மின்னணு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் யாருக்கு தாங்கள் வாக்களித்தோம் என்பது தொடர்பாக ரசீது அளிக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய மூவர் கொண்ட குழு ஒன்றை தேர்தல் [^] ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இந்திரேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு வாக்காளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து ரசீது பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வார்கள். தங்களது ஆய்வு முடிவை தேர்தல் ஆணையத்திடம் இக்குழு அளிக்கும். அதைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் யாருக்கு வாக்களிததார்கள்  என்பதை   வாக்குச்சாவடி அலுவலர் கூட தெரிந்து கொள்ள கூடர்து    ரகசியமானது என சொல்லிவிட்டு    யாருக்கு வாக்காளர் வாக்களித்தார் என்பதற்கான ரசீது யார் கொடுப்பார். கொடுப்பவர்களுக்கு வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என தெரிந்து விடும் அல்லவா . தானியங்கியாக ரசீது  வந்தாலும்  வெளியே வந்தவுடன், வாக்காளர் பணம் வாங்கி வாக்களிப்பவராக இருந்தால்   பணம் விநியோகித்தவர்  பணம் வாங்கி  சரியாக வாக்களித்தாரா என்பதை கண்டறியத்தான் பயன் படும்.  ஆகையால்  பணம் கொடுத்து  வாக்கு புடுங்கும் வேட்பாளர்களுக்குத்தான்  நல்லது. பிரிண்டர் சரியாக வேலை செய்யாவிட்டால் வாக்கு பதிவை நிறுத்த வேண்டியது வந்து விடும். வாக்காளர் தான் வாக்களிக்க விரும்பிய சின்னத்தை விட்டுவிட்டு  அவசரத்தில் தவறுதலாக இன்னொரு சின்னத்துக்கு வாக்களித்து விட்டு இயந்திரம் தப்பாக  ரசீது தருகிறது என வாக்குவாதம் செய்ய வாய்ப்பு உண்டு.

நம்மை விட  அறிவியலில்  முன்னேற்றம் அடைந்த நாடுகள் எல்லாம்  வாக்குசீட்டு  முறையினை தொடர்ந்து கடைபிடிக்கிறது . நாம்  ஏன் மின்னனு வாக்கு எநதிரத்தை பயன் படுத்த வேண்டும். அப்படி ஒன்றும் உடனே வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு  அறிவிப்பது இல்லை.   5 கட்டம்  6 கட்டமாக தேர்தல் நடத்தி   6 வது கட்டம் முடிந்த பிறகு வாக்கு எண்ணப்பட்டு அறிவிப்பதற்கு எதற்கு மின்னனு வாக்கு எந்திரம். பழைய படி வாக்கு சீட்டு முறைக்கே செல்வது நலம். இல்லையெல்  தெலுங்கானா வில் போட்டியிட்டது போல் எல்லா தொகுதியிலும் அதிக வேட்பாளர்களை நிறுத்தி சில தொகுதிகள்  சில கட்சிகள்  பழைய  வாக்கு சீட்டு முறைக்கு   தேர்தல் ஆணையத்தை தள்ளிவிடும அபாயம் ஏற்படும்.

எது எப்படியோ  பணம் வாங்கி வாக்களிதது அதற்கு ரசீது கொடுப்பது என்பது கடையில்  பொருள் விற்கப்பட்டதற்கு வழங்கும்  படடியல்( பில்)  போல ஆகிவிடும்.  பணம்  கொடுத்து வாக்கு கொள்ளை அடிப்பவர்களை தடுக்கவோ பிடிக்கவோ என்ன முயற்சி செய்யலாம் என்பதை விட்டு விட்டு ரசீது கொடுகக  ஆராய்ச்சி செய்வது அரசியல்கட்சிகள் செய்யும்  கூத்தைவிட பெரிய கூத்தாக இருக்கிறது

 

 

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. maduraisaravanan சொல்கிறார்:

    பணம் கொடுத்து வாக்கு புடுங்கும் வேட்பாளர்களுக்குத்தான் நல்லது. பிரிண்டர் சரியாக வேலை செய்யாவிட்டால் வாக்கு பதிவை நிறுத்த வேண்டியது வந்து விடும். வாக்காளர் தான் வாக்களிக்க விரும்பிய சின்னத்தை விட்டுவிட்டு அவசரத்தில் தவறுதலாக இன்னொரு சின்னத்துக்கு வாக்களித்து விட்டு இயந்திரம் தப்பாக ரசீது தருகிறது என வாக்குவாதம் செய்ய வாய்ப்பு உண்டு// may be . thanks for sharing.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s