எனது மகளை அழைத்து பெருங்களத்தூரில் காத்திருந்த போது   வெளியுரிலிருந்து பேருந்துகள் நின்று செல்வதும்  அதில் இருந்து பயணிகள் இறங்கி  மாநகர பேருந்து களை பிடிக்க அல்லாடுவதும்  அவர்களுக்கிடையே  தானிகள் (ஆட்டோ) நுழைந்து அழைப்பதும், சில சமயம் பேருந்துகள்  இறங்கி நிற்கும் பயணிகளை மோதுவது போல் வந்து நிற்பதும்    தானிகாரர்கள் கேட்கும் கொள்ளை கட்டணத்தை பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டு செல்பவர்களும்  மறுத்து பேருந்துகளை நோக்கி செல்பவர்களும்  மாய்  ஒரு கூட்டமான நாடகம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது 10  12  கல்லூரி பெண்கள்   நின்று கொண்டு இருந்தார்கள்   . அப்போது  சிதம்பரத்திலிருந்து  வந்த ஒரு பேருந்து நிற்க எல்லாரும் இறங்கிய பிறகு நடுததர வயது பெண்ணும்  ஒரு 60 வயதிற்கு மேலானாவரும் இறங்கினார்கள. அவரால் நடக்க முடியவில்லை. அவரை  கை தாங்கலாக அழைத்து செல்வதை பார்த்த தானி ஓட்டுநர்கள்  அந்த பெண் அருகில் வந்து  தானி வேண்டுமா  என கேட்க அவரும் ஆமாம் என பகர   எங்கு போக வேண்டும் என கேட்ட பொழுது அந்த அம்மா  சானடோரியம் என சொல்ல   150 ரூபாய் வாடகை என சொல்ல  அந்த அம்மா மறுக்க  தானி ஓட்டுநட்டுநர்  140 ரூபாய் எனச்சொல்ல அந்த அம்மா 125 கேட்க  தானிக்காரர்கள் மறுத்து  ஏதோ முணுமுணுத்து கிட்டு சென்று விட்டார்கள். அந்த அம்மா அவரை  கைதாங்கலாக மாநகர பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து சென்றது.  அங்கே நின்ற கல்லூரி பெண்களில் ஒருவர்  கைபேசியில் ஏதோ பேசினார். கொஞ்ச நேரத்தில் ஒரு அழைப்பு வர  கைபேசியில் பேசிய படி அங்கிமிங்கு பார்த்து  அவர் கைபேசியில் அழைத்தது( கால்டாக்சி)அழைப்பு ஊர்தி வர அதில் நண்பர்களில் 5 வரை அனுப்பி விட்டார். பின்னையும் அங்கமிங்கும்  பார்க்க   அவர்அழைத்த இன்னோரு அழைப்பு ஊர்தி வர  அதில் அவரும் மற்ற பெண்களும்  ஏறி சென்று விட்டார்கள்.   இன்றைய மாணவிகள் எவ்வளவு புத்திசாலிதனமாக  தானிக்காரன்  கேட்கும் வாடகையைவிட   அழைப்பு ஊர்தி வாடகை  குறைவு என்பதை புரிந்து சட்டென முடிவு செய்து  வேலையை கணகச்சிதமாக முடித்து விடுகிறார்கள் என நிணைத்து  கொண்டிருந்தேன். என் மகளும் அவளது தோழியும்   சாலையை கடக்க முயற்சி செய்து  சிக்னல் விழுந்த உடன்  நிற்கும் ஊர்திகளுக்கிடையே நுழைந்து வந்து சாலையை கடந்து வந்தார்க்ள.  சூழ்நிலைக்கேற்ப  நமது பிள்ளைகள் மாறி வருகின்றனர் .அதேவேளையில்  நகர பேருந்தில் நின்று பயணிக்கும் போது  மேலே உள்ள கம்பியை பிடிக்கவேண்டு மென தெரியாமலும் இருக்கிறார்கள்.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s