திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இன்று தஞ்சை பெருவுடையார் கோயில் 1000 ஆண்டு கொண்டாட்டத்தில் மலேசியா சிங்கப்பூர் இலங்கை மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தங்களது சொந்த செலவில் பத்மா அவர்களின் இமெயில் அழைப்பினை ஏற்று அவர் அனுப்பிய குறுந்தகடு வாயிலாக நாட்டிய ஒத்திகையினை அவர்களே மேற்கொண்டு இவ்விழாவிற்கு ஒரு சேர எந்த ஒத்திகையும் இல்லாமல் ஆயிரம் பேர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இன்று கருவூர் தேவர் ஏற்றிய பாடலுக்கு ஆடிய பொழுது இந்திய அரசர்களில் கடல் கடந்து பேரரசு அமைத்த ராசராசசோழனுக்கு உலக நாட்டில் இருந்து வந்த நாட்டிய கலைஞர்கள் ஆடி சிறப்பித்தது பெருமையான விசயம். இந்நாட்டியத்தில் திரைபட நடிகர் நடிகை ஒரு சிலர் கலந்து நாடடிய மாடினார்கள் . பத்மா அவர்கள் இரண்டாமயிரமாண்டு கொண்டாட்டம் நடக்க வேண்டும் அப்போது தன் தலைமையில் ஆயிரம் கலைஞர்கள் ஆடினார்கள் என்பதை அறியும் வண்ணம் கோயிலின் ஏதாவது ஒரு மூலையில் கல்வெட்டு வைக்க வேண்டுமென முதல்வரையும் தொல் பொருள் துறையினரையும் கேட்டு கொண்டார். ஒத்திகை இல்லாத நிகழ்ச்சி என்பதால் கொஞ்சம் ஒருங்காக இல்லாவிட்டாலும் நான்கு திசைகளிலும் நாட்டிய கலைஞர்கள் ஆடியது முப்பரிமான நாட்டி நிகழ்வாக ஆனது. ஆயிரம் அழகிய நாட்டிய நங்கைகளை ஒரு சேர பார்ப்பது இந்திர லோகம் தரையில் இறங்கி வ்நதது போல் இருந்தது. இதற்கு ஏற்பாடு செய்த அனைத்திந்திய பரத நாட்டிய சங்கம் தஞ்சை சங்கம் தமிழ்நாடு அரசு பத்மா சுப்பிரமணியம் மற்றும் ஆயிரம் பரத நாட்டிய கலைஞர்களுக்கு தமிழர்கள் சார்பில் தமிழன் என்பதால் பெருமிதத்துடன் மனதார நன்றி களை தெரிவித்து கொள்கிறேன்.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s