கமல்  எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  நான் உங்களது ரசிகன். ஆனால் என்னால் கூட மன்மதன் அம்பை உடகார்ந்து பார்க்க முடியவில்லை.இந்த படத்தை  பார்க்கலாம்  ரகத்தில் கூட சேர்க்க முடியாது.   படம் பார்க்கும் போது  படத்தின் உள்ளே  சென்று பாத்திரங்களுடன் ஐக்கியமே ஆக முடியவில்லை.  ஏதோ ரோட்டில் போகும் போது  பார்க்கும் காட்சிகள் மனதில் பதியாது  போல்  இந்தபடம். .இதில் நீங்கள் நடிக்க வேண்டிய அவசியம். நீங்க இந்த படத்தில் எந்த இடத்தில் நடித்து இருக்கீறிர்கள்.  ஒரு காட்சியிலாவது   கமலால் தான் இந்த நடிப்பை செய்ய வியலும் என சொல்லும் அளவில்  ஒன்றும் இல்லை. மூனாந்திர நடிகர்கள் கூட நடித்து விட இயலும். இந்த கதையை வெளிநாட்டிலும்  கப்பலிலும்   எடுக்கவே தேவையே இல்லை. அவசியமில்லாமல்  கப்பலுக்கு செலவு செய்து  அதிக படச்செலவை  செய்து விட்டு அப்புறம்   சிடியில் படம் பார்ப்பதால்  பெரும் நஷ்டம் வந்து விட்டது என உங்கள் திரைப்பட உலகம் சொன்னால் என்ன நியாயம் . இந்த படத்தை 100 ரூ பாய் கொடுத்து பார்க்க ஒன்றுமில்லை. இதில் வேறு விஜய்  தொ .காவில்  பெருமை வேறு  பீத்திகிறது. நந்தலாலா , மைனா , விண்ணைதாண்டி வருவாயா போன்ற படங்கள் இளம் இயக்கநர்களிடமிருந்து வந்து  தமிழ் திரை உலகம் நிமிர்கிற வேளையில் குப்பையாக ஒரு படம் எடுத்து நாங்கள் எப்பவும் இப்படிதான் என சொல்ல வைத்து வீட்டிர்கள் . இந்த படத்தை  புரோமொட்  பண்ணுகிறேன் என்று   வேறு  தொலைகாட்சியில் வேறு தொந்தரவு. ஆண்டுக்கு ஒரு படம் பண்ணும்  நான் மதிக்கும் ஒரு நடிகர்  அந்த ஒரு படத்தையும் குப்பையாக நடித்தால் எரிச்சல் எரிச்சலாக வருகிறது.  வெளியே நல்லா இருந்த பாட்டு கூட படத்தில் எரிச்சலாக இருக்கு.  மாதவன் சங்கீதா  குழந்தைகள் அங்காங்கு நடித்து உள்ளார்கள். அவர்கள் நடித்த அளவுக்கு கூட நீங்கள் நடிக்க வில்லை  கமல் . பேசாமல்  சிறப்பு  தோற்றம் என்   இந்த படத்தில் உங்கள் பெயரை போட்டிருக்கலாம். நீல வானம் பாடல் முயற்சியை தவிர வேறு ஒன்றும்  படத்தில் குறிப்பிடும் படியாக  இல்லை. அழகான இடங்களில் அபத்தமாக  படப்பிடிப்பு செய்யப்பட்ட ஒரு மோசமான படம்.  எந்திரன் மாதிரி குப்பை படங்களுடன்  இந்த குப்பையையும் சேர்த்து விட வேண்டியது தான்.   இனி படங்களை இரண்டு வகையில் பிரிக்க வேண்டும் வீட்டில  சிடியில பார்க்ககூடிய படம்  (எந்திரன் , மனமதன் அம்பு) திரையரங்கு சென்று படம் பார்த்து கெளரவிக்க வேண்டிய படம்  (மைனா  நநதலாலா ) கமல் இன்னும் எத்தனை நாள்   நீங்களும்  ரஜினியும் இளம்நடிகையுடன்  பொருந்த காதல் கொள்வீர்கள். கமல் உங்களால் 200 ரூபாயும் அரைநாளும்  வீண்.  அடுத்த படமாவது நல்ல படமாக நல்ல இயக்குநரிடம் நல்லகதையில  நடிக்க பாருங்கள். உங்கள்  பெயரை நம்பி  படம் பார்க்க வரும் எங்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வைக்காதீர்கள்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

8 responses »

 1. Gopi சொல்கிறார்:

  Superb. Me too a Kamal Fan. What I thought is reflected in every word.

  • manimalar சொல்கிறார்:

   gopi
   thanks. better luck next time to kamal
   v.pitchumani

  • manimalar சொல்கிறார்:

   வரதராஜன்
   அவர் என்ன முயற்சி செய்தார் என்று தெரியவில்லை. லோகேஷன் தேர்வில் மெனக்கிட்டிருக்கலாம். வசனம் சில இடங்களில் யதார்த்தமாக உள்ளது. மற்றபடி என்ன இருக்கு ஊர்வசி முகத்தில் தோன்றிய சோகம் தான் கமலை பார்த்து நமக்கு ஏற்படுகிறது்

 2. Varadharajan சொல்கிறார்:

  அது ஏனோ தெரியவில்லை கமல் தன் படத்தை பற்றி TV’யில் சொல்லும்போது ரொம்ப முயற்சி எடுத்து பண்ணியதாக சொல்லுவார். ஆனால் படம் யாருக்குமே பிடிக்காது. குணா படத்தை தான் மிகவும் விரும்பி ரசித்து எடுத்ததாகவும் ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை யோசித்தால் அவருக்கும் ஒரு creativity’யில் ஒரு limit இருக்கிறதோ என்று தான் தோன்றுகிறது.

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  இரண்டொரு இடங்களில் த்ரிசாவும் நடித்திருக்கிறார். அதை மறந்துவிட்டீர்களே!.

  • manimalar சொல்கிறார்:

   ஊர்வசி நடித்திருக்கிறார் என்றால் த்ரிசா எந்த இடத்தில் நடித்திருக்கிறார் என தயவு செய்து சொல்லுங்கள். ஷோபா இப்ப வந்த களவானி ஒவியா அளவுக்காவது த்ரிஷா நடிக்க வேண்டாமா. என்னமோ போங்க

 4. Jawahar சொல்கிறார்:

  கமலஹாசன் நடிப்பைத் தவிர இதர விஷயங்கள் செய்யும் போதெல்லாம் இந்தப் பிரச்சினை வருகிறது

  http://kgjawarlal.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s