எகிப்பதிய மக்களின்  விடுதலை சதுக்க போராட்டம்  கடைசியாக வெற்றி பெற்று விட்டது. முபாரக் நாட்டை விட்ட ஒடி விட்டார். ராணுவம்  தேர்தலுக்கு உறுதி அளித்துள்ளது. போராட்ட காரர்கள்   துணை ஜனாதிபதியை பொறுப்பு ஏற்‌பதை விரும்பினாலும்   ராணுவம் அதற்கு இசைவளிக்குமா என்பது  தெரியவில்லை. ராணுவம் விரும்பவது எல்லாம் போராட்டகாரர்கள் உடன் கலைந்து செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. 300 ‌பேரை  இழந்து பெறப்பட்ட வெற்றி. அவர்கள் செய்த தியாக மாபெரும் தியாகமாகும். ஆதிக்க சக்தியை  எதிர்த்து மக்கள்  ‌போராடி வெற்றி பெற்றதை கண்முன்னால் ( தொலைகாட்சி வாயிலாக)காண்பது  மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

மக்கள் ஒன்று சோ்ந்தால் எப்படிப்பட்டவர்களையும் கீழே இறக்கி விடலாம் . எகிப்திய மக்களின் போராட்டம்  பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவியதை கண்ட   போது மற்ற நாடுகள்  எங் கே நமக்கும்  ஆபத்து வந்து விடுமோ என அச்சம் அடைந்ததை    நம்மால் உணர முடிந்தது.

நம்ம இந்தியா கூட பயந்து போய்  எகிப்திய போராட்டம் தொடர்பான செய்திகளை  செய்தி  நிறுவனங்கள்  வெளியிடுவதை குறைக்க வைத்து விட்டது. முதல்  8 நாட்கள் விலாவாரியாக வந்த செய்திகள் படிபடியாக   தவிர்க்கப்பட்டதை   கண்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது.

தேவையற்ற பயம்.  நமது மக்களை தான் ஆண்டு ‌ஆண்டு காலமாய்  அவர்களது துன்பங்களுக்கு விதிதான் காரணம் என  நம்பவைத்து  தற்போது  விதி அவர்கள் இரத்தத்தில் ஊறி போய் விட்ட ஒரு விஷயமாகிவிட்டது. நாய் வந்து வாயில் ‌மொண்டுட்டு போனாலும்  –நாயை ஊச்ச விட்ட பெண்ணை ஊஷார் பண்ணுவதை ரசிக்கும்  கூட்டம் தானே  நாம்.

ஆதிவாசிகளை வனங்களை விட்டு விரட்டினால் நமக்கென்ன. லட்சகோடிகளில் கொள்ளை அடித்தாலும் அவன் தரும் ஆயிரத்தை வாங்கிவிட்டு வாக்களிக்க தயாராகிவிட்ட ஒரு ஈன ஜென்மங்கள்தானே நாம் .    இது  உங்க பணம்தான்  வாங்கி கொள்ளுங்கள்  ஆனால் வாக்கை எங்களுக்கு போடுங்கள் என  பொழிப்புரை கொடுக்கும் அரசியல்வாதிகள் நடிகர்கள் நிறைந்த நாடு நம் நாடு.

எகிப்து மாதிரி மக்கள் எழுச்சி வர  வாய்ப்பு இருக்கிறதா என்ன. ஏன் நம்  தமிழர்கள்  இப்படி சுரணை இல்லாமல் போய்விட்டார்கள் கோழையாக  பயந்தாங்கொள்ளிகளாக  வாழ்கிறார்கள் (என்னையும் சேர்த்துதான்) என்று யோசித்து பார்த்த போது அதற்கு காரணம் இதுவாக இருக்குமோ என எண்ணம் வந்தது

1. விதியை நம்புவதால்

2.நீண் ட  காலம்  ஆங்கிலேயர்க்கு அடிமை யாக இருந்ததால்

3.சமண மத புத்த மத  அகிம்சை வழிகளை பின்பற்றியதால்

4. சோறு கண்ட இடம் சொர்க்கம்   என பழகி விட்டதால்

5. சாதி பித்து பிடித்து அலைவதால்

6.. சில ஆயிரங்களுக்கும் பிரியாணி  குவாட்டர்  பிராந்தியில் மயங்கி விடும் பு்த்தி

7. சாமி மேல் சத்தியம் போட்டு விட்டு மாற்றி போட்டால் சாமி குற்றம் ஆகி விடும் என

நம்புவதால்

8. தான் சார்ந்து கட்சி  அவன் தலையையே  வெட்டினாலும் கட்சி விசுவாசம்   காட்டும்          மடமை

9. கல்வி அறிவு இன்மை.

10 படித்தவர்கள் பயந்து ஒதுக்கி விட்டது.

11 நல்லவர்கள் நமக்கு எதற்கு வம்பு இருக்கிற  பெயரை தக்க வைத்து  கொள்ளுவோம் எனும் எண்ணம்

12. சோம்பேறிகள்

13. தீக்குளிக்கு தெரியும் ஆனால்  அந்த உயிரை எதிரியின் உயிரை எடுப்பதில் விட தெரியாமை

14.எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடும் தன்மை.

15. பொது நலமின்மை.

இன்னும் எத்தனையோ.
வல்லம்  தொடும் தூரத்தி்ல்
இன மக்களின் வாழ்க்கை  சூறையாடப்பட்டபோதும்
சும்மா இருந்து விட்ட நம்மை நாமே  செருப்பால்
அடித்து கொண்டால் தான்   பாவம் விமோசம் கிடைக்கும்.

எகிப்து மக்கள் போல் எம் மக்கள் எழுச்சி அடைவார்களா.

அது கானல் நீர்தானா.
காலம் பதில் சொல்லுமா
வாகை தேவதை
தமிழன்  கழுத்தில் மாலை யிடுவது எப்போது.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

6 responses »

 1. thangarajnagendran சொல்கிறார்:

  //எகிப்து மக்கள் போல் எம் மக்கள் எழுச்சி அடைவார்களா.

  அது கானல் நீர்தானா.
  காலம் பதில் சொல்லுமா
  வாகை தேவதை
  தமிழன் கழுத்தில் மாலை யிடுவது எப்போது.

  நாள் விரைவில் வரும் தோழா

 2. பூனை சொல்கிறார்:

  எகிப்தில் முபாரக் சர்வாதிகாரியாக 30 வருடங்கள் இருந்துள்ளார். அதற்க்கு முன்பும் சர்வாதிகளின் ஆட்சிகள் தான். ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் எதுவும் கிடையாது .இவற்றுடன் வேலைவாய்பின்மை ஏழ்மையும் சேர மக்கள் எழுச்சி பெற்றனர் .இப்போ ராணுவம் ஜனநாயக தேர்தல் வைப்பதாக அறிவித்துள்ளது. இதை வைத்து கொண்டு இந்தியாவிலும் புரட்சி ஏற்பட வேண்டும் தமிழர்கள் இப்படி கோழையாக இருக்கிறார்கள் என்பது எல்லாம் சிறிதும் பொருத்தம் அற்றது .ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் புரட்சி வராது.

  • manimalar சொல்கிறார்:

   ஏழைகள் இந்தியாவில் மிக ஏழைகளாக மாறி கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கமான வளர்ச்சியாக தான் உள்ளது.lop sided development சர்விஸ் செக்டரில் மட்டும் வளர்ச்சியும் அதனால் வரும் அந்நிய செலவானி வருவது அதிகரிப்பும் உண்மையான வளர்ச்சியை காட்டகூடியதாக இருக்காது.முதன்மை தொழிலான வேளாண் தொழில் கவனிக்கப்படாமல் நலிந்து கொண்டு இருக்சிறது. விவசாயிகள் கடன் தொ ல்லையில் இறந்து கொண்டுஇருக்கிறார்கள் . தமிழர்கள் என்ற காரணத் திற்காக தமிழக மீனவர்கள் உயிர்கள் பலி போவதை கண்டு கொள்ளாமல் வாளாய் இருக்கிறது. காவிரி பிரச்சனை இன்னும் எத்தனை ஆண்டு ககு பின் தீர்க்கப்படும். கங் கையையும் காவிரியையும் இணைக்க பணமில்லை ஆனால்அதற்கு மேலான பணம் ராசாவிடம் கொள்ளை போய் உளளது. எத்தனை ஊ ழல் அதற்கு சொல்லப்படும் நொண்டி சமாதனாங்கள் மா ன்ய பொய்யில் உய ரும் பெட்ரோல் விலை உயர்வு அ தனால் ஏற்படும் மறற உயர்வுகள்.கருத்து சுதந்திரம் என்றால் ஏன் பினாயக் சென் சிறையிலடைக்கபட்டார்.
   ஊழலுக்கும் அநியாய விலைவாசி ஏறறம் .சிங்கள நாய்கள் ஈழ த் தமி ழரகளை கொல்ல து ணை போன இந்தஅரசுக்கு எதிராக
   ஒன்று திரள துப்பில்லாத தமிழர் நாம் கோழைகள் தான். அதற்காக இந்தியாவை எதிர்ப்பதாக கொள்ளக்கூடாது. தமிழர்களுக் கு எதிரான இந்திய கொள்கைளை மற்றும் அந்த கொள் கை யை வரைந்த கட்சியை எதிர்க்க ஓன்று
   சேர வேண்டு்ம் தமிழர்கள்

   • பூனை சொல்கிறார்:

    ஒரு இனத்தை நாய்கள்(சிங்கள நாய்கள்) என்று சொல்லும் அளவுக்கு இன குரோதம் நிறைந்தவராக இருக்கிறீர்கள். ஈழத் தமிழ் மீனவர்களின் வயிற்றில் பல காலமாவே தமிழக மீனவர்கள் தொடர்ந்து அடித்து வருகின்றனர். இன்று நடந்தது-
    http://www.tamilulakam.com/news/view.php?id=23185

   • manimalar சொல்கிறார்:

    ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை முள் வேலை முகாமில் வைத்து வதை செய்யும் ஒரு இனத்தை என்ன சொல்வது. இதை விட கேவலமாக சொல்ல வேண்டும். கேரள மீனவர்களும் தமிழக மீனவர்களும் கூட சண்டை போடுகிறார்கள். சிங்கள மீனவர்கள் யாரவது இந்திய கப்பற்படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி உண்டா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s