பெருங்களததூர் ‌பேருந்து நி‌லையத்தில் காலையில்  என் மகளின் பேருந்து வரும் வரை காத்திருக்கையில் அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஒவ்வொரு ‌‌பேருந்து வரும் பொழுது  ஓடி சென்று யாராவது  சவாரி வருவார்களா என ‌பேருந்து களின் வாசலி்ன் முன் போய் நிற்பதும்  சவாரி படியாமல்   போவதும்  வருவதுமாக இருந்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் கேட்கும் கட்டணம் அநியாயமாக இருந்தது. அதில் வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  சுவராசியமாக தனது பிரதாபத்தை அளக்க தொடங்கினார் .செவி மடுத்தபோது
ஒரு நாள்  இரவு  வெளியூரில்  இருந்து  ஒரு பயணி இறங்கியதாகவும் விமான நிலையம் செல்ல அவருடைய  ஆட்டோவை ‌பேசியதாகவும்  பயணி 70ரூபாய் செல்ல இவர்  100ரூபாய் சொல்ல  தடித்த வார்த்தைகளால்  பேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே  இரவு சேவை ‌பேருந்து வந்து விட அந்த பயணி  ஆட்டோகாரரை  வேண்டாமென தடித்த வார்த்தைகளை  உ‌பயோகபடுத்தி சொல்லி விட்டு ‌ பேருந்தில் ஏறி செல்ல ஆட்டோ ஓட்டுநரும் ‌பேருந்தை தொடர்ந்து செல்ல தாம்பரம் நெருங்கையில்   இரவு பேருந்து பிரேக்டவுன் ஆகிவிட  விமான நிலைய செல்ல வேண்டிய பயணி  அவசர அவசரமாக  இந்த  ஆட்டோ ஓட்டுநரிடம்   மீண்டும் சவாரிக்கு அழைக்க   அப்போது  ஆட்டோ ஓட்டுநர்  கடவுள் இருக்கிறான் என்றும்  தம்மிடம் பேரம் பேசி சண்‌டை போட்டுவிட்டு பேருந்தில் சென்று விட்டு  தற்போது தனது ஆட்டோவிலே ஏற வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதை நினைதது கொண்டாராம். அந்த பயணியிடம் பின்பு விமான நிலையம் செல்ல 150ரூபாய்  வாங்கிவிட்டு விமானநிலைய  நுழைவுப்பாதையில் இறக்கி விட்டு வந்துவிட்டதை பெருமையாக சொல்லி கொண்டு இருந்தார் . ஆட்டோனா சேட் பசங்களு்க்கு சவாரி செல்ல வேண்டும் அவனுக தான் கசடம்ம ‌கேட் ட காசை ‌கொடுப்பான்  என்று  பேச்சை  நீட்டி கொண்டிருந்தார். என் மகளின் கல்லூரி பேருந்து வந்து விட நானும் வந்து விட்டேன்.
இந்த நிகழ்வின் படி   கடவுள்  இருக்கிறானா இல்லையா

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s