விலைவாசி உயர்வுக்கு மழை தான் காரணம் என்பது  முழு பூசனிக்காயை  சோற்றில் மறைக்கும்  வாதமாகும. அதில் மழையை  யாரால் கட்டுபடுத்த வியலும் எனும் கிண்டல் வேறு. விலைவாசி உயர்வுக்கு  ஆன் லயன் வணிகமும்   பெருமுதலாளிகளின் கூட்டும்   ஏற்றுமதியும்   காரணமென்பதை   மக்களிடம் மறைக்க வியலுமா.  விலையை கட்டு படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால்  நியாயவிலைக்கடையில்  அரிசி பருப்பு  வழங்குவதை  கூறுகிறார்கள். காய்கறியை எங்கே போய் வாங்குவது.  ஏற்றமதியால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது  என ஒரு வாதம் அர‌சு சார்பில் வைக்கப்படுகிறது.  விவசாயிகள் உணவு பொருட்களின்  விலை யேற்றத்தால்  லாபம் சம்பாதித்தால் கூட பரவாயில்லை . இடைதரகர்களும் பதுக்கல்காரர்களும்   விலையேற்றத்தால் வரும் லாபத்தை  99  விழுக்காடு  தின்றுவிடுகிறார்கள்.

நம் நாட்டில தட்டுபாடு வந்தாலும் பரவாயில்லை என ஏற்றுமதி  நமது நாடு செய்கையில் பாக்கிஸ்தான் மட்டும் இந்தியாவிற்கு  வெங்காய ஏற்றுமதி செய்ய மறுத்தது என்பது பெரும் வியப்பாக  இருக்கிறது. கார்கில் போர் சமயத்தில் கூட பாக்கிஸ்தான் சர்க்கரையை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது. இவ்வளவிற்கும்  அந்த சமயத்தில் இந்தியாவில்  சர்க்கரை  உற்பத்தி நல்லபடியாகவே  இருந்தது

விவசாய் அமைச்சர்  விலை வாசி பற்றி கேட்டால்   இப்போதைக்கு குறையாது என்பார் . பிரதமரோ   விளைச்சல்  பெருகியவுடன் விலைவாசி குறைந்து விடும் அல்லது இன்னும் ஒரு மாதத்தில் குறைந்து விடும் என்பார்  . இதைப்போல் எத்தனையோ  மாதங்கள்  அவர் சொல்லி கடந்து விட்டன.

உச்ச நீதிமன்றம்   வறுமை கோட்டிற்கு மேல் வாழும் மக்களுக்கு  ஏன் மான்ய விலையில்  உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என  அரசை கேட்டாலும் . அ‌ரசு எல்லாருக்கும் இலவசமாக வழங்கும் பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதற்கு தீர்வாக

விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடை செய்ய வேண்டும்
குறைந்த பட்சம் மாநிலத்திற்குள்  ஓடும் ஆறுகளை இணைக்கலாம்.
உணவுபொருட்கள் விலைஏற்றம்  எற்படுமாயின் கட்டுபாடற்ற இறக்குமதி செய்ய  அனுமதி

ஆன்லயன் வாத்தகத்திலிருந்து உணவுபொருட்கள் விற்பதை  விலை நிர்ணயிப்பதை தடை செய்ய வேண்டும்.
உணவு பொருட்களை  கொண்டு செல்ல மான்ய வாடகை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
இடைதரகர்களை குறைத்து   விவசாயிகளே சுயஉதவிகுழுக்கள் மூலம்  உணவு பொருட்களை விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களுக்‌கிடையே உணவுபொருட்கள் தடையில்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும்
கடத்தல் காரர்களை குண்டா சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்
தரிசுபகுதிகளை விவசாய நிலமாக்க வழிவகை காணவேண்டும்
நமது தேவைக்கு போக மீதியைதான் ஏற்றுமதி செய்ய வேண்டும்
மக்களின்  கஷ்டம் தெரிந்த  விவசாயிகளின் நிலைமை தெரிந்த  நல்ல மனிதரை விவசாய அமைச்சராக்க வேண்டும்

மக்களை பற்றி கவலைப்படுகிற நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் நல்ல வாக்காளர்கள் வேண்டும்

 

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s