திமுகவும் காங்கிரசும்   கூட்டணி நாடகம் நடத்தி நம்மை முட்டாள் ஆக்க பார்க்கின்றார்கள்.  வழக்கப்படி  டில்லியில் இருந்து   முகர்ஜி வந்து முடித்து இதையும் வைப்பார்.  கடைசியில்  உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்   என பேசி 61 தொகுதியில் முடித்தாலும் முடிப்பார்கள்.

இதில்  பாமக நண்பர் ஒருவர் பாமகவுக்கு  கொடுத்த 31 தொகுதிகளில் 5 தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்கு தயாராக இருப்பதாகவும்  எப்படியாவது காங்கிரசை  தங்களது கூட்டணியில் தக்க வைத்து கொள்ள வேண்டும் என் பாமக தலைவர் விரும்புவதாகவும் சொன்னார். இந்த செய்தி எதாவது ஊடகத்தில் வந்ததா இல்லை அவரது ஊகத்தில் சொன்னதா என தெரியவில்லை.

திமுக   பெரிசா ஊதார் விட்டாலும்,  காங்கிரஸ் இல்லாவிட்டால் அதிமுக தேமுதிக கூட்டணியின் போட்டியை சமாளிக்க  இயலாது என  அடிவயிற்றில் சின்ன கிலி ஏற்படாமல் இருக்காது.

அதைப் போல் காங்கிரசுக்கும் தனித்து நின்றால் பீகார் போல்  3 அல்லது 4  தொகுதி கூட வெற்றி  பெற முடியாது என தெரியும்.  காங்கிரசில் உள்ள திமுக ஜால்ராக்களான பீட்டர் அல்போன்ஸ்   போன்றவர்கள் எப்படியும்  திமுக -காங் கூட்டணியை  உடைக்காமல் பார்த்து கொள்வார்கள்.

இந்த கூட்டணி பிரிந்தால்  திமுகவை விட காங்கிரசுக்கு தான் பெரு்த்த இழப்பு. மத்தியில் காங்கிரஸ ஆட்சி பெரும்பான்மை இழக்கும் அபாயம் எழும்.  சமாஜ் வாடி கட்சி   பகஜன் கட்சி  அதிமுக  இவர்களின் ஆதரவை பெற்று ஆட்சி தொடர்வது   மண்குதிரையை  நம்பி  ஆற்றில்  இறங்குவது போலாகும்

மேலும் தேர்தலுக்கு பின்னால் உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என காதை பிடித்து தோப்பு கரணம் போட திமுகவுக்கும் காங்கிரசுக்கும்  நேரலாம்.

காங்கிரசு  பெறும்  அதிகமான  தொகுதிகள் அனைத்தும் அதிமுகவுக்கு சாதமாக இருக்கும் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  அதிமுக  வெற்றி பெற்ற தொகுதிகளில்  பெரும் விழுக்காடு காங்கிரஸ் போட்டி போட்ட தொகுதிகள்தான்.

இதெல்லாம்  இருக்கட்டும்  காங்கிரசு வேறு வழியில்லாமல்  தனித்து  நிற்க நேர்ந்தால்  நாம் என்ன செய்ய வேண்டும்  ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெற விடாமல்  செய்ய வேண்டும்.     தமிழர்களுக்கு எதிராக இது காறும் காங்கிரஸ் தலைமை எடுத்த பின் வரும் நடவடிக்கைக்கு இது தான் அகிம்ச வழியில் தக்க பதிலாக இருக்கும்.

ஈழத்தில் நமது இனத்தை அழிக்க பெரு உதவி செய்தது.

தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறியது

கட்சத்தீவை   திரும்ப  இந்திய பகுதியாய்  அறிவிக்க தவறியது

நாம் மட்டும்  காங்கிரசுக்கு வாக்களிக்காமல் இருந்தால் போதாது . நம்மை சார்நதவர்களையும் காங்கிரசுக்கு  எதிராக வாக்களிக்க செய்ய  வேண்டும். காங்கிரஸ்  ஒரு இடம்  கூட வெற்றி பெற வில்லை எனும் செய்தி  மே 13 ல்  நமது தமிழ்தாயின்  காதில்  தேனாக  பாய  வேண்டும். அந்த  செய்தி நாளை  மலரும்  ஈழத்துக்க முதல் படியாக இருக்கும்

காங்கிரஸ  திமுக கூட்டணியில் இருந்தாலும்  காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s