உச்ச நீதிமன்றம்   சுவிஸ் வங்கியில்  பணத்தை சேமித்து வைத்து இருப்பவர்களின் பெயரினை வெளியிட அரசுக்கு என்ன தயக்கம் என  ஒரு வழக்கினை விசாரிக்கையில் கேட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்த புதிதில் வீராப்பாக  சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை கொண்டு வர ஆவன செய்யப்படும் என அறைகூவல் விட்டார் நமது பிரதமர் . அதற்கு  சட்டம் ஏற்றுவதால்  அங்குள்ள பணத்தை நம்நாட்டுக்கு தருவிக்க வியலாது என ஜகா வாங்கி விட்டார் .  ஆனால் பொருளாதாரம் படுத்த போது அமெரிக்கா   சட்டம் ஓன்று ஏற்றி  அரசுக்கு தெரியாமல் உள்ள சுவிஸ் வங்கியுள்ள அந்நாட்டு பணத்தை தருவித்து கொண்டது. அமெரிக்காவினால் ஜெர்மனியால் முடியும் போது  நமது நாடும்  என் சட்டம் ஏற்றி  நமது நாட்டு  அரசியல்வாதிகள் சினிமா நடிகநடிகைகள்  பெரும் பணமுதலைகள்  கள்ளத்தனமாக சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாதா?   பணக்காரர்களையும் தங்களது  கட்சிக்காரர்களையும் தோழமை கட்சிகாரர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் இதுகாறும் சும்மா இருந்து விட்டார்கள்  காங்கிரஸ்காரர்கள். அத்வானியே   சட்டம் இயற்ற ஒத்துக்கொண்டு சம்மதிக்கும போது  மேற்படி சட்டம் ஏற்றுவதில்  எந்த கஷ்டமும் இருக்காது.பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி குறைக்காமல் பெட்ரோல் விலையேற்றத்திற்கு  காரணமாக இருக்கும் மத்திய அரசு அனமத்தாக சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை உடன் தருவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதி மன்றம்  பிரதான எதிர்கட்சியான பாஜக  எல்லாரும் கோரிக்கை வைத்த பின்னும்   எந்த நடவடிக்கையும் எடுக்க விட்டால்  எல்லாரும் சேர்ந்து நாடகம் நடத்துகிறீர்கள் என  எண்ணம் வரும்.  மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள் . தேர்தலில் தூக்கி எறிந்து விடுவார்கள்.

 

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s