தொடர்வண்டியில்  ஒரு (விஏஒ ) கிராம நிர்வாக அலுவலர்  தனது நண்பரிடம் தனதுஅனுபவத்தை பற்றி தெரிவித்து கொண்டு இருந்தார். அது கொஞ்ம் சுவையாக இருக்க காதை திருப்பினால்

அந்த   விஏஓ ,  புதிதாக பணியில்  சேர்ந்தவுடன் அவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம்   அதனால் வருவாய் அலுவலர் சங்கத்தில் சென்று அவர்களிடம் விவரங்கள் கேட்டு  வேலை கற்றும் பார்த்தும் வந்து உள்ளார்.    ஒரு நாள்  வட்டாட்சியர் கூப்பிட்டு

சரி  வட்டாச்சியர் சொல்லி விட்டார் என  விஏஓ   இவரை போல  அந்த ஊர் காவல்நிலையத்தில்  புதிதாக  சோந்த கான்ஸ்டபிளை அழைத்து  முதல் நாள்  ஒரு லாரியை பிடித்து வெற்றி கரமாக வட்டாட்சியரிடம்  கொண்டு போய் விட  இவரை ஏகத்திற்கு பாராட்டி இவரை அனுப்பிவிட்டு  இவருக்கு தெரியாமல் லாரி உரிமையாளரிடம்   லாரியை வழக்கிலிருந்து  விடுவதற்கு பணம்  கேட்டு பெற்று கொண்டு உள்ளார். இது தெரியாத  விஏஓ  மாதம் மாதம இரண்டு லாரிகளை பிடித்து   வட்டாட்சியரிடம் ஒப்படைப்பதும் அவர்  லாரி உரிமையாளரிடம்  லஞ்சம் வாங்கி விடுவதும்  தொடர்ந்து உள்ளது.

 

ஒரு நாள்   அந்த விஏஓ வும் கான்ஸ்டபிளும்   ஒரு மணல் லாரியை பிடித்து  வட்டாட்சியரிடம் ஒப்படைத்து  கேஸ் விவரத்தை வெளியே  இருந்து எழுதி கொண்டு இருக்க   வட்டாட்சியருக்கு வந்த போனில்  அந்த தொகுதி  எம்எல்ஏ

“யோவ் என் வண்டியையே பிடித்து விட்டாயா    நாளை நீ   இந்த தாலுகாவில் இருக்க மாட்டாய்”

என சொல்லி மிரட்ட  வெளியே  வந்த வட்டாட்சியா   வழக்கை  எழுதி கொண்டு இருந்த விஏஓ வை கூப்பிட்டு

“நான் எழுதி கொள்கிறேன் நீங்க  போங்க” என சொல்ல ,

விஏஓ  அதற்கு

“எழுதி முடிக்க போறேன் சார்.   இன்னும் நாலு  லயன் எழுதினால் முடிந்து விடுமென ” சொல்ல

வட்டாட்சியர்   சொல்லவும் முடியாமல் விழுஙகவும் முடியாமல் ,   ” யோவ்   போன்னு சொன்ன போயா “என பைலை பிடிங்கி  விஏஒ வை  அனுப்பி விட்டு  எம்எல் ஏ வின்  லாரி யை விடுவித்து விட்டார்.  அடுத்த நாள்  விஏஓ   வருவாய் சங்கத்துக்கு செல்ல  அங்க  இவரது கதை  ஒடிக்கொண்டு இருந்தது  . எல்லாரும் அது எப்படி யா  எம்எல்ஏ லாரியை பிடித்தாய்.  வட்டாட்சியர் சொன்னார்  என  லாரியை பிடித்து  வேலையை தொலைத்து விடாதே என  ஆலோசனை வழங்கினார்களாம.

 

பின்  என்ன செய்வது என்று தெரியாமல்    பெரிய ஆட்களை  பிடித்தால் தானே பிரச்சனை வருகிறது  என   ஆற்றில்  மணல் அள்ளி கொண்டு இருந்த   மாட்டு வண்டி யை  பிடித்து வந்து வழக்கு எழுதிய பின்பு  வட்டாட்சியர் விஏஒவிடம்  சொன்னாராம்

” யோவ்  வண்டி காரன்   அபராதம் கட்டி வண்டியை திரும்ப எடுத்து செல்லும் வரை  மாட்டையும் வண்டியையும் நீ தான் பார்த்து கொள்ள வேண்டும்  மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான பொறுப்பு “என சொல்லி விட

விஏஓ  மாட்டையும்  வண்டியையும்  கிராமச்சாவடி  கொண்டு சென்று  கட்டி போட்டு வைக்கோல்  எல்லா போட்டு  சாணி அள்ள வேண்டிய நிலைக்கு போய்  மாடு ஒடிவிடக்கூடாது என கயிற்றால் கட்டி போட்டும்  மாடு ஓடி போய்விட்டது

“சார் நான் தான் பிடித்து கட்டினேன்” என  தலையாரி முதல்  சிற்றேவலர்கள் வரை  விஏஓ விடம் பொய் சொல்லி  பணம் பறித்து கொண்டார்களாம்  வண்டிக்காரனுக்கு விதிக்கப்பட்ட தண்டம்  ரூபாய் 450 யை  வண்டிகாரனை கட்ட சொல்லி  பலதடவை  கடிதம் அனுப்பியும் அவன் வராமல் போக  மாட்டை பாதுகாப்பது  விஏஓக்கு பெரிய  வேலையாய போய்விட   வட்டாட்சியரிடம்” மாட்டை விஏஓவின் வீட்டுக்கு கொண்டு போய் கட்டி போட்டு பத்திரமாக பார்த்து கொள்கிறேன்” என சொல்ல்

“அது தப்பாய் போய் விடும்  .  கிராமச்சாவடியில் தான்  மாடு  இருக்க வேண்டும் மாட்டு காரன் தண்டம் கட்டும்  வரை  நீதான  பார்த்து கொள்ள வேண்டு மென” வட்டாட்சியர்  சொல்லி விட்டாரா ம்

 

இந்த கதை வருவாய் சங்கத்தில்  ஒரு நகைச்சுவை நாடகம் போல்  தினமும் பேசப்பட என்ன  செய்ய என தனது தலையெழுத்தை  நொந்து  நாட்களை கடத்தினர் நாலு மாதம் கழிதது   வண்டிக்காரன் வந்து மாட்டையும் வண்டியையும்   450 கட்டி திருப்பி சென்றாராம்.  ஆனால் விஏஓவுக்கு   மாட்டை பராமரிக்க  850 ரூபாய் செலவாகி போச்சாம்

.   விஏஓ வேலையில் இந்த மாதிரி சிக்கல் இருப்பது  நமக்கு தெரியாமல்    இருக்கிறது

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s