எங்க ஊரில் அதாங்க பெருங்களத்தூரில்   சிறி சிறி ரவிசங்கர் கடந்த  மாதம் 30 நாள்  நாத வைபவம் நிகழ்ச்சியை  பெரு விமர்சகையாக நடத்தி காட்டினார்..  என் மனைவி   மற்றும்  அவர்களது தோழிகள்   (  10 இல்லத்தரசிகள்  )அந்த கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்கள்.

நான் என் மனைவியிடம் ஏற்கெனவே ‌ கேட்டு கொண்டவாறு அங்கு போனவுடன்  போன்  பண்ணி ,  கூட்டம் இருக்கிறது. ஆனாலும்  இருக்க இடம் உள்ளது. வாருங்கள் என சொல்ல.    அப்போது 6  மணிக்கு மேல் ஆகி விடடதால்  நான்  மேற்படி விழாவிற்கு போவதை  கைவிட்டு வி்ட்டேன்.நான் போக வில்லை .

வர வர கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல பிடிப்பதில்லை.நாதத்தால் இறைவனை ‌அடையலாம் எனும் அடிப்படையில் இந்த வைபவம் நடந்தது  என கொள்ளலாம்.

எங்க நகரில் இருந்து என் மனைவியுடன்  சென்ற இல்லத்தரசிகளில்  எழு எட்டு  பேர்   போன  ஒரு  மணி  நேரத்திற்குள்   வந்து விட்டார்கள்.    ஏன்  சீக்கிரம் வந்து விட்டீர்கள்  என  நான்  கேட்க ,  போர் அடிக்கிறது  என சொல்லி விட்டார்கள்.

பிரபல பாடகர்கள் வந்து பாட்டு பாடுவார்கள் என எதிர்பார்த்து   போய்  சித்ரா மட்டும் வந்து பாட    பாடும்  மற்றவர்கள் யாரு  என புரியாமல் அந்த பெண்கள்  விழி பிதுங்கி  ஓடி வந்துவிட்டார்கள்.  சங்கரா தொலைகாட்சியில் மேற்படி நிகழ்ச்சியை   நேரடியாக ஒளிபரப்பு செய்வதாக   அந்த பெண்கள் சொல்ல. நான்  ஏர் டெல் டிஷில் போட்டால் அந்த  ‌சேனல் வரவில்லை. பின்  எம்‌ஹெச் 1  எனும் ஒரு சேனல்  மேற்படி நிகழ்ச்சி    பதிவு செய்து ஒளிபரப்பி   கொண்டிருந்தது.அதனை பார்த்தேன்

அதில் சிறி சிறி ரவி சங்கர்   ”லஞ்சம் அளிக்க கூடாது.   டாக்டர்கள் ஆண்டுக்கு ஒரு முறை   ஏழைகள் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும.  ஆசிரியர்கள்    மூன்று ஏழை குழைந்தைகளுக்கு இலவசமாக  டியூஷன் சொல்லி தந்து மேலுக்கு கொண்டு வரவேண்டும். இளைஞர்கள்  மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ”என கூட்டத்தை பார்த்து  தமிழிலும் ஆங்கிலத்திலும்   சொன்னார்.

அவரது் தமிழ்  கொஞ்சம் பிராமண வாடையுடன் இருந்தது. அவருக்கு தமிழ் சொல்லி கொடுத்தவர்கள்  அப்படி இருந்திருக்கலாம்.    அவர் தமிழ் பேசுவது பெருமையான விஷயம்.   அவரது தமிழ் அழகாக மழலையாக இருந்தது.  அது படித்தவர்களுக்கும்    நடுத்தரவர்க்கத்தினருக்கும்  மேட்டுக்குடி மக்களுக்கும்  மட்டும்  ஒரளவு புரியும் படியாக உள்ளது.. ஆனால் ஏழைகளுக்கு புரியும் படியாக இல்லை. அவர்களை கவரும் வகையில்  ரவிசங்கர் அவர்களின்  பேச்சை  தமிழக வாழும் கலை   அமைப்பினர்  தயார் செய்து  அளித்தால்  ஏழைகள் உள்பட எல்லாருக்கும் நல்ல கருத்துக்ள்   சென்று ‌ அடையும்.

என் மனைவி     ரூ 150 க்கு  சில கேசட்  புத்தகமும் வாங்கி வந்தார்.  போட்டு பார்த்தால்  ஈரோட்டில்   2004   2009  ஆகிய  ஆண்டுகளில் நடந்தரவிசங்கர்  கூட்டங்களில் காணொளிகள்   காட்சிக்கு வந்தது.   அந்த கூட்டங்களில்    சில   எண்ணங்கள் மீண்டும் மீண்டும்      ஆண்டுக்கு    திரும்ப சொல்லப்படுகின்றன

( உ.ம்.)  இநதிய   பட்சணஙகள்   ஏற்றுமதி,  கிரீஸ் நாட்டு சுற்றுலா    – நம்நாட்டில் சுற்றுலாவை   பெருக்குதல், இநதிய இளைஞர்களின்  ஆன்மீக ஈடுபாட்டு விழுக்காடு மற்ற நாடுகளை விட அதிகம் போன்ற செய்திகள்.

நல்ல விஷயங்கள் திரும்ப திரும்ப சொலவது நல்லது தான் .

இநதிய ஒருமைப்பாடு  என்றால் தமிழ்நாட்டு கலாச்சாரம்   பஞ்சாப் காஷ்மிர் ‌போன்ற மாநிலங்களில் அறிய ப்பட வேண்டும். அங்குள்ள கலாச்சாரம் இங்குள்ள மக்களால் அறியப்பட வேண்டும்.  தேவாரம்  திருவாசகம் போன்றவை வடஇந்தியர்களுக்கு போய் சேர  வேண்டும் ‌ அதன் வாயிலாக உண்மையான  ஒருமைப்பாட்டை  உருவாக்க வேண்டும் என்பது  எனக்கு பிடித்த  அவரது வாசகங்கள் எண்ணங்கள்.

பணக்காரர்கள் படித்தவர்கள் நடுத்தரமக்கள் அதிகம் அவரது கூட்டத்திற்கு  வருவதை விட  ஏழைமக்கள்  சிறி சிறி ரவிசங்கர் ‌ அவர்களின் கூட்டத்திற்கு அதிக வர வாழும் கலை அமைப்பினர்   பெரு முயற்சி எடுக்க வேண்டும்.

சிறு சிறு கதைகள் வாயிலாக சொல்லப்படும்  கருத்துக்கள்  ஏழைகளை எளிதாக சென்றடையும்.   ஏழை நிறைந்த நாட்டில் அவர்களுக்கு வழிகாட்டாமல்  நம்நாட்டை முன்னிறுத்த முடியாது.    5ஸ்டார் ஒட்டலுக்குள்  தயங்கி தயங்கி  நுழையும் நடுத்தர வர்கக்ம் போல், ஏழைகள்  ரவிசங்கர் கூட்டத்துக்கு தயங்கி தயங்கியே   உள்ள வராமல்  நின்று விட்டார்கள் . அதனை களைய  நல் முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

வாழ்க  நல் தொண்டு

 

 

 

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s