Supplication), house owner also may get reward.
  3. They make Adhan (Calling to Prayer if there is Masjid-This Out SAITHAN)
  4. They make Ikkamath (This is to be said before prayer-this also out SAITHAN from your house)
  5. Every time, they eat, they say Bismillah Hirrahman Nirraheam (In the name of God-Most Merciful and beneficent) – Because of this, house owner may get reward.
  6. Every time, they finish eating, they say Algamthulillah (Thanks to God for giving Food) – Because of this, house owner may get reward.
  7. Before he sleeps, he remembers God, after wake up, he remembers God.
  8. They will not do any HARAM thing in the house (Like, Drinking, giving Interest and others)
  9. In my place, Hindus like to do business with Muslims, because they will not cheat 100% – at least they can get money back.
  10. House owner will get not only RENT, may get pleasure from God, becuase of this, some good thing may happen in their life and their childrens life also.

  What house owner has to look is, whether he is a good Muslim or not.

  May God show us straight path and lead straight path.

  Mohamed from Riyadh, Saudi Arabia

  • manimalar சொல்கிறார்:

   you have said the right side of Muslim people . thank you. i have seen in day today life. that Muslim has purchased their goods only in Muslim shop. tamilnadu Dravidian parties politicians are happy to participate in iftar gnonbu. but hesitate to participate Hindu temple festivals. one minister have lost their minister ship for attending Hindu festival .

 2. chandran.raja சொல்கிறார்:

  இது சாதரணமாக எடுக்கக்கூடிய பிரச்சனை அல்ல.மதரீதியாகவும் இனரீதியாகவும் எமது
  தேசம் பிளவுண்டு கிடப்பது உண்மை தான். மனம் உண்டானால் இடம் உண்டு. பணம் படைத்தவனுக்கும் முதாலித்துவசிந்தனை உள்ளவனுக்கும் இந்த மனத்தை எதிர்பார்க்க முடியாது.
  இன்று இந்தியாவில் உள்ள கட்சிகள் எல்லாம் ஊழல்நிறைந்த முதாலித்துவ கட்சிகளே ஆட்சியில் இருக்கிறார்கள். இந்தியா-உலகம் தழுவிய பொதுவுடமைக் கட்சி தேவை தொழிலாள
  வர்க்ககட்சியே இப்படியான சமூகபிரச்சனைளை தீர்ப்பதற்கு வல்லவை அதற்கான தத்துவார்த்த
  பலனை கொண்டிருக்கின்றன. மயிலே மயிலே இறகுதா என்றால் தரப்போவதில்லை. துடைப்பம் எட்டாத இடத்தில் தூசு தானாகப் போவதில்லை. எந்நிலையென்று பாராது உங்களை கம்யூனிடகட்சியின் உறுப்பினர் ஆக்கிக்கிக் கொள்ளுங்கள். சோம்பிக்கிடந்த உலகம் மாற்றத்திற்கு தயாராகிறது!.

  • manimalar சொல்கிறார்:

   மே வங்கத்தில் விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டிய மார்கிஸ்ட டாடா பக்கம் நின்றதே. இருப்பதில் நல்ல கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்கள் தற்போது க்வாலிஸ் பொலிரொ வண்டிகளில் திடீரென தோன்றுவது பெருத்த சந்தேகங்களை உருவாக்கிறது.40 ஆண்டுகள் உண்டியல் ஏந்தி கட்சி பணியாற்றி கட்சி கார்களில் எப்படி பவனி வருகிறது. ஏழைகள் எல்லாரும் பணக்காரர்களாகிவிட்டார்களா. அதிக ந்னகொடை அளிக்கும் அளவுக்கு

 3. chandran.raja சொல்கிறார்:

  கேரளாவையோ வங்கத்தையோ பார்த்துத்தான் கயூனிஸ்டாக அணிவகுப்போம் என்றால்
  நாம் போகும்பாதையை தவறவிட்டவர்கள் ஆவோம். இதே போலத்தான் சீனாவும் சோவியத் யூனி
  யனும்.
  வரலாறு எப்பவும் நேர்கோட்டில் வந்தவையல்ல வளைவு சுழிவு பள்ளம் மேடுகளை கொணடவை
  இரண்டாம்உலகமா யுத்ததிற்கு பிறகுஅமெரிக்காவின் கையில் இருந்த உலகஒழுங்குமுறை
  அஸ்தமனமாகிவிட்டது. தனக்கு உள்ளபடைவலிமை வைத்து மற்றநாடுகளை பணியச் செய்ய
  முயலும்.
  உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கிற-ஏற்படப் போகிற கொந்தளிப்புகள் மோதல்கள் யுத்தங்கள்
  உள்நாட்டு யுத்தங்கள் உலகத்து பாட்டாளமக்களை வீதிக்கு இறக்கிசோசலிஸமா? காட்டு மிராண்டித்தனமா?? என்ற கேள்விக்குவிடை தேடப் பண்ணும். அந்த வகையில் வங்கம் கேரளம் போன்றவை புதிதாக தோன்றப் போகிற முண்ணனி படையால் உதறி எடுக்கப்படும்.

 4. குறும்பன் சொல்கிறார்:

  உண்மை. 3 பேர் இருக்கும் முசுலிம் குடும்பத்துக்கு விட்டா தினமும் அங்க 10 பேர் வருவாங்கன்னு விடறதில்லை, ஆனா அவங்களே சொந்தக்காரங்க குறைவா இருக்கற முசுலிமுக்கு வீடு வாடகை விட்டிருக்காங்க.

  • manimalar சொல்கிறார்:

   பொதுவாக அவர்களுக்கு உறவினர் குடும்ப எண்ணிக்ககை குறைந்த பட்சம் 6 வது இருக்கும் வந்தா ரொம்ப நாட்கள் வேறு தங்கிவிடுகிறார்கள்.

 5. metro boy சொல்கிறார்:

  ஒரு பொதுவான சமூகப் பிரச்னையை தைரியமாக தொட்டிருக்கிறீர்கள்.
  உணவுப் பழக்கங்களோ, தொழும்/பிரார்த்தனை/பூஜை செய்வதோ வீட்டுக்குள் இருந்து, அண்மை வீட்டுக்காரர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் இது ஒரு பிரச்னை ஆகாது. அதிகமாக புலால் உண்ணும் இனத்தினர், தமிழகத்திலே உள்ள போது, அல்லது குஜராத்திலே உள்ள போது பக்கத்து வீட்டினரை உத்தேசித்து, வீட்டில் மரக்கறியும் வெளியில் உணவு விடுதிகளில் மாமிசமும், மீனும் சாப்பிட்டு நான் பார்த்திருக்கிறேன்.
  பெரிய குடும்பம்/வருகின்ற உறவினர் பெரிய குடும்பம் என்பது குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேச வைக்கிறது; சராசரி பிள்ளைப் பிறப்பு, அண்மையில் சென்சுஸ் படி கூட scheduled caste/tribe பிரிவினரை விட முஸ்லீம்களிடையே அதிகம் ; இது ஒரு பொருளாதாரப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டால், குடும்ப அளவு பிற மதத்தினர் இடையே உள்ளது போல் இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையே சராசரி இருக்கும்.
  அன்பர் துவா போன்ற உருது பதங்களை சொல்லி இருக்கிறார்; உணவுக்கு முன் சிறிய பிரார்த்தனை கிறிச்துவர்களிடையும் உண்டு; சில இந்து வீடுகளிலும் (குறிப்பாக ராமகிருஷ்ணா மிஷன் முதலியோர்) பிரார்த்தனை இருக்கும்.
  பொதுவில் உறவாடும் பொது , குழூஉக்குறி தவிர்த்து, பொதுவான மொழியையும் நடை, பாவனைகளையும் (உடை சொல்லவில்லை) கடைப் பிடித்தால் பிரிவினைகள் குறையும்.
  எல்லாவற்றுக்கும் மேலாக, கூடி வாழவேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் இருக்க வேண்டும். அது இந்துக்களுக்கு பிறவியில் இருந்து வருவது; / உலகெலாம் வாழ்க / சர்வே ஜனா சுகினோ பவந்து என்று சொன்னாலும், சொல்லாவிட்டாலும், அந்த மனப்பான்மை இருக்க வேண்டும். இந்தியா போன்ற பல மத, பல இன, பல மொழி நாட்டில் ஜிஹாத் என்ற பதம் ஒலிக்கக் கூடாது. அது வேற்றுமையை வளர்க்கும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s