முன்னாள்  பாஜக ராஜ்யசபை உறுப்பினர் பிரஃபல் ஹேர்டியா , முஸ்லிம்கள்  ஹஜ் யாத்திரை செல்ல விமானச்செலவில் ஒரு பகுதியை அரசு மான்யமாக ஒவ்வொரு ஆண்டும் 280 கோடி ரூபாய்  வழங்கிவருகிறது. இது மக்கள்  வழங்கும் வரிபணத்தை அரசு வீணாக  செலவு செய்கிறது. அரசியலமைப்பு சட்டம்  பிரிவு 14  மற்றும்  27 க்கு முரணானது என உச்ச நீதிமன்றததில் வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற   28.1.11 அன்று  வழங்கியதீர்ப்பில்

“நாடு விடுதலை அடைந்த போது உள்ள சூழ்நிலையில்  அன்றைய ஆட்சியாளர்கள்  பிரதமர் நேரு போன்றவர்கள்  தீர ஆய்வு செய்து நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க  ஹஜ் பயண  மான்யத்தை அளித்து உள்ளார்கள். இந்திய நாட்டில் 92 விழுக்காடு மக்கள் உலகின் பிற பகுதியிலிருந்து குடியேறியவர்களின் சந்ததிகள். இதனை  கருத்திற்கொண்டே  விடுதலை அடைந்த போது  நமது நாட்டை ஒரு மதசார்பற்ற நாடாக நமது முன்னோர்கள் அறிவித்தார்கள் ” என்றும் கூறியுள்ளது.

மேலும்,  “280 கோடி ரூபாய் எனும் தொகை , மொத்தமாக வசூலிக்கும் வரிபணத்தில்  ஒரு சிறு பகுதிதான் எனவே பொறுமையுடன் இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும்   சில மாநில அரசுகள் கும்பமேளா போன்ற விழாக்களுக்கு இந்துக்கள் செல்ல  நிதி உதவி செய்வதாகவும் , மத்ய அரசு  இந்துக்கள் மானஸரோவர் செல்ல  மான்யம் அளிப்பதாகவும், சில  மாநில அரசுகள் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும்  பாக்கிஸ்தானில்  உள்ள  கோயில்களுக்கும் குருத்துவாரகளுக்கும்  முறையே  செல்ல   நிதிஉதவி அளிக்கின்றன. எனவே மத்ய அரசுக்கு ஹிஜ் கமிட்டி சட்டம்  ஏற்ற சட்டபூர்வமான  உரிமை உள்ளது  . மத்திய அரசு வழங்கும் ஹஜ் பயண  உதவித்தொகை பாரபட்சமற்றது “  எனவும்     தெரிவித்து  உள்ளது.

நாட்டின் ஒருமைபாட்டை காக்க இந்துக்கள் மட்டும் தான் பொறுப்பு உணர்வோடும் பொறுமையுடனும் இருக்க வேண்டுமா?.

மொத்த வரிபண்த்தில் வேண்டு மென்றால்  280 கோடி சிறு தொகையாக இருக்கலாம் . ஆனால்   அந்த தொகையை  கொண்டு    நிலவுக்கு இன்னொரு தடவை  நமது  விண்கலத்தை அனுப்ப இயலும்.

சில மாநிலங்களில்  இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள் அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கவாபடுகிறது. மொழி சிறுபான்மை எப்படி கணக்கிடப்படுகிறதோ அதைப்போல்  மத சிறுபான்மையும்  மாநில அளவில்   கணக்கிடப்பட வேண்டும் .அது தான் தர்மம் கூட.

கடவுள் இல்லை என்று  கடவுள் மறுப்பு  செய்யும் கட்சிகள் கூட   ரம்லான் நோன்பு க்கு சென்று குல்லா போட்டு கஞ்சி குடிப்பது  எந்த வகையில்  அவர்கள் கொள்கைக்கு நியாயம்.   கடவுள் மறுப்பு தலைவர்கள் ஆட்சிக்கு வந்து அமர்ந்தால் அவர்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்கள் . ஏன்  இந்து விழாக்களில் கலந்து கொள்ள தயங்கிறார்கள்.

அவர்களது தொலைகாட்சிகளின் பெயர் தமிழில் இல்லாததை கூட பெரிதாக  கருதுவது  இல்லை அதற்கு சில வியாக்கியானங்கள்   தெரிவிக்கிறார்கள்  ஆனால்  விநாயசதுர்த்தியை  முன்னிட்டு  இந்த திரைப்படம்  ஒளிபரப்பப்படும் எனக்கூட அறிவிப்பு செய்யமாட்டார்கள் . அன்றைய தின விடுமுறையை முன்னிட்டு என  பெரிய  மதசார்பற்ற வேடம் தரித்து  அறிவிப்பு செய்வார்கள்.

 

அரசாங்கம் என வந்து விடடால் செக்லர் என்பதற்கு தப்பாக எல்லா மதமும் சமம் என அர்த்தம் கொள்ளாமல் உணமையான அர்த்தம் கொண்டு  அதாவது  மதத்திற்கு அப்பாற்பட்ட அரசு  என அர்த்தம் கொண்டு    அமாவசை.  பெளர்ணமி  காலை அனுமதி ,  ரமலான் நோன்பு இருப்பவர்களுக்கு மாலையில் சீக்கிரம் செல்ல அனுமதி  போன்ற கூத்துகளை களைய வேண்டும் .

வாக்குவங்கிகளை மட்டும்  மனதில் கொண்டால் எந்த  நியாயமான சீர்திருத்தங்களையும்   எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  செய்ய முடியாது. விபி சிங்கால்  மணடல் கமிஷன்   அறிக்கையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்க முடியாது. அதனால் தான் பெரியார்  திராவிட கழகத்தை கடைசிவரை ஒரு மக்கள் இயக்கமாக வைத்திருந்தார்.

 

சட்டப்படி அல்லாமல் உணர்ச்சியினால் எடுக்கும் முடிவுகள் மற்ற உணர்ச்சிகளுக்கு ஊறு விளைவிக்கும்

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s