அருந்ததிராய்  அவர்கள்  காஷ்மீர்  இந்தியாவின் ஒருங்கினைந்த பகுதியாக இருந்ததில்லை என சொன்னதால்  காங் பாஜக  போன்ற கட்சிகள் தேசவிரோதமாக பாவித்து  கண்டனம் ஆர்பாட்டம் செய்தார்கள்  ஒருவர் வழக்கு வேறு தொடுத்து உள்ளதாகவும் செய்தி. அரசு பெருந்தன்னையு்டன்? வழக்கு தொடுக்க வில்லை என்றும்   சட்டப்படியான நடவடிக்கை எடுக்காமல் விடுப்பதாகவும்   தெரிவித்தது. அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என நினைப்பது  ஜனநாயகத்தில் விட்டு நழுவி அதற்கெதிரான பாதையில் முதல் அடியெடுத்து வைப்பது போன்றது. நம் நாட்டின்  வெளிநாட்டு கொள்கைகள்  நாடாளுமன்றத்தில் கூட கலந்தலோசித்து  ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  மேற்கத்திய நாடுகளில்  அரசின் எல்லா நடவடிக்கைகளை விமர்சிக்க உரிமை உள்ளது. ஈராக் போரில் அமெரிக்கா  இங்கிலாந்து கலந்து கொண்டதை எதிர்த்து  மக்கள் பலவிதமான விமர்சனங்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.  ஆனால்  ஈராக் சதாமை மக்கள் ஒரு கதாநாயகனாக இந்தியாவில் நினைத்து  போதும்  அரசு  அமெரிக்க விமானங்களுக்கு மும்பையில்  மத்திய அரசு   பெட்ரோல் நிரப்பி அனுப்பியது.

 

விடுதலையான பிறகே இன்றைய இந்தியா உருவானது.  இனைப்புக்ள பற்றி மனசாட்சியுடன்  வரலாற்றை  படித்தால் அதில்இந்திய அரசாங்கம் சரியாக நடந்து கொண்டதா என தெரியவரும்.   கஷ்மீர்  1947 ல் இந்தியாவுடன் இணைய வில்லை.  1948 ல்   பாக்கிஸ்தானின்  படை கஷ்மீர் மீது படையெடுத்து  பிடிக்க ஆரம்பித்தவுடன்  அவசர அவசரமாக அன்றைய கஷ்மீரின இந்து அரசர்   இந்தியாவுடன்   ஒப்பந்தம் போட்டு   சேர்த்தார். 1948 ல் தான் கஷ்மீர்  இந்தியாவுடன்  இணைக்கப்பட்டது.

 

நாம்  கஷமீர் என்று கூறும் போது   பாக் வசம் உள்ள  பாக் ஆக்கிரமிப்பில் உள்ள   POK யையும்  சீனா பிடித்து வைத்து உள்ள  அகாய்சீன் பகுதிகளும்  சேர்தது  தான்  கூறுகிறோம்  . அப்படி என்றால்  அருந்ததிராய் சொன்னது போல் இந்திய வரைபடத்தில் சொல்லப்படும்  காட்டப்படும் கஷ்மீர் எனும் முழு மாநிலம் ஒரு போதும்   இருந்ததில்லை.  ஆனால் ராய்  ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்   இந்தியாவில் உண்மையான பகுதியாக உள்ள கஷ்மீர் மாநிலத்தில் முழு ஜனநாயக முறையில்   ஒரு தடவையாவது தேர்தல் நடந்து உள்ளது என ஒத்து கொண்டே  ஆக வேண்டும்  அவ்வாறயின்   கஷமீர் இந்தியாவின் ஒருங்கினைந்த மாநிலமாக இருந்து தான் உள்ளது.   இந்தியாவிலிருந்து  விடுதலை கேட்கும்  கஷ்மீரிகள்   கஷ்மீரிலிருந்து விடுதலை கேட்கும்  லடாக,  பண்டிட் களுக்காக  ஜம்முவையும் விட்டு தருவார்களா. ராம் தாஸ்  தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டு மென்ற சொன்ன போது  எல்லாருக்கும் எவ்வளவு எரிச்சல் வந்ததோ அவ்வளவு   எரிச்சல் கஷ்மீர் மக்களுக்கும் வரும்.

கஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் போது  என்ன நிபந்தனைகளுட்ன இணைக்கப்பட்டதோ அதனை மதித்து  அம்மக்களின் உணர்வுகளை மதித்து  ஷேக் அப்துல்லா  குறைந்த பட்சம்   1955 முன்தாக உள்ள சூழ்நிலையினை உருவாக்கலாம்.  மற்றும்   ஆயதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கஷ்மீர்  ( வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் ) விலக்கி கொள்ள வேண்டும்.   வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கஷ்மீர் மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை பார்க்க  விரும்பினால் அவர்களுக்கு   வேலை வழங்கி ஓருங்கினைந்த  மாநிலமாக மாறுவதால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை ( காவிரி பிரச்சனை மனதில வந்தாலும்)   என  அவர்கள் உணர செய்யலாம்.   பிற மாநிலத்தரர் அம்மாநில மக்கள் விரும்பாத வரையில் அங்கு   அதிகமாக குடியேறுவதை  ஆதரிக்க கூடாது.   தூண்டக்கூடாது.

கல்லெறிந்த பாஜகவின்ரே    கஷ்மீரின் ஒரு பகுதியினை பிடித்து வைத்து உள்ள பாக்கிற்கு   பண  மற்றும் ஆயுத ஆதரவு இந்நாள் வரைஅளிக்கும் அமெரிக்காவை எதிர்ததும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்  உங்க கட்சி, காங்கட்சி தலைவகளின்  வீடுகளின  மீது கல்லெறிய  ஏன் தயக்கம்.   அகாய் சீன  பகுதியையும்  அருணாச்சல பகுதியையும் பிடித்து வைத்து  உள்ள சீனாவுடன் உறவுக்காக சென்ற உங்கள் தலைவர்  வாஜபாய்  வீட்டின் மீது கல்லெறிய மனம் வருமா. மொரார்ஜி தேசாய்  வங்காளதேசம் உருவானது  இந்தியா செய்த மோசமான செய்ல் என சொன்னார்  அப்போது அவருடன் கூட்டணி வைக்கவில்லையா.

ஒருவர் வீட்டின் மீது கலலெறிந்து  தான் நமது தேசபக்தியை காட்ட வேண்டுமா. இந்தியா   கிரிக்கெட்டில  வெற்றி பெறும் போது அடையும் மகிழ்ச்சியில் நமது தேசபக்தி விளங்காதா.

மாறுபட்ட கருதது  நமக்கு பிடிக்காததாக இருந்தாலும்   மதிப்பளிப்போம்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. YOGA.S சொல்கிறார்:

    விடுதலையான பிறகே இன்றைய இந்தியா உருவானது!நச்சுன்னு………………………..இருந்திச்சு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s