அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைகழகம்  நடத்திய ஆய்வில வேலைக்கு போகும்  தாய்மார்கள்    வேலைக்கு செல்லும் தந்தைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக  தூக்கத்தில் இருந்து எழுந்து தங்களது குழந்தைகளை கவனி்க்கிறார்கள் என   கண்டறிந்து உள்ளது.ஆய்வாளர் சாரா பர்கர்ட்   பாலினத்திடையே  பெண்கள் கவனிக்க பிறந்தவர்கள் எனும் எண்ணம் மேலோங்கி உள்ளது.இரவில் சுமார் 44 நிமிட அளவுக்கு பெண்களது  தூக்கம் கெடுகிறது.

HWE_017.resize

குழந்தைகள் வளர  வளர  இரவில்  எழுவது குறைகிறது.  1 வயது குழந்தை உள்ள   32 விழுக்காடு வேலைக்கு போகும் பெண்கள்  தங்களது குழந்தை கவனிக்க இரவில் எழுந்து விடுவதாக சொன்னார்கள் .  ஆனால்  ஆண்களில் இது 11 விழுக்காடுதான்.

1 முதல் 2 வயது குழந்தைகள் உள்ள குடும்பத்தில் 10 விழுக்காடு பெண்கள்  2 விழுக்காடு ஆண்கள் இரவில் எழுந்து குழந்தைகள கவனிக்கிறார்கள்.

3 வயது முதல்  5 வயது வரையுள்ள  குடும்பத்தில்   3 விழுக்காடு பெண்கள்  1 விழுக்காடு ஆண்கள் இரவில் எழுந்து குழந்தைகளை கவனிக்கிறார்கள்.

வேலைக்கு செல்லும்  பெண்கள் முதல் 6 மாதத்தில் தாய்பால் புகட்டவதற்காகவே அதிகமாக  எழுகிறார்கள்.

பெண் தனியாக குடும்பத்தை நடத்தினால்  28  லிழுக்காடு பெண்கள் குழந்தைகளை கவனிக்க இரவி்ல் எழுகிறார்கள் . தனியாக  குடும்பத்தை கவனிக்கும் ஆண்  4 விழுக்காடுதான் இரவில் எழுகிறார்கள்.
அரிதாக ஒரு சில  ஆண்கள்   பெண்ணை விட  இரவில் எழுந்து குழந்தைகளை கவனிக்கும் தாயுமாணவனாக இருப்பது உண்டு .
இதற்கெல்லாம்  அடிப்படை ஆண்  பொருளீட்டு வதும்  பெண்  குடும்பத்தை பேணுவதும்  எனும் சமுதாய அமைப்புதான் .

அடிக்கடி இரவில் எழுந்து குழந்தைகளை கவனிப்பதால் அவர்கள் தூககம் தடைபடுகிறது அதனால் உடல்நலம் குன்றுகிறது . வேலையில் திறமை குறைகிறது.

சாராவின் ஆய்வு முடிவுகளை படித்து சில விஞ்ஞானிகள் ”  பெண்கள் இரவில் எழுந்து குழந்தைகளை கவனிப்பதற்கு காரணம்  அவர்கள் முளை  குழந்தைகளின் அழுகுரலை எளிதாக கண்டறிநது விடுவது தான” என கூறி உள்ளார்கள.
Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. chollukireen சொல்கிறார்:

    தூக்கத்தில் கூட குழந்தைகளின் மீதுள்ள கவனம் சிதறுவதுமில்லை. குறைவதுமில்லை. தாய்மையின் முக்கியத்துவம் கூடவே பிறந்த தனித்தன்மை என்பது என் எண்ணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s