சாதிகள் உண்டடி பாப்பா
நீ வளர வளர தெரியும் பாப்பா

பத்தாவதில் கேட்பாங்க பாப்பா
நிறத்தை வைத்து சாதியை  கொள்வார்  பாப்பா

ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா
சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா
சாதி பகுப்புக்குள்ளும்  உயர்வு தாழ்வு உண்டு பாப்பா
ஒரு சாதிக்குள்ளும்  உயர்வு தாழ்வு உண்டு பாப்பா
சாதி பார்த்து காதலித்தால் காதல் கைகூடலாம் பாப்பா
கல்யாணம் என்றால்  கட்டாயம் சாதி உண்டு பாப்பா

கட்டும் தாலியில் சாதி உண்டடி பாப்பா
கலப்பு திருமண  பெற்றோரே என்றாலும்  தன் பிள்ளைக்கு சாதியில் பார்பார் பாப்பா
மதம் மாறினாலும் சாதி மாறாது பாப்பா
உயர்த்தி சொல்லியதால் மதத்தை  பிடித்து கொண்டிருக்கும் சாதி உண்டடி பாப்பா
வேட்பாளர் தேர்வில் சாதி உண்டடி பாப்பா
வாக்கு கேட்கும் போது  உன்சாதியை உனக்கே  ‌அறிமுகம் செய்வார் பாப்பா
சமுதாய பிற்போக்குக்கு   சாதியே  அடையாள மாய் கொள்வார் பாப்பா
அது உண்மையும் கூட பாப்பா
தேச தலைவர்களில்  சாதி அடையாளம் கண்டு  போற்றுவார் பாப்பா
திரைப்பட நடிகர்களிலும் சாதி பார்த்து ரசிகர் மன்றம் ‌அமைப்பார் பாப்பா

சுடுகாட்டில் கூட சாதி உ ண்டடி பாப்பா
வாடகைக்கு  குடி போனால் சாதியை துப்பறிவார்கள் பாப்பா
இந்தியர்கள்  சாதி  கூட்டம்  கூட்டமாய்  வாழ்வார்கள் பாப்பா
கடவுள்களில் கூட சாதி உண்டு  பாப்பா
கோயில்கள்  தேவலாயங்களையும் சாதி வாரியாக பிரிப்பார் பாப்பா
வளர்ப்பு பிராணிகளில் கூட சாதி பார்பார் பாப்பா
சாதிக்காக உயிரை மாய்த்து கொள்வார் பாப்பா
சாதிகளில் தாழ்வு மனப்பான்மை  குறைந்து உள்ளது பாப்பா
சாதிகள் இல்லாமல் போக வேண்டும் பாப்பா
அதற்கு ஒரு நல்வழி கண்டு பிடி பாப்பா

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

6 responses »

  1. Parthiban சொல்கிறார்:

    இன்றைய நவீன உலகின் பாரதியே,நல்ல வழி தேடி பல நாட்களாய் காத்திருக்கிறோம் ,வழி தான் கிடைக்கவில்லை,வலிகள் தான் அதிகரித்துக்கொண்டே போகிறது.என்ன செய்வதென்று தெரியாமல் நீங்கள் கூறிய பாப்பாவை போல் தான் இருக்கிறேன்…
    அருமையான பதிவு…வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்கள்…

  2. thangarajnagendran சொல்கிறார்:

    நல்லா எழுதியிருக்கிங்க ஆனா கொஞ்சம் கவிதை மாதிரி இல்லாம உரைநடைபோல் உள்ளது

  3. perumal.s சொல்கிறார்:

    UNMAIGALAI SNNINGA

  4. ஜாதிகள் இல்லையடி பாப்பா சொல்கிறார்:

    உங்களது இந்த பதிவை கீழ்க்கண்ட முகநூலில் உள்ள ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பக்கத்தில் பகிரிந்துள்ளோம். நன்றி http://www.facebook.com/permalink.php?story_fbid=300732166719270&id=186505848157421&ref=notif&notif_t=like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s