தேகம்    கதை  நன்றாக இருக்கிறது நண்பர்  என்னிடம்  தொடர்வண்டியில் கொடுத்து படித்து விட்டு மற்றொரு நண்பரிடம்  கொடுக்க சொல்ல  பூங்காவில் படிக்க ஆரம்பித்தேன் .

கதையின் நாயகன் சாருதானா எனும் சந்‌தேகம் சில இடங்களில் வருகிறது. சின்ன வயதில்   படித்த அந்த மாதிரி  புத்தகங்கள் தான் இந்த கதையை  படிக்கும் போது  நினைவில் வந்தது.

பன்னிக்கு காய் அடிப்பது  சாம்பல் பூசும் அந்த நிகழ்வுகளை நான் பார்த்து இருக்கிறேன். அதை போல் எங்க ஊர்(திருநெல்வேலியில்) ஆற்றாங்கரையில் உளள் சுடலை மாடன் கோயில் விழாவில்  சக்கலியர்கள்  பன்றியை   பலி கொடுப்பார்கள்   பலி கொடுப்பதை பார்த்ததில்லை. ஆனால் பன்னியை அடுத்த நாள் சுடுவதை அறுப்பதை பார்த்திருக்கிறேன்.   கதை நாயகன்  தோட்டி வே லை செய்யும்   குடும்பத்தில் பிறந்து எழுத்தாளனாகவும்  ரவடியின் நண்பனாகவும் இருப்பதை பற்றி கதை செல்கிறது. சக்கலியர்களின் வாழ்க்கை அவலங்களை   கதை தொட்டு  செல்கிறது. இந்த அளவுக்கு  யாரும் அவர்களின்  வாழ்க்கையை சொன்னதில்லை என நினைக்கிறேன்.அவர் சொல்லும  பீ முடுக்கு போலவே  எங்க மீனாட்சிபுரத்தில்  கீழத்  தெருவுக்கும்  அஹ்ராகாரதெருவிற்கும் நடுவில் முந்தி  இருந்தது. அங்குதான் பீ வண்டிகளை  நிப்பாட்டி வைப்பார்கள். இந்த கதையின் கதாநாயகன்  செய்யும் சித்ரவதைகள் பெருசாக  ஒன்றும் இல்லை. நம்ம ஊர் போலிஸ் இதை  விட பெரிசா  சித்ரவதை செய்வதை நிறைய தமிழ்படங்களின் காண்பித்து விட்டார்கள் . பீ கரைத்து வாயில் ஊற்றுவது    சாதாரணமாக  விஷம் அருந்தியவர்களுக்க தற்போது சில்  மருத்துவர்கள் கடைபிடிக்கும் பழக்கம் தான்.

ஆண்மை குறைவான  கதாநாயகனிடம்  அவன் செய்யும் மற்ற வேலைகளுக்காக  பெண்கள்  மயங்கிறார்கள் என்பதை நம்பவும்முடியவில்லை நம்பாமலும்  இருக்கவும் முடியவில்லை.

இதைப்போல்  மெயின் வேலை செய்யாமல்  மற்ற  வற்றை  உபயோகிக்கும்   ஒரு அறைகுறைக்கு  நிறைய  பெண்கள் வாடிக்கையாளராக இருப்பதை  நண்பர்கள் சொல்லி  கேள்வி பட்டி இருக்கிறேன்.

இன்ஸ்பெக்டரின் பையன்  ஒரு பெண் ணை காதலிக்க அந்த பெண் அவனது  காதலை  மறுக்க அவன் அந்த பெண்ணை கெடுத்து  அவள் முகத்தல் அசிட்  ஊற்றி விட  அவனை கொண்டு வந்து   கதைநாயகன் சித்ரவதை செய்வதை எல்லாரும் மன்மும் ரசிக்கும் .  அவனுக்கு இதை விட அதிக சித்ரவதை  கொடுத்திருக்க வேண்டுமென  நம்மை   சாரு நினைக்க வைக்கிறார்.

மற்றபடி   சில  நிகழ்வுகள் அவரது வலைதளங்களில் வரும் பெண்களின் காமகளியாட்டங்களை பற்றி  கட்டுரை போல்  இருக்கிறது.

சித்ரவதை செய்ய முடியாத ரவுடிகள் இருப்பார்கள் என்பதை சாருவின் நாய் …….  கதாபாத்திரம் நிருபிக்கிறது.    இன்று  நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில்   ஒரு குறும்படத்தை பற்றி  கே .பாலசந்தர் விமர்சிக்கையில்   சுஜாதாவில் கதையில் ஹாஸயம்  இருக்கும்  ஆனால் மனதை தொடாது என்பது  போல்  விமர்சித்தார்.  சுஜாதாவின்  ”அப்பா ” எனும் நாவலில்   சுஜாதா மனதை  தொடும் வகையில் எழுதியிருப்பார். சாருவின்  கதைகள் கிளு கிளுப்பாக இருக்கும் . அடித்தட்டு மக்களின்  கஷ்டங்களை தேகம் நாவலில் சொல்லி இருக்கிறார்

ஆனாலும் சாருவின்  கதைகள்  சாலையில்  நடந்து செல்பவன்  சாலையில் நடக்கும் நிகழ்வை   பார்த்தாலும் உள்வாங்கமல் சென்று கொண்டு இருப்பது போல்   எந்தவித பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கின்றன .

சாருவின்  எல்லா கதைகளையும்   படித்தவர்கள்  தயவுசெய்து   அவரது எதாவது ஒரு கதையாவது  மனதை தொட்டு  உங்களை  தூங்கவிடாமல்  அதாவது  மரப்பசு, அம்மா  வந்தாள்,  கடற்புறா,  ஜலதீபம்,  சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்கு போ போல் தொந்தரவு செய்தது உண்டா . அப்படி இருப்பின் அந்த புத்தகத்தின்  தலைப்பை தெரிவியுங்கள்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. அமர் சொல்கிறார்:

    தேகம் கதை நன்றாக இருக்கிறது என்று நண்பர் என்னிடம் தொடர் வண்டியில் கொடுத்து, படித்துவிட்டு மற்றொரு நண்பரிடம் கொடுக்கச் சொல்ல, பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்…

    இப்படி தொடங்கினால் நன்றாக இருக்கும். சாரு பாணியில் என்னை திட்டாதீர்கள். வலைதளங்களில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டு வரும் ஒரு நாவலை இன்னும் ஆழ விமர்சனம் செய்திருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s