காங்கிரஸ் கட்சி யில் பொறுப்பில் உள்ள  ஒரு பிரமுகரிடம் பேசிய போது  காங்கிரஸின் பெரும் தலைகளுக்கு திமுக கட்சி மாதம் மாதம்  பெரும் தொகை கொடுத்து  வருகிறது.  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  சில லட்சங்கள் மாதம் தோறும் வழங்கப்படுவதால்   தற்‌போதைய பெரும்தலைகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்வதையே  விரும்புகிறார்கள் .  இளைஞர் காங்கிரஸில்  அதிமுக பக்கம் மாற்வேண்டும்  என  விரும்புபவர்கள் இருக்கிறார்கள் என்றும்   ஆனால்    மொத்த காங்கிரசினர்கள்   ஸ்பெக்டரம்   திமுக வை மட்டும் வீழ்த்தாமல் தங்களையும்  கீழே தள்ளி விடுமோ எனும் அச்சம் நிலவுவதாகவும் கூறினார்.

ஆனால் கடந்த  தேர்தலில்    காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் தான் திமுக- காங் கூட்டணி  தோல்வி அதிகமடைந்தது. அந்ததொகுதிகளில்  அதிமுக வெற்றி பெற்றது என்பதையும் ,பெரும்பாலான தமிழ் உணர்வு உள்ளவர்கள்  திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் தான் காங் க்கு வாக்களித்தார்கள்.  இல்லையென்றால் காங்-கை  தமிழர்கள் கை கழுவி இருப்பார்கள்.  அதிமுகவுடன்  கூட்டணி வைத்தால்  காங்க்கு சாதகமாக இருக்கும்  என்று திட்டவட்டமாக சொல்ல வியலாது.   திமுக தலைவர் மதிக்கின்ற அளவுக்கு  அதிமுக காங்கிரஸை மதிக்குமா என்பது சந்தேகம் . மேலும் மத்தியில் ஆட்சியை காபாற்ற திமுகவின் தயவு  காங்கிற்கு தேவை. அதே நேரத்தில்  திமுக  காங்கை  கை கழுவினால்  திமுகவின்  மீது  மத்திய அரசின்  நடவடிக்கைகள் தீவிரமாகி விடும் என்றும்  சொல்ல நினைத்தேன் . சரி எதற்கு தேர்தல் நேரத்தில்  வீணாக புளிளை கரைப்பானேன் என விட்டு விட்டேன்

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s