காமன் வெல்த் விளையாட்டில்  பளுதூக்கும் வீராங்கனை  தங்கம் வென்றவர் தனது காமன்வெல்த் கிராமத்துக்கு செல்ல  எந்த ஊர்தி வசதியும் காமன்வெல்த் அமைப்பு செய்து கொடுக்காததால் 5 மணி நேரம்  அங்குமிங்கும் அலைந்து  கடைசியில் சொந்த செலவில் ஆட்டோவில் சென்று உள்ளார். அமைப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு துண்டு  போட்டு சீட் பிடிப்பதற்க்குதான் நேரமிருக்கும்  வீராங்கனைகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.  உகாண்டா வீரர்கள்  மூவர்   காமன்வெல்த்  விளையாட்டு  திடலில் ஏற்பட்ட திடீர் விபத்தில் காயம் ஏற்பட அதற்கு எந்த மருத்துவ உதவியும் உடன் செய்யப்படவி்ல்லை.   பென்னரும்  கில்  வருத்தம் மட்டும்  தெரிவித்து உள்ளார்கள.ஷிலா தீட்சித் அவர்களின் பெயரை நியூசிலாந்து தொலைகாட்சி  காரன் ஒருவன்   அசிங்கமாக உச்சரித்து  அவரை அவமானப்படுத்த ஷிலா தீட்சித் பெருந்தன்மையாக விட்டு விட  இந்திய அரசாங்கம்  பெரிது படுத்தி  அந்த தொலைகாட்சி  மன்னிப்பு கேட்டும் மசியாமல்  விரைப்பாக இருக்கிறது.  சரியானது   தான் என்ற  போதிலும்  . விளையாட்டு திடலில் நடந்த விபத்துக்கு  இந்திய அரசு ஏன் உகான்டா வீரர்களிடம்  வருத்தம் தெரிவிக்கவில்லை.

யார் இந்தியாவை மன்னித்தாலும்    காமன்வெல்த் விளையாட்டு நிகழ்வுக்காக  டெல்லியை விட்டு காலி செய்யப்பட்ட 4 லட்சம் ஏழைகளும்    ஆயிரக்கணக்கான  பெட்டி கடை சிறுவியாபாரிகளும் ,  1000 கணக்கான  பிச்சைகாரர்களும்   மன்னிக்கவே மாட்டார்கள்.

இந்த விளையாட்டில்  ஒரே ஆறுதல்  மகிழ்ச்சியான விஷயம்   தங்க பதக்கங்களையும்  வெள்ளி பத்க்கங்களையும் வெணகல பதக்கங்களையும்  வென்று எடுக்கும்  நமது வீரர்கள் தான்.

ஏழ்மையை ஒழித்த பிறகு தான்   வளர்ச்சி திட்டங்கள் விளையாட்டு  ஆராய்ச்சி  பாதுகாப்பு செலவினம்  என்றால்    என்றைக்கு நடக்கும். அக்கம்பக்கத்தில்   பசியோடு இருக்கும் நமது வீட்டில்    சாப்பிடாமலா இருக்கிறோம்.   நமது தலைவர்கள் நம்மிடம் இருந்து வந்தவர்கள் தானே .  பல ஆயிரம் கோடி செலவு செய்து நாட்டின் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். நாம் வேடிக்கை யாவது  தொலைகாட்சியில் பார்ப்போம். வேற என்ன செய்து விட முடியும்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s