சமீபத்தில் தமிழகஅரசு விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் தருவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து பெரிய விவசாயிகள் தங்களது வயல்களில் பொருத்திருந்த புது மின் மோட்டார்களை கழட்டி விட்டு காயலான் கடையிலிருந்து பழைய மோட்டார் வாங்கி தங்களது வயல்களில் மாட்டி அரசின் இலவச மின் மோட்டரை வாஙக் ஆயத்த வேலைகளை தொடங்கினார்கள். இதனால் 2000 ரூபாய் பெறுமான பழைய மோட்டார்கள் கூட 4000ரூக்கு விலை போயின. அதனை தொடர்ந்து ஒரு கூத்து . யாரோ புதிதாக தரும் மின் மோட்டாருக்கு மீட்டர் பொருத்திவிடுவார்கள் என புரளியை கிளப்பிவிட்டார்கள் . விவசாயிகள் சஙகம் உடனே கூடி மீட்டர் பொருத்த கூடாது. பழைய மோட்டரை எடுத்து செல்லகூடாது . எல்லாருக்கும் மின் மோட்டார் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இன்றைக்கு என்னவென்றால் வியாபாரிகள் வயதாகி வியாபாரம் செய்ய முடியாமல் போனால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்கள.
இவர்கள் எல்லாம் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார்கள் 3 வேளையும் அரசாங்கமே சோறு பொங்கி போட்டு ஊட்டி விடவேண்டும் கை கழுவி வாய் துடைத்து விட வேண்டும். பொழுது போக்க எந்திரன் டிக்கட் எடுத்து அரசாங்க கொடுக்க வேண்டும் . பிள்ளைகளுக்கு நகை நட்டு போட்டு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் வைப்பார்கள். எங்கே அடுத்த தேர்தலில் வாக்கு குறைந்து விடுமோ என அரசாங்கமும் இவர்கள் சொல்வதை கேட்டு கொண்டிருப்பது தமிழ்நாட்டை எங்க கொண்டு போய்விடுமோ.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

3 responses »

  1. என். ஆர். சிபி சொல்கிறார்:

    கொடுத்தா என்ன தப்புங்குறேன்! அரசு அலுவலர்களுக்கு சம்பளம்! பொது சனங்களுக்கு இலவசம்! எல்லாம் ஒண்ணுதானே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s