லோக்சபா  தொலைகாட்சியில்   நேற்று இத்திரைப்படம்  காட்டப்பட்டது.2008 ஆம்  ஆண்டுக்கான நாட்டு ஒருமைப்பாட்டுக்கான விருது இப்படம்  பெற்று உள்ளது.

முந்தி எல்லாம்  டிடி  மெட்ரோவில் பிறமாநில  சிறந்த படங்களை  ஒளிபரப்பி  செய்த  சேவை இப்போது   இந்த  தொ.கா  செய்கிறது.  படம் எப்படி இருக்குமோ என  பார்த்தால் படம் ஒரு காவியம்

முதல் காட்சியில் ,  மகாபாரத்தில்  நடக்கும்  சகோதர  சண்டை காட்சி  தெரு கூத்தாக நடந்து கொண்டிருக்கிறது  . மக்கள்  ரசித்து பார்த்து கொண்டிருக்கும் போது   அந்த அசாமி  கிராம  மக்களின்  குடிசைகள்  அவர்களின் எதிரிகளான  நாகர்கள் தீ வைத்து  கொளுத்தப்பட்டு    நாசமாகின்றன.  தீயில் அந்த கிராமத்து குடிசைகளும் உறவுகள்  பலரும் இறந்து போகின்றனர்.

தீயில்  இறந்து போன தங்களது சொந்தங்களை நினைத்து  ஒவ்வொருவரும்  வருந்தி  அவர்களின் நினைவுகளை  நினைத்து பார்ப்பது போல்   காட்சிகள் வருகின்றன.  படத்தை மஞ்சு போரா என்பவர் இயக்கி உள்ளார்.  சிறந்த  இயக்கம் .  படத்தின்  கதாநாயகி ரூபம் சேடியா   வாழ்ந்து காட்டி  உள்ளார்.

நமது கதை நாயகர்கள் வாழும் கிராமம் அசாம் மாநிலத்துக்கு சொந்தமானது   அசாம்  நாகாலாந்து எல்லையில் இருக்கிறது.ஆனால்
இந்த கிராமத்திற்கு  வேலை செய்ய ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாகர்கள் அப்பகுதியை தங்களது நாகாலாந்துக்கு சொநதமானது என கூறி   கிராமத்தின்  பூர்விக குடிகளான அசாமி மக்களை  ஆக்கிரமிப்பு காரர்கள் என  சொல்லி  அந்தகிராமத்தை காலி செய்து  போக சொல்லுகிறார்கள்   தங்களது அந்த கிராமம் அசாம் பகுதிதான்  உணர்ந்திருப்பதாலும்    பிழைப்பிற்கு வேறு வழி தெரியாதாலும்  அசாமி குடும்பங்கள்   நாகர்களின் அச்சுறுத்தலுக்கும் அவர்களின்  அடிஉதைகளுக்கும் கொடுமைக்கும்  நடுவே   நாகா  ரவுடிகளுக்கு அவர்கள் வரியென  கேட்கும்  பணத்தை  கொடுத்து  தொலைத்து விட்டு  அந்த கிராமத்திலேயே இருக்கிறார்கள்.

அசாம் அரசும்  அந்த எல்லை பிரச்சனையினை தீர்கக  பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்தி கொண்டு  இருக்கிறது . ஆனால் தீர்வு காணப்படாமல்  இழுத்து கொண்டே செல்லுகிறது  அதனால்  அசாமி மக்கள் தங்களது சொந்த மண்ணிலேயே அந்நியர்களாக  நாகர்களால் நடத்தப்பட்டு வருகிறார்கள.அந்த பகுதி நாகாலாந்துக்கு போய்விடுமென  நம்பும் அசாம் அரசு ம் அந்த கிராமத்துக்கு சாலை வசதி கூட செய்து  தர தயங்குகிறது.

நாகா ரவுடிகள் வைத்த தீயில்   கதாநாயகி  ரூபத்தின்  ஒரு வயது கூட ஆகாத ஆண்குழந்தையும் அவரது மாமியாரும்    கொல்லப்பட்டு விடுகின்றனர்.  ரூபம்  இரவில் தூங்கம் போது   அவளது கனவில்    அவள் , வயலில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது   அவளது மகளிடம் இருக்கும் அவளது மகன் பாலுக்காக அழுவது போன்றும் அவனை சமாதான படுத்த   பாட்டு  பாடி தாக்காட்டி அதன் பின்  தாய்பால் கொடுப்பது போல்  கனவு வருகிறது  திடுக்கிட்டு எழுந்த  ரூபம்  தனது கச்சை பாலால் நனைந்து கிடப்பதை கண்டு   தனது இறந்து போன மகனை எண்ணி அழுது தனது இரண்டு மார்புகளை கைகளால்  அமுக்கி கொணடு  வீறிடுவது  பயஙகரமான சோகம்.

மழை பெய்யும பொழுது தனது  மகள் மகனுடன்   ஆற்றில் ஆடி ஆட்டம் பாட்டாம் அவளுக்கு நினைவு வந்து   அந்த பாடலை பாடி  அழுது கொண்டு மழையில் தன் உறவுகள்  எரிக்கப்பட்டு  இட்த்தில் தரையில் புரண்டு  மயங்கும் காட்சி   மனதை பிழிகிறது.

நாகர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்க்ளில் முன்னொர்கள்அந்த கிராமாம்   அசாமியர்களுக்கு சொநதமானது  தான் என சொல்லுகிறார்கள் ஆனால் அதை  நாகா இளைஞாக்ள் உதாசீன படுத்தி விட்டு    தீ  பிடிக்கும் போது தப்பிய   அசாமிய  இளைஞன் ஒருவனை வெட்டி கொன்று விடுகிறார்கள. அவன் நாகா பெண்ணை காதலிக்கிறான்.  அவர்கள் பேசும்  காதல் வசனத்திலேயே   ” நீ நாகா தலை வெட்ட முடியுமா  அவர்களை எதிர்த்து  என்னை எப்படி  திருமணம் செய்வாய் “என  நாக இனத்தை சேர்ந்த அவன்  காதலி கேட்க  ” உனக்காக நான்  என் தலையை கொடுப்பேன் “என சொல்ல ” நான் எப்படி முண்டததையா கல்யாண செய்ய முடியும் “என அவள் கேட்பாள்.  அங்கு காதல் கூட  இன எல்லை  போராட்டத்துடன முடிச்சு போடப்படுகிறது.    காதலன் தன் இன மக்களால் கொல்லப்பட்டு கிடப்பதை  கண்டு அவள்  புலம்புகிறாள்.

படத்தில்  அசாம் அரசு அலுவலர்கள்   இந்த பிரச்சனை தொடர்பாக பேசிக்கு கொள்ளும் போது  எல்லையென  ஒன்று இல்லாமல்  இருந்தால்  நன்றாக இருக்கும் மென சொல்ல  எல்லை என்பது  பூந் தோட்டத்திற்கு போடும் வேலி போன்றது என  ஒரு வசனம்  வருகிறது.   நாகா இன வயதான ஒருவர்   கதாநாயகியின்  இறந்து போன  இறக்கவில்லை என்றும குழந்தை மலைக்கு அந்த பக்கம்  உள்ள  பகுதியில்  உள்ளது  என சொல்ல  அந்த விஷயத்தை  அசாமி இளைஞன்  கதாநாயகியிடம் சொல்ல  மழை பெய்யும் அந்த இரவிலேயே  சென்று  குழந்தையை கொண்டு வந்து விட வேணடு மென  அந்த தாய்  பதைபதைக்க  கடைசியில் எல்லாரும் காலையில் போய்  கூட்டி வருவது என முடிவு செய்கிறார்கள். நாமும் கூட  குழந்தை அங்கிருக்க வேண்டுமென  நினைத்து பதறுகிறோம் . காலை விடிகிறது   அந்த காடசிகளின் பதிவு அருமை   அந்த கிராமத்து பெரியவர்கள் கதாநாயகி எல்லாரும் குழந்தையை தேடி பெரியவர் சொன்ன  இடத்திற்கு செல்லுகிறார்கள்.  வழியில் ஒரு தாய் வைத்து இருக்கும் குழந்தையை பார்த்து கதாநாயகி ஓடி போய்  என் குழந்தை என  பார்ப்பதும் அந்த குழந்தை தனது இல்லையென ஏமாற்றத்துடன் மீண்டும் நடந்து  நாகா பெரியவர் சொன்ன வீட்டை அடைகிறார்கள்.   அந்த வீட்டு  முற்றத்தில்  தொட்டிலி்ல்  குழந்தை உறங்கி கொண்டு இருக்கிறது. ஓடி சென்று  தொட்டிலில் பார்க்க  அவளது குழந்தை மாதிரி இருக்கிறது ஆனால் அவளுக்கு தன் குழந்தை தானா என சந்தேகம் வர   கூட வந்தவர்கள்   தாய்பால் கொடுக்க சொல்ல  கதாநாயகி குழந்தைக்கு  பால் கொடுக்க  அந்த குழந்தை  பால் குடிக்காமல்  முகத்தை திருப்பி அழுகிறது.   அப்போது வீட்டினுள் இருந்து வரும்  அந்த குழந்தையின் உண்மையான தாய்  பால் கொடுக்க  குழந்தை  பால் குடிக்கிறது. அதை ஏக்கத்துடன்   கதாநாயகி பார்ப்பதாகவும்  பல அசாமி தாய்கள் தங்கள்  குழந்தைகளுக்கு பால் புகட்டும்  காடசிகளுடன் படம் முடிகிறது.  அசாம் அழகாக உள்ளது அழகாக படப்பிடிப்பு உள்ளது

மனதில் ஒரு தாக்கத்தை எற்படுத்தி விட்டது இப்படம்.   இந்தியாவிலுளள  எல்லா மாநிலங்களிலும் எல்லை பிரச்சனை உள்ளது    தமிழகம் -கேரளா   தமிழகம் -கர்நாடகா  கர்நாடாகா -மகாராஷ்டிரா பஞ்சாப் -சண்டிகார் அசாம் -நாகா, நாகா – மணிப்பூர்    என  எடுத்து காட்டலாம்.  ஆனால் எல்லை பிரச்சனையில் ஒரு கிராம மக்களின் வாழ்வு எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது  என இந்த படம் போல்  சொல்ல வில்லை. சொந்த கட்ச தீவை  நமக்கு தெரியாமல் கொடுத்து விட்டு நமது மீனவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கும் அவலம் தான எனக்கு நினைவுக்கு வந்தது.  எல்லை இல்லாவிட்டால் பிரச்சனை  இல்லை என்ற ஒரு எணண்ம் உதித்த வேளையில்

“மனிதன்  நடோடியாக  எல்லையில்லாமல்  திரிந்த போது கூட  ஒரு இன மக்களை துரத்தி விட்டு அந்த வளமான இடங்களை கைபற்றி அவர்களை கீழானவர்கள்  என சொல்லி நடத்தியும் வந்த வரலாற்று உண்மை நெற்றியில் அடித்தது

 

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s