பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை,பிரண்டஸ் போன்ற நல்ல படங்களுக்கு பின் ஏன் நீண்ட  இடைவேளைக்கு பின் சிறப்பாக நடித்துள்ள படம் காவலன். தனது பிம்பத்தை இந்த படத்தில் உடைக்க முயன்று வெற்றி பெற்று உள்ளார் விஜய்.  ஊரில் உள்ள பெரியமனிதனின் பெயர் வைக்கப்பட்ட  விஜய்  அவரை போல் அடாவடி செய்ய விஜயை திருத்த அந்த பெரியமனிதனை காப்பாற்ற  மெய்காப்பாளனாக ‌ (பாடிகாட் ) ஆக அனுப்பட்டு செல்லுகிறார்  விஜய் . பெரிய மனிதனின் மகளான அசின்  விஜயை  கடுப்‌பேத்த தனது குரலை மாற்றி வேறு பெண் பேசுவது  செல்போன் வாயிலாக  காதல் வார்த்தை பேசுகிறார்  அ‌சின்  .  ஒரு நேரத்தில் அசின் பற்றி விஜய் வைத்திருக்கும்  நல்ல எண்ணம் தெரிய வருகிறது அதனால்  கவரப்பட்டு தான்  ஏற்கெனவே இன்‌னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் என்பதை மறந்து விஜயை காதலிக்க  தொடங்கிறார். தன்னை  செல்போனில் காதலிப்பது யார் என தொரியாமல் விஜய் அலைவது  நன்றாக கதையுடன்  பொறுந்தும்படி காடசி நன்றாக அமைக்கப்பட்டு உள்ளது . வடிவேலின் நகைச்சுவை காட்சிகள்  சிரிப்பு மூட்டுகின்றன.

கடைசி வரை தன் உண்மையான காதலி யார் என தெரியாத வகையில் கதை அழகாக செல்கிறது.  தன் மனைவியின் டைரியை படித்து விட்டு விஜய்   உண்மை தெரிந்து  ஆயிரம் வசனங்கள்பேசி  கண்ணீர்  விட  வைக்க வேண்டிய காடசியாக  அமைக்காமல்  கை மேல் கை வைத்து   பின் தோள் சாயும் காடசி ஒரு அழகிய கவிதை மனதை பிழிகிறது.ரொம்ப நாளைக்கு பின் ஒரு அழகிய காதல் காட்சி பார்த்த திருப்தி . பல ஆண்டுகளுக்கு முன்  ”ஒரு தலை ராகம்: படம் பார்த்த போது ஏற்பட்ட ஒரு திருப்தி அந்த காட்சியை பார்க்கும் போது ஏற்பட்டது.

இயக்குநர் சித்திக் அழகாக கதை  சொல்லி  இயக்கி உள்ளார். விஜய்  அடிபடுவதை பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார்கள்.  உங்கள் தலைவர் ஒரு நல்ல படத்தில்  நடித்து உள்ளார் என்பதில் நீங்கள் மகி்ழ்ச்சி அடையலாம். உங்களுக்காக   பல படங்கள் நடித்தாலும் எல்லாரும் பாராட்டும்படி அவரை சில படங்களிலாவது நடிக்க விடுங்கள்.

‌தெலுங்கு பட  மறுபதிப்பில் நடித்தால் தெலுங்கு நடிகர் மாதிரி  தெரிவார் விஜய் . இந்த படம் மலையாள  மளுபதிப்பு என்பதால் சில காட்சிகளில மலையாள நடிகர் போல்  அதும்   நடுத்தர வயது மனிதராக வரும் பொழுது்  அந்த விக்கில்  மலையாள நடிகர் போல் காட்சி அளிக்கிறார. தமிழ் படத்தில்  தமிழ் நடிகனாய்  தன்னை உடைகளில் காண்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் விஜய்

விஜய்   நல்ல படங்களில் நடிப்பதை தொடருங்கள்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s