தேர்தல் கூட்டணி வியாபாரம் ஆரம்பித்து விட்டது.  தமிழகத்தை பொறுத்த வரையில் திமுகவும் அதிமுகவும் முக்கியமான கட்சிகள் என்பது யாவரும் ஒத்துக்கொள்ளும் விஷயம்.  அந்த கட்சிகளின் வாக்கு விழுக்காடு   உத்தேசமாக  திமுக 24 விழுக்காடு ,அதிமுக 23 விழுக்காடு என்ற நிலையில் இருக்கும். மற்ற கட்சிகளின் வாக்கு விழுக்காடுகள்  சந்தேகத்திற்கு இடமில்லாமல்  மெய்ப்பிக்கப்படவில்லை. இதில் பெரிய கொடுமை என்ன வென்றால் காங்கிரஸ் தனக்கு இன்னும் 12 விழுக்காடு வாக்கு வங்கி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தாங்கள் தான்  தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என நினைத்து கொள்வது தான்.  தேமுதிக   வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகிறது அந்த கட்சிக்கு தற்போது  6 லிருந்து  8 விழுக்காடு வரை இருக்கலாம்.  பாமக  மதிமுக  போன்ற கட்சிகள்  4 விழுக்காடு வாக்கு வங்கி உள்ளதாக நினைத்து கொண்டு இருக்கின்றன.

காங்கிரஸ் ,   திமுக விடம் 90 தொகுதிகள்   மற்றும்  ஆட்சியில் பங்கு கேட்பது விநோதமாக உள்ளது.காங்கிரஸ் திமுகவை தொகுதி பங்கீட்டில் ஒரளவு மிரட்டி பணிய வைக்க வாய்ப்பாக “ஸ்பெக்டரம்”  உள்ளது. எந்தளவுக்கு திமுக  காங்கிரசுக்கு பணிந்து போகிறது என்பது இன்னும்  சில நாட்களில் தெரிந்து விடும். காங்கிரஸை பின்னால் இருந்து முடுக்கும் ராகுல் காந்தியும் லேசில் விட்டு கொடுக்க மாட்டார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எல்லாம் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும் தொகுதிகளாக மாறும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  வெற்றி பெற்ற பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். கடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக  100 தொகுதிகளை எட்ட முடியாத நிலைமைக்கு காரணம் காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தது தான்  முக்கிய காரணம்.  அப்போது  விலைவாசி ஏற்றம் , ஸ்பெக்டரம்  ,தொடரும் ஊழல் செய்திகள் இல்லாத கடந்த தேர்தலில்யே அதிமுக  60 தொகுதிகள்  வரை வெற்றி அடைந்து உள்ளதை  இங்கு எண்ணி பார்க்க வேண்டும்.

தற்போது பாமக,   திமுக பக்கம் வந்துள்ளது  திமுகவுக்கு சாதகமான விஷயம் .இருப்பினும்   துருப்பு சீட்டு யார் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ள விட்டாலும் விஜய்காந்த்  கையில் உள்ளது. அவர் அதிமுகவுடன் உடன்பாடு வைத்து கொண்டால் வரும்  தேர்தல் , சமபலத்தில்  மோதும்  இரு கூட்டணி கட்சிகளை கொண்ட களமாக மாறும்.

இங்கு தான் காங்கிரஸ் தன்   வேலையை காட்டலாம். விஜய்காந்தை தனியாக நிற்க வைக்க கடந்த முறை மேற்கொண்டதாக கூறப்படும் “டெல்லி பயண பெட்டி “வாயிலாக இந்த முறையும் விஜய்காந்தை தனித்து  நிற்க வைக்க காங்கிரஸால் முடியுமானால்  திமுக கூடடணியின் வெற்றி   ஒரளவுக்கு உறுதி செய்யப்படும்.

ஈழ விவகாரத்தில்  காங்கிரஸ் மீது  பெரும் கோபத்தில் தமிழர்கள் உள்ளனர் .மீனவர் விவகாரத்தில்  திமுக  காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மீது சம கோபத்துடன் உள்ளார்கள். விலைவாசி விவகாரத்தில் மக்கள் மனநிலை எப்படி உள்ளது என தெரியவில்லை.  சிலர் யார் வந்தாலும் விலைவாசியை கட்டு படுத்த முடியாது என நம்புகின்றனர். பெரும்பாலான நடுத்தர மக்கள் இந்த விலைவாசி விஷயத்தில் ஆளும் கட்சியின் மீது  கோபத்தில் இருக்கிறார்களா இல்லை யா  என தெரியவில்லை. இந்த அமைதிப்படை எடுக்கும் முடிவு தேர்தலில் பெரிய கட்சிகளை புரட்டி போட்டு விடும்.

எத்தனை யோ  தேர்தல் சீர்திருத்தம் பேசும்  தேர்தல் ஆணையம் தேர்தலில்  எல்லா பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும்  . தேர்தலுக்கு பின் வேண்டுமென்றால்  கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம் என ஒரு கட்டுபாட்டை ஒரு விதியை கொண்டு வர வேண்டும் . அப்போது தான    தங்களது  வாக்கு வங்கி  பற்றி பீற்றி கொள்ளும் ஒவ்வொரு கட்சியின் வண்டவாளமும்   தண்டவாளம் ஏறும்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. S.M.Palaniswamy சொல்கிறார்:

    தேர்தலில் எல்லா பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும் . தேர்தலுக்கு பின் வேண்டுமென்றால் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம்

    Good and very important advice. Will they consider?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s