குண்டு உடம்பு  உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்கிறார்கள்.அவர்கள்     உடற்பயிற்சியால் எரிக்கும் கலோரிகளை விட  அதற்குபின் அவர்களுக்கு ஏற்படும் பசியால்  அதிக கலோரிகள் உள்ள உணவை சாப்பிடுகிறார்கள் அதனால் அவர்கள் உடல் எடை குறையாமல் அப்படியே இருக்கிறது.  அவர்கள் சதாரணமாக  அதாவது உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது  சாப்பிடும் அளவை விட  உடற்பயிற்சிக்கு பின் அதிகம் சாப்பிடுகிறார்கள்.  உடம்பு எரிக்கும் கலோரியை மீட்க பசியை ஏற்படுத்தி விடுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இதனை அறிந்த போதிலும்  உடற்பயிற்சி இதய தசைகளை  வலுவாக்கி நல்ல உடல்நலத்தை தருவதால்  உடற்பயிற்சி செய்வதால் உடல்எடை குறைய வாய்ப்பில்லை என்பதை தெரிவிக்க மறுக்கிறார்கள். அதீத உடற்பயிற்சி உடல் தசைகளுக்கு அதிக தொந்தரவை தருகிறது.   மேலும்  அவர்கள்  நாட்களின் பிற பகுதியில்  பிற  உடல் நடவடிக்கைகளை செய்யாமல் இருக்கிறார்கள் .உதாரணமாக  மாடிபடியில் ஏறாமல்  மின்தூக்கி உபயோகிப்பது.  நடந்து செல்ல வேண்டிய தூரத்திற்கு காரில் செல்வது. வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் வைத்து கொள்வது  போன்ற பிற அன்றாட உடல் செயல்களை செய்யாமல் இருக்கிறார்கள்.  ஒரேயடியாக தசைகளை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட இந்த மாதிரி செயல்களை செய்வது பசியை பெருக்கி நம்மை அதிகமாக சாப்பிட வைக்காது.

மனிதர்களிடம்  அதிகமாக உண்ணும் உணவை  தசைகளில் சேமிக்கும்  தன்மை உள்ளது.  எலிகள்  போன்றவை அதிக உணவை உட்கொண்டால் அவை பழுப்பு கொழுப்பாக  மாறிவிடும் . அப்போது  எலிகள் தங்களது உடற்சக்தி  நிறுத்தி கொள்கின்றன. அதனால் எலிகளின் உடல் வெப்பம் அடைகிறது அந்த வெப்பத்தில் அதிகபடியான கொழுப்பு எரிந்து விடுகிறது. நமக்கு வெள்ளை கொழுப்பு  இருக்கிறது. அது சோந்து கொண்டே போகிறது.

எனவே  எடை குறைப்பது  நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தது. உடற்பயிற்சி மகிழ்ச்சி தரும்.  அதித உடற்பயிற்சி அதிக பசியை தந்து  உடலை குண்டாகவே வைத்திருக்கும்  உடற்பயிற்சி செய்துவிட்டு அதனால் ஏற்படும் பசிக்கு அதிகமாக சாப்பிடாமல்    சாப்பிடுவதில் கட்டுப்பாட்டுடன்  நடந்து கொண்டால் உங்களது எடை குறையும்.

முழு கட்டுரை

http://www.time.com/time/health/article/0,8599,1914857-4,00.html

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s